Breaking: நடிகனாக என்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.. : ரஜினி

Breaking: நடிகனாக என்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tuticorin people will be happy when they see me as Actor says Rajiniதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறார்.

விமான நிலையத்திற்கு புறப்படும் முன் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடிக்கு செல்கிறேன்.

ஒரு நடிகனான என்னை பார்த்தால் தூத்துக்குடி மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நம்புகிறேன்.

திமுகவை அதிமுகவும் அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது அரசியல்.

முன்னே போகும் சிங்கம் பின்னாடி அடிக்கடி பார்க்கும். ஆனால் பின்னாடியே பார்த்துக் கொண்டிருந்தால் முன்னேற முடியாது.

பழையவற்றையே விமர்ச்சித்து பேசிக் கொண்டிருப்பது சரியல்ல.

சட்டப்பேரவையை திமுக புறக்கணித்தது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.

துப்பாக்கி துப்பாக்கிச் சூட்டுக்கு பிரதமர் மோடி ஒன்றும் சொல்லாதது பற்றி எனக்குத் தெரியாது. மீடியா பவர் இருக்கிறது. எனவே நீங்களே கேளுங்கள்” என்றார்.

Tuticorin people will be happy when they see me as Actor says Rajini

ஜெயலலிதா-ரஜினி படங்களை இயக்கிய முக்தா சீனிவாசன் மரணம்

ஜெயலலிதா-ரஜினி படங்களை இயக்கிய முக்தா சீனிவாசன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் (88) சென்னையில் காலமானார்.

முக்தா சீனீவாசன் – சில நினைவுக் குறிப்புகள்

கதை, வசனகர்த்தா, திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்ட இந்தப் பெரியவர் தீவிரமான காங்கிரஸ்காரர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மாளாபுரம் கிராமத்தில் பிறந்தவர் முக்தா சீனிவாசன். பெரும் சிரமத்திற்கிடையே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு வந்தவர். பின்னர் கலைத்துறையில் தனது கடின உழைப்பால் உயர்ந்து திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர்.

பழம் பெரும் இயக்குநர்கள் கே.ராம்னாத், வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1947 முதல் 1957ம் ஆண்டுவரையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு.

1957-ல் இவர் இயக்கம் செய்த முதல் திரைப்படம் ‘முதலாளி’ வெளி வந்தது. இந்த முதல் திரைப்படமே, ஜனாதிபதி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய அண்ணன் முக்தா வி.ராமசாமி அவர்களுடன் இணைந்து முக்தா பிலிம்ஸை துவக்கி அதன் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார். இதுவரையிலும் மொத்தம் 61 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் முக்தா சீனிவாசன். கூடவே தெலுங்கில் புகழ் பெற்ற 12 திரைப்படங்களை டப்பிங் செய்தும் வெளியிட்டிருக்கிறார்.

இவர் தயாரித்து, இயக்கிய ‘தாமரைக்குளம்’ திரைப்படத்தில்தான் ‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷ் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் தயாரித்து, இயக்கிய ‘சூரியகாந்தி’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் தந்தை பெரியார் கலந்து கொண்டது அப்போதைக்கு மிகப் பெரிய பரபரப்பு செய்தி. அந்தப் பெருமையுடன் எனதருமை கவியரசன் கண்ணதாசனின் புகழ் பெற்ற பாடலான ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ பாடலை வெளிக்கொணர்ந்த இயக்குநர் என்கிற முறையில் இவர் பெரும் பாராட்டுக்குரியவர்.

‘நடிகர் திலகம்’ சிவாஜியின் உற்ற நண்பரான இவர், ‘அந்தமான் காதலி’, ‘இமயம்’, ‘பரீட்சைக்கு நேரமாச்சு’, ‘கீழ்வானம் சிவக்கும்’ போன்ற படங்களை நடிகர் திலகத்தை நடிக்க வைத்து இயக்கினார். இதில் ‘அந்தமான் காதலியும்’, ‘இமயமும்’ நூறு நாள் ஓடிய திரைப்படங்கள்.. ‘அந்தமான் காதலி’யின் கிளைமாக்ஸ் காட்சியின் வசனங்கள் இன்னமும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ‘சூப்பர்ஸ்டார்’ அண்ணன் ரஜினியின் ‘பொல்லாதவன்’, ‘சிவப்புசூரியன்’ திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியவரும் இவரே.

