ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா இல்லனா நயன்தாரா; தனுஷ் ரியாக்ஷன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலிக்கு பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை தனுஷ் தயாரிப்பதால், வுண்டர்பார் பிலிம்ஸின் ராசி நாயகி அமலா பால் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் அது தேவையற்ற சர்ச்சையை உருவாக்கும் என்பதால் முன்னணி நாயகிகள் பக்கம் ரஜினியின் பார்வையை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தென்னிந்தியாவில் நயன்தாராவுக்கு இருக்கும் வரவேற்பு நாம் அறிந்ததே. ஒரு வேளை இவர் நடிக்கலாம்.

அல்லது ரஜினியுடன் ஜோடி சேர பல வருடங்களாக காத்திருக்கும் த்ரிஷா நடிக்கக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.

சூர்யாவின் ‘சிங்கம் 3’ பட டீசர் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆறு என்று பெயரிடப்பட்ட படத்தில் சூர்யா-ஹரி கூட்டணி இணைந்தது.

இவர்களின் வெற்றிக் கூட்டணி தற்போது 5வது படத்தில் பணி புரிந்து வருகின்றது.

சிங்கம் படத்தின் 3வது பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில், இதன் டீசரை விரைவில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் செப்டம்பர் 20ஆம் தேதி டீசரை வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், நாசர், ராதாரவி, ராதிகா, ரோபோ சங்கர், சூரி, சாம்ஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்களின் சாதனையை முறியடித்த விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்கள் முன், அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி மங்காத்தா படத்தின் 5வது ஆண்டை திருவிழா போல அஜித் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

அதிலும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் சுமார் 400 அடிக்கு நீநீநீ…..ளமான போஸ்டர் அடித்து கலக்கியிருந்தனர்.

தற்போது இந்த சாதனையை மிஞ்சும் வகையில், 450 அடிக்கு விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.

அதுவும் விஜய் 60 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வரவேற்கும் வகையில் இந்த போஸ்டரை அச்சடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் விஜய் இதுவரை நடித்துள்ள 59 படங்களின் புகைப்படங்களை அச்சடித்துள்ளனர்.

தளபதி 60 படத் தலைப்பு பற்றிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படம் முடிவடையும் முன்பே விஜய்யின் 60 வது படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் பற்றிய அறிவிப்பு வந்தது.

அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் வந்தது.

ஆனால் இதுவரை படத்தலைப்பு வெளியாகவில்லை.

எங்க வீட்டு பிள்ளை உள்ளிட்ட தலைப்புகள் நிச்சயம் இருக்காது என படத் தயாரிப்பு நிறுவனமே அறிவித்துவிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பை இன்று மாலை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் தற்போதே விஜய் ரசிகர்கள் #Thalapathy60FirstLook என்ற டாக் கிரியேட் செய்து ட்ரெண்டாக்க காத்திருக்கின்றனர்.

அஜித்துக்காக செல்வா வெயிட்டிங்; போட்டுக் கொடுத்த விஜய்யின் நண்பர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கெனன்யா பிலிம்ஸ் செல்வா.

இவர் தனது 3வது படைப்பாக தினேஷ், நந்திதா, ஸ்ரீமன், பாலசரவணன் நடிக்கும் உள்குத்து படத்தை தயாரித்து இருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னை, பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இதில் பிரபல நடிகரும் விஜய்யின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீமன் பேசும்போது கூறியதாவது…

முட்டம் பகுதியில் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் 38 நாட்களில் நடத்தி முடித்துவிட்டோம்.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு நாள் கூட சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த்தே இல்லை.

அஜித்தின் தீவிர ரசிகர் செல்வா. அவரை வைத்து ஒரு படத்தையாவது தயாரிக்க வேண்டும் என்பதற்காக சினிமாவுக்கு வந்தார். அதுவே அவரது ஆசை” என தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்திக்கு விஜய் தரும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், அபர்ணா வினோத், ஆர் கே சுரேஷ், டேனியல் பாலாஜி, ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை தற்போது உறுதி செய்து விட்டார்களாம்.

இந்த தலைப்பு, அழகிய தமிழ் பெயரை கொண்டுள்ளதாக இருக்கும் என்பதை முன்பே பார்த்தோம்.

எனவே, விநாயகர் சதுர்த்தி அன்று இப்படத்தின் தலைப்பை அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

More Articles
Follows