தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகின் மிக கொடிய நோயாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது.
அதிலும் உலக நாடுகளில் இதன் பாதிப்பில் அமெரிக்காவில் முதலிடத்தில் உள்ளது.
ஒரே நாளில் மட்டும் 1,255 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
எனவே கொரோனா சிகிச்சைகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார்.
இதனையடுத்து மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது.
இதனிடையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக ஹைட்ராக்ஸிகுளோராகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்தது.
இதனால் மருந்துகளை பெறுவதில் அமெரிக்காவுக்கு பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடியிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தாங்கள் ஆர்டர் செய்த ஹைட்ராகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் மருந்துக்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் அமெரிக்கா ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பும் என்று நம்புகிறேன்.
அவ்வாறு செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம்’ என்று மறைமுக மிரட்டல் விடுப்பது போல தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது
உதவுவது நல்லது தான். அதே சமயம் நம் தேவைக்கு மருந்தை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அதாவது தனக்கு மிஞ்சியது தான் தானம் தர்மம் என்ற பாணியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன் அனுபவத்தில் இப்படி ஒரு மிரட்டும் அரசு குறித்து கேள்விப்பட்டதில்லை என அமெரிக்க அதிபரின் பேச்சு குறித்து சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.