வாணி ராணி-அரண்மனைக்கிளி சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா

வாணி ராணி-அரண்மனைக்கிளி சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

navya samyகொரோனா வைரஸ் தொற்றால் பொது முடக்கம் விடப்பட்டு ஒட்டு மொத்த உலகமே முடங்கியுள்ளது.

தமிழகத்திலும் வைரஸ் பாதிப்பு அதிகமாகவுள்ளது.

இதனால் மக்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

டிவி சூட்டிங்குகள் மட்டும் சில தளர்வுகளுடன் நடத்தப்பட்டது. ஆனால் சினிமா படப்பிடிப்புகள் நடத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் டிவி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இது குறித்து இவர் கூறியுள்ளதாவது..

நான் இந்த துறையை நம்பித்தான் இருக்கிறேன். அதனால் என்னால் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை என்று கூற முடியாது.

நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. சில அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம்” என நவ்யா சாமி தெரிவித்துள்ளார்.

நெய்வேலி NLC பாய்லர் வெடித்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; முதல்வர் நிதியுதவி

நெய்வேலி NLC பாய்லர் வெடித்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; முதல்வர் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edappadi palanisamyகடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சியில், இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை பெரும் விபத்து ஏற்பட்டது.

5-வது அலகில் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 2வது சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 22 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து கடலூர், திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களில் பத்மநாபன், அருண், வெங்கடேசன், நாகராஜன், சிலம்பரசன் உள்ளிட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் காயமடைந்த 17 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கவும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைந்ததாகவம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், விபத்தில் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் 7 பேர் பலியான சம்பவத்தில் அதிரடி நடவடிக்கையாக பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஸ்டாலினுடன் இணைந்து கொண்ட ரஜினிக்கு நன்றி..; உதயநிதி கிண்டல்.?

ஸ்டாலினுடன் இணைந்து கொண்ட ரஜினிக்கு நன்றி..; உதயநிதி கிண்டல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

stalin rajiniசாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடை திறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சிறைக்கு அழைத்து சென்று கொடூரமாக போலீசார் தாக்கினர்.

இந்த தாக்குதலால் இருவரும் உயிரிழந்தனர்.

மதுரை ஐகோர்ட் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த்..

“தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது” என்று கூறி #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் பதிவிட்டார்.

இதனையடுத்து ரஜினியின் ட்வீட்டை குறிப்பிட்டு நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

“தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் கருத்தை போல பலர் இதுவரை சொல்லி வந்துள்ளனர். ஆனால் அவர்களை பற்றி உதயநிதி எதையும் சொல்லவில்லை.

ஆனால் ஸ்டாலினுடன் தன்னை இணைத்துக் கொண்டதாக ரஜினியை கிண்டல் செய்யும் உதயநிதி இப்படி ட்வீட் செய்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனுஷின் பிறந்தநாளில் ரகிட ரகிட பாடல்…; ஜகமே தந்திரம் அப்டேட்..

தனுஷின் பிறந்தநாளில் ரகிட ரகிட பாடல்…; ஜகமே தந்திரம் அப்டேட்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rakida rakidaபேட்ட படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.

இப்படத்தில் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

கடந்த மே 1-ம் தேதி ஜகமே தந்திரம் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் செய்யப்படவில்லை.

இந்நிலையில் தனுஷின் பிறந்தநாள் அன்று ஜூலை 28-ம் தேதி ரகிட ரகிட என்ற பாடல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

விஜய் படங்களை பார்த்ததே இல்லை. அவரின் வளர்ச்சி தெரியாது; நெப்போலியன்

விஜய் படங்களை பார்த்ததே இல்லை. அவரின் வளர்ச்சி தெரியாது; நெப்போலியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay napoleonவில்லன், ஹீரோ என பல படங்களில் நடித்தவர் நடிகர் நெப்போலியன்.

மேலும் அரசியலில் நுழைந்து சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் இவர்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அவர் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இவரின் புதிய படமான டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் படம் கனடாவில் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. மற்ற நாடுகளிலும் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து வீடியோ பேட்டியளித்துள்ளார் நெப்போலியன்.

அப்போது நெப்போலியனிடம் போக்கிரி படத்தில் விஜய்க்கும் உங்களுக்குமிடையே என்ன பிரச்சினை நடந்தது என்று கேள்வி கேட்டுள்ளனர்.

14 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம். அதை நான் சொல்ல விரும்பவில்லை.

பிரபுதேவா கேட்டு கொண்டதால் அந்த படத்தில் நடித்தேன்.

ஷாட் முடிந்து வெளியே வரும் போது அந்த சம்பவம் நடைபெற்றது. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது.

அப்படி யாரும் என்னிடம் பேசியதில்லை. அதிலிருந்து அவரிடம் பேசுவதில்லை. அதன் பின்னர் விஜய் படங்களை நான் பார்த்ததே இல்லை. சினிமாவில் அவருடைய வளர்ச்சி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் போலீஸ் ரேவதியின் துணிச்சலுக்கு ஜிவி. பிரகாஷ் பாராட்டு

சாத்தான்குளம் போலீஸ் ரேவதியின் துணிச்சலுக்கு ஜிவி. பிரகாஷ் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashசாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை மகன் இருவரும் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

எனவே மதுரை ஐகோர்ட் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்துவருகிறது.

உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது.

அதன் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம். டிஜிபியின் உத்தரவிற்காக காத்திருக்காமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை கையிலெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.

“சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார்.

தலைமைக் காவலர் ரேவதி சாட்சியம் அளிக்கும் போது மிகுந்த பயத்திலேயே இருந்துள்ளார்.

காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் விசாரணையை வீடியோ எடுத்தும் வாக்குமூலம் கொடுத்த ரேவதியை மிரட்டும் தொனியிலும் ஈடுபட்டனர்.

எனவே ரேவதி கடைசியில், வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

மிகவும் சிரமப்பட்டே கையெழுத்தை பெற முடிந்தது” என்று நீதித்துறை நடுவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காவலர் ரேவதிக்கு ஜிவி. பிரகாஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில், “நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலைவணங்குகிறேன். உங்களோடு தேசம் துணை நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

More Articles
Follows