இன்றளவிலும் உலகின் மிகச் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக ‘டைம்’ பத்திரிகையால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மணிரத்தினத்தின் ‘நாயகன்’ திரைப்படத்தைத் தயாரித்ததும் இவருடைய ‘முக்தா பிலிம்ஸ்’தான்..

1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இவருடைய தலைமையில்தான் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ முதல் முறையாக உருவாக்கப்பட்டது என்பது தமிழ்த் திரைப்பட உலகத்தின் வரலாறு..

துவக்கக் காலத்தில் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்து வந்த முக்தா சீனிவாசன் அவர்கள், 1963-ம் ஆண்டு முதல் கதராடை அணிந்து காங்கிரஸ்காரராக பவனி வர ஆரம்பித்தார். பெருந்தலைவர் காமராஜரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்தார். அதோடு ஜி.கே.மூப்பனாரின் பள்ளித் தோழர். அவருக்கும் சிறந்த நண்பர் இவர்தான். தற்போது காங்கிரஸ் கட்சியின் தமிழகத் துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இவருடைய இன்னுமொரு மிகப் பெரிய தகுதி.. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் கோஷ்டி சேர்க்கத் தெரியாத ஒரு தலைவர் உண்டென்றால் அது இவராகத்தான் இருக்க முடியும்.. அப்பேர்ப்பட்டவர் நம் ஆந்தை ரிப்போர்ட்டர் வாசகராக, ரசிகராக இருந்தார் என்பது பெருமைக்குரியது..

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்

Muktha Srinivasan Passed away

நாளை தூத்துக்குடி பயணம்; மக்கள் களத்தில் ரஜினி.!

நாளை தூத்துக்குடி பயணம்; மக்கள் களத்தில் ரஜினி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நாளை தூத்துக்குடி செல்கிறார்.

அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார்.

சென்னையிலிருந்து நாளை காலை 8 மணிக்கு தூத்துக்குடிக்கு புறப்படுகிறார் ரஜினிகாந்த்.

 

Tomorrow 30th May Rajinikanth visiting Tuticorin Sterlite Protestors

பட்டைய கிளப்பும் காலா விநியோகம்; ஏரியா வாரியாக முழுத்தகவல்கள்

பட்டைய கிளப்பும் காலா விநியோகம்; ஏரியா வாரியாக முழுத்தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajinikanths Kaala movie trade updatesரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ ஜூன் 7-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது.

‘காலா’ பட விநியோக உரிமையை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் கைபற்றியிருப்பது நமக்கு தெரிந்த விஷயமாகும்.

‘காலா’ வெளியாக இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் ‘காலா’வின் தமிழ்நாட்டு ஏரியா வாரியான வியாபார விஷயங்கள் சூடு பிடித்துள்ளது.

தமிழகத்தில் ‘காலா’ திரைப்படத்தை யார் யார் வெளியிடுகிறார்கள் என்பது குறித்து ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

சென்னை சிட்டியில் ‘காலா’வை ரிலீஸ் செய்யும் உரிமையை பிரபல ‘SPI CINEMAS’ நிறுவனம் வாங்கியுள்ளது.

‘காலா’வின் சேலம் ஏரியா விநியோக உரிமையை ‘7G’ சிவா வாங்கியுள்ளார்.

மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் அன்பு செழியனின் ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ வெளியிடுகிறது.

கோயம்புத்தூர் ஏரியாவில் ‘காலா’வை திருப்பூர் சுப்பிரணியன் வெளியிட உள்ளார்.

இந்த நான்கு ஏரியாக்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தினர் மற்ற ஏரியா குறித்த விவரங்களையும் மிக விரைவில் வெளியிடுவார்கள் என ஏதிர்பார்க்கப்படுகிறது.

