குற்றப்பயிற்சி-க்காக த்ரிஷா உடன் இணையும் சுரபி-சூப்பர் சுப்ராயன்

குற்றப்பயிற்சி-க்காக த்ரிஷா உடன் இணையும் சுரபி-சூப்பர் சுப்ராயன்

Trisha new movie Kutra Payirchi news updatesசமீபகாலமாக அனுஷ்கா, நயன்தாரா ஆகியோர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளில் நடித்து வருகின்றனர்.

தற்போது நடிகை த்ரிஷாவும் இவர்கள் பாதையில் பயணித்து வருகிறார்.

இதன் அடிப்படையில் இவர் அண்மையில் ஒப்புக் கொண்ட படம் ‘குற்றப்பயிற்சி’.

இயக்குனர் பாலாவுடன் ‘தாரை தப்பட்டை’ படத்தில் பணிபுரிந்த வர்ணிக் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் கதை 1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதில் த்ரிஷா பெண் துப்பறிவாளர் வேடம் ஏற்று நடிக்க, சுரபி, சூப்பர் சுப்ராயன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை ‘ஸ்ரீகுருஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பாக ஜி.விவேகானந்தன் தயாரிக்கிறார்.

ஒரு உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதையாம் ‘குற்றப்பயிற்சி’ தமிழ் சினிமாவில் படத்தின் முதன்மை கதாபாத்திரம் பெண் துப்பறிவாளராக வருவது இதுதான் முதல் முறை என்கின்றனர் படக்குழுவினர்.

இந்த படத்திற்கு ரதன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை பாபு குமார் கவனிக்கிறார். படத்தொகுப்பை மதனும், கலை இயக்கத்தை பாலசந்தரும் கவனிக்கிறார்கள்.

Trisha new movie Kutra Payirchi news updates

kutra payirchi

கல்லூரி மாணவர்களின் போதை வாழ்வியலை சொல்லும் துலாம்

கல்லூரி மாணவர்களின் போதை வாழ்வியலை சொல்லும் துலாம்

Drug Addict Students based movie Thulam updatesவி மூவிஸ்’ சார்பில் விஜய் விக்காஷ் தயாரிப்பில் ராஜ நாகஜோதி இயக்கியிருக்கும் படம் ‘துலாம்’.

இப்படம் போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் வாழ்வியலையும், மனச்சாட்சி உள்ள மனிதர்கள் இன்னும் நிறையபேர் உள்ளார்கள் என்பதையும் விவரிக்கும் படம் தான் இந்த துலாம் .

இப்படத்தில் நாயகனாக புதுமுகம் நிவாத் நடிக்க நாயகியாக டெப்லினா ஜாக்சி நடிக்கிறார்கள் . இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பொன்னம்பலம், மனோபாலா, பாலாசிங் , மோனா பிந்ரே மற்றும் ‘ஈரமான ரோஜாவே’ புகழ் சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு முழுவதும் சென்னை, பாண்டிச்சேரி மற்றும் ஊட்டியில் நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. இதில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் விஜய் விக்காஷ் நடிக்கிறார். கானா பாலா ஒரு பாடலை எழுதி பாடி நடித்தும் உள்ளார். இந்த படத்தில் தான் நா. முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு இசை அலைக்ஸ் பிரேம் நாத், ஒளிப்பதிவு கொளஞ்சி குமார், எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.

பேனர்: வி மூவிஸ்
தயாரிப்பு: விஜய் விக்காஷ்
இயக்கம் : ராஜ நாகஜோதி
இசை : அலக்ஸ் பிரேம் நாத்
ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார்
எடிட்டிங் : சுரேஷ் அர்ஷ்
நடனம் : ஷங்கர்
சண்டைப்பயிற்சி: ரமேஷ்
பாடல்கள் : நா.முத்துக்குமார், கானா பாலா , நதி விஜயகுமார்.
கலை : ஜெய வர்மா
ஸ்டில்ஸ்: ஷிவா
டிசைன்ஸ்: சசி & சசி
மேனேஜர்: குணசேகரன் ,தண்டபாணி

ரசிகர்களை ஒன்றிணைக்க விஜய்யின் புதிய இணையத்தளம்

ரசிகர்களை ஒன்றிணைக்க விஜய்யின் புதிய இணையத்தளம்

Vijay launched new website to unite his fansதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர் விஜய்.

இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உலகளாவிய ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் நடிகர் விஜய் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே தனது இயக்கத்திற்கு என தனி கொடியை அறிமுகம் செய்து அரசியல் ஆசையை வெளிப்படுத்தியவர் விஜய்.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு http://www.vijaymakkaliyyakam.in என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இது கடந்தாண்டு 2017ல் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு..

தளபதி மக்கள் இயக்கம் சார்பில் ஏரளமான நலத்திட்ட பணிகளை மாவட்ட வாரியாக தளபதி ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிகேற்ப தளபதி மக்கள் இயக்கமும் தொழில்நுட்ப ரீதியில் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.

உலகளாவவிய ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேஷன் (VMI App.) அடுத்து இரண்டாவது படியாக தளபதி மக்கள் இயக்கத்திற்க்கான இணையதள சேவை தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் வேண்டுக்கோளுக்கு இணங்க ஒவ்வொரு மாவட்டத்தில் மற்றும் உலகமெங்கும் உள்ள அனைத்து உறுப்பினர்கள் தன்னை இணையத்தளம் மூலமாக இணைத்துக் கொள்ள புதியதாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களிடம் இந்த இணையத்தின் உள்நுழைவு படுத்துவதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தன்னை பதிவு செய்து கொண்டு தனக்குரிய அடையாளஅட்டையை அந்தந்த மாவட்ட தலைவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெளிவுப்படுதிகொள்கிறோம்.

இவற்றை அணைத்தும் கீழே கொடுக்கபட்டுள்ள இணையதள சேவையில் பெற்றுக்கொள்ளலாம்:

இணையதள முகவரி: http://www.vijaymakkaliyyakam.in

தொடர்புக்கு:9500334424

கஷ்டமா இருக்கு; இப்படி பண்ணாதீங்க.. பீஃல் செய்யும் சிம்பு

கஷ