ரஜினி சொன்ன கொரானா தகவல் தவறா.? வீடியோவை நீக்கியது ட்விட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தற்போது இந்தியாவிலும் நுழைந்து உயிர்களை தாக்கி வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்பதால் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்தியாவில் இதனை தடுக்கும் முயற்சியாக நாளை ஞாயிறு மார்ச் 22ஆம் தேதியன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடிப்பது அவசியம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (மார்ச் 21) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், “கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா தற்போது இரண்டாவது நிலையில் உள்ளது. அது மூன்றாவது நிலைக்கு போய்விடக்கூடாது.

பொதுமக்கள் வெளியில் நடமாடும் இடங்களில் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை வைரஸ் பரவாமல் இருந்தாலே மூன்றாவது நிலைக்கு போவதை நாம் தடுத்துவிடலாம்.

இதனைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுமென்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோன்ற வேண்டுகோளை இத்தாலி அரசும் விடுத்தது. ஆனால் இத்தாலி மக்கள் அதை பொருட்படுத்தாமல் ஊதாசீனப்படுத்தியதால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் அந்த நிலைமை வந்துவிடக்கூடாது.” என்று ரஜினிகாந்த் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், ரஜினி பேசிய வீடியோ ட்விட்டரின் விதிமுறைகளை மீறியுள்ளதாக கூறி ட்விட்டர் நிர்வாகம் வீடியோவை நீக்கியுள்ளது.

ஆனால் என்ன விதிமீறல் இருக்கிறது என்பது பற்றி ட்விட்டர் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

ரஜினி கூறிய கொரோனா தகவல்கள் (12 மணிமுதல் 14 மணி வரை வைரஸ்) உறுதியானவை என கருத முடியாததால் இந்த நடவடிக்கையை ட்விட்டர் நிறுவனம் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ட்விட்டர் நிறுவனமே விளக்கம் வேண்டும் என ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் Shame on Twitter என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Twitter removes Rajinis Corona video for violating rules

கொரோனாவை வெல்ல மார்ச் 22ல் ஓவிய போட்டி நடத்தும் வசந்தபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாளை மார்ச் 22 சுய ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் வசந்தபாலன் குழந்தைகளுக்காக ஓவிய போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வசந்தபாலன் கூறியிருப்பதாவது…

“நண்பர்களே ! தனிமைப்படுத்துதல் தேவை தான்.

ஆனால் பாவம் அது குழந்தைகளுக்கு பெரும் சிறையாக இருக்கிறது.

எவ்வளவு நேரம் தான் படி படி என்ற வன்முறையை குழந்தைகள் மீது பிரயோகிப்பது.

இதில் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நம்மை நாமே வீடடங்கி மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள். வரலாற்றுத்தருணம்.

அன்று புத்தகம் வாசித்தல், டிவி பார்த்தல், செல்போன் நோண்டுதல்,கேரம்போர்டு மற்றும் செஸ் விளையாடுதல் தவிர வேறு என்ன செய்யலாம் ?..

அதனால் அன்று 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு ஓவியப்போட்டி அறிவிக்கலாம் என்று தோன்றியது. வீட்டிலிருந்தபடியே A4 வெள்ளைப்பேப்பரில் வண்ணப்பென்சில் அல்லது சாதாரண பென்சிலில் வரைந்து அலைபேசியில் புகைப்படம் எடுத்து என் மின்அஞ்சல் முகவரிக்கு (vasantabalan@gmail.com) அனுப்பி வைக்கலாம்.

காலக்கெடு : 22ம்தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி காலை 10 மணி வரை வரும் மெயில்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும்.

ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகளின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விபரம் இணைக்கப்படுதல் அவசியம்.

பெற்றோர்கள் வரைந்து தருவதை தவிர்க்க வேண்டும். முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு. ஒருவரே எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வரைந்து அனுப்பி வைக்கலாம்.

“தலைப்பு : கொரோனோவை வெல்வோம்”

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vasantha Balan Conducting Art Competition on Corono Awareness

BREAKING கொரானோ விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ரஜினி (உள்ளே)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொலைக்கார பாவி… இந்த சொல் கொரோனா வைரசுக்கு மிகச்சரியாக பொருந்தும். கடந்த 1 மாத காலமாக உலகில் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

சீனாவில் தொடங்கி அங்கு பல உயிர்களை கொன்று இத்தாலி நாட்டுக்கு சென்றது.

அந்த நாட்டில் விடுமுறை மற்றும் ஊரடங்கு உத்தரவு விடுத்தும் மக்கள் எச்சரிக்கையாக இல்லாமல் வாழ்ந்தனர்.
இதனால் இந்த கொரோனா வைரஸ் பல உயிர்களை கொன்றுவிட்டது.

இந்த நிலையில் தான் நாளை மார்ச் 22ஆம் தேதி கொரோனாவை தடுக்க காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வைரசானது கிட்டதட்ட 12 முதல் 14 வரை மணி நேரம் வரை தான் உயிரோடு இருக்கும். அப்போது மனிதர்களை வெளியே செல்லாமல் இருந்தால் மற்ற ஒருவருக்கு தொத்திக் கொள்ளாமல் இருக்கும்.