Super Star Rajinikanths Kaala movie trade updates

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் காலா பட கலைஞர்

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் காலா பட கலைஞர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sakshi agarwalசத்யஜோதி தயாரிப்பில் அஜித்-சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் விஸ்வாசம்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்ததை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் மும்பையில் தொடங்கவுள்ளது.

இமான் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு முதலானோர் நடித்து வருகின்றனர்.

தற்போது காலா படத்தில் நடித்துள்ள சாக்‌ஷி அகர்வால் என்பவரும் விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளாராம்.

Kaala girl Sakshi Agarwal joins with Ajith in Viswasam

Exclusive: காலா ரீலீஸ் வேண்டாம்; தனுஷுக்கு ரஜினி ரசிகர்களே கோரிக்கை.!

Exclusive: காலா ரீலீஸ் வேண்டாம்; தனுஷுக்கு ரஜினி ரசிகர்களே கோரிக்கை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We dont want Kaala release says Rajinikanth fansஇந்த தலைப்பை பார்த்தால் நிச்சயம் ரஜினி ரசிகர்கள் கோவப்படுவார்கள் எனத் தெரியும். ஆனால் இந்த செய்தி உண்மைத்தான் தெரியுமா..?

உண்மையைத் தெரிந்து கொள்ள இன்னும் படியுங்கள்.

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வருகிற ஜீன் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் இந்த படம் வெளிவருவதால், தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கேரளாவில் தமிழ் மொழியிலே வெளியாகவுள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

கர்நாடகாவில் வெளியிட அங்குள்ள அமைப்புகள் சில தடை விதித்துள்ளன. எனவே அங்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடிக்கும் எனத் தெரிகிறது.

மற்றபடி ஹிந்தியில் பிரச்சினையில்லை. மேலும் பல ஹிந்தி நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் அங்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அப்படியென்றால் எங்குதான் பிரச்சினை என்கிறீர்களா?

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்தான் காலா படத்தை திரையிட வேண்டாம் என ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ஏனென்றால்.. லிங்கா படத்திற்கு பிறகு ஆந்திராவில் எந்த ரஜினி படத்திற்கும் விழா அங்கு எடுக்கப்படவில்லை.

காலா இசை தமிழகத்தில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. ஆனால் ஆந்திராவில் பெயருக்கு கூட விழா இல்லை.
ஆந்திராவில் காலா Pre-Release நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தமிழத்தில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு விவகாரத்தால் அந்த நிகழ்ச்சி வேண்டாம் என ரஜினி மறுத்துவிட்டாராம்.

கபாலி படத்திற்கு மலேசியா மற்றும் இந்தியாவே வியக்கும் அளவுக்கு விளம்பர யுக்திகளை கையாண்டார் கலைப்புலி தானு.

விமானம் முதல் சாக்லேட் வரை அனைத்திலும் கபாலி மயமாக இருந்தது. கபாலி படம் பார்க்கவில்லை என்றால் அது பெரிய குற்றமாக பார்க்கப்படும் என்ற ரேஞ்சுக்கு பெரிய விஷயமாக 2016ஆம் ஆண்டில் பார்க்கப்பட்டது

ஆனால் காலா படத்தை தனுஷ் எந்த விதத்திலும் சரியாக புரோமோட் செய்யவில்லை.

இப்படி தொடர்ந்து ஆந்திராவை புறக்கணித்து வருகிறார்.

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதற்காக தமிழர்கள் ஐபிஎல் பைனல் மேட்ச்சை கொண்டாடவில்லையா..?

அப்படியிருக்கையில் எதற்காக ஆந்திராவில் எந்த விழாவும் எடுக்கவில்லை.

இப்படி செய்வதால் பேசாமல் படத்தை இங்கு ரிலீஸ் செய்ய வேண்டாம் என ஆவேசத்துடன் கூறி வருகின்றனர்.

இந்த பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் தனுஷ் இதை கவனத்தில் கொண்டு வரும் நாட்களில் சரி செய்வாரா? என்பதை பார்ப்போம்.

We dont want Kaala release says Rajinikanth fans

More Articles
Follows