மேலும் நாளை மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து கைத்தட்டி இந்த கொரானாவை எதிர்த்து போராடும் மக்களுக்கு தங்களை பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மோடி.

தற்போது இது தொடர்பான கொரானா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Super Star Rajinis Corona awareness video released

இதோ அந்த வீடியோ….

 

BIG NEWS கொரோனாவை கொல்ல எந்த சமரசமும் செய்யாதீர்.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது.

இந்த நோய் உலகமெங்கும் பரவ தொடங்கி 1 மாதம் ஆகிவிட்டது.

சைனாவில் ஆரம்பமான இந்த வைரஸ் தற்போது கட்டுக்குள் வந்துவிட்டாலும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பல உயிர்களை வாங்கியுள்ளது.

தற்போது இந்தியளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், புதிய விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் “கொரோனா பரவுதலில் 4வது வாரத்தில் இருக்கிறது இந்தியா. இந்த வாரத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவும் என்பதை பல நாடுகளில் பார்த்து வருகிறோம்.

ஆகையால் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயம் சோஷியல் டிஸ்டன்சிங். விலகி இருத்தல். மற்றவர்களிடத்தில் இருந்து நாம் விலகி இருத்தல் என்பதுதான், தற்போதைக்குக் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஒரே வழி. எந்த சமரசமும் இல்லாமல் இதை நாம் பின்பற்ற வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

Ulaga Nayagan Kamals Corono awareness video released

முழு வீடியோ இதோ…

மக்கள் ஊரடங்கு உத்தரவு..; ரஜினி விஜய் அஜித்துக்கு கமல் அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாடுகளுக்கே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது ‘கொரோனா’.

இந்த வைரசை கொல்ல மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றாலும் மருத்துவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் ஞாயிறு மார்ச் 22ம் தேதி, நாடு முழுவதும், ‘மக்கள் ஊரடங்கு’ நடத்த, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்டுள்ளார்

இது தொடர்பாக கமல்ஹாசன் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸை பார்ட்டி வைத்து பரப்பிய பாடகி கனிகா

பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என எனது ரசிகர்கள், நண்பர்கள், மக்களை கேட்டு கொள்கிறேன். மக்கள் ஊரடங்கு என்ற பிரதமரின் அழைப்பிற்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன்.

தற்போதைய மிகப்பெரிய அசாதாரண சூழ்நிலையில், நாம், அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. நாம் ஒற்றுமையாக, வீட்டிற்குள் இருக்கும் போது, பாதுகாப்பாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த டுவிட்டரில், நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம்,தனுஷ், சிம்பு, விஜயசேதுபதி, இசையமைப்பாளர்கள் இளையராஜா, அனிருத், ஜிவிபிரகாஷ், ஜிப்ரான் ஆகியோரையும் கமல் டேக் செய்துள்ளார்.

அதாவது அவர்களும் இதில் இணைய வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாவ்.. ரஜினி வயதை கேட்டு ஷாக்கான பியர் கிரில்ஸ்… வைரல் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Into The Wild With BearGrylls என்ற புதிய நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

இதன் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தது.

மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

இந்த நிகழ்ச்சியில் மலையேறுவது, ஆற்றைக் கடப்பது என பல்வேறு செயல்களை பியர் கிரில்ஸுடன் இணைந்து ரஜினிகாந்த் செய்திருப்பார்.

இந்த நிலையில் நாளை தற்போது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தலைவர் 170 படத்தை இயக்க தன் வெறியருக்கு வாய்ப்பளிக்கும் ரஜினி..?

நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி ரஜினியிடம் கேட்கிறார்.

“தண்ணீர் பிரச்னையே பெரும் பிரச்னையாக இருக்கிறது. இந்தியாவில் இது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது” என்றும் கூறினார்.

நான் ஒரு கண்டக்டக்ராக இருந்தேன் என பியர் கிரில்ஸிடம் ரஜினி கூற அதிர்ச்சி அடைகிறார் பியர். அதன் பின்னர் எப்படி நடிகராக மாறினீர்கள் என பியர் கேட்கிறார்.

சினிமா வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் எப்படி பார்க்கிறீர்கள்… என பியர் கேட்க “நான் நடிகனாக இருக்கும்போது ரஜினியாகவும், அதன் பின்னர் சிவாஜி ராவ்வாகவும் வாழ்கிறேன்.

நீங்கள் ரஜினி என்று கூறினால்தான் நான் பிரபலம் என்பதே நினைவுக்கு வரும் ”என ரஜினி கூறுகிறார்.

இறுதியாக ரஜினியின் ஷூ லேசை தனது கையால் சரி செய்து விடுகிறார் பியர்.

பின்னர் உங்களது வயது என்ன என்று ரஜினியிடம் கேட்கிறார். எனக்கு 70 வயது என்கிறார் ரஜினி.

இதைக்கேட்டு வாயை பிளந்த பியர் நீங்கள் உண்மையில் அனைவருக்குமான முன்னுதாரணம் என்று கூறுகிறார்.

இந்நிகழ்ச்சி மார்ச் 23-ம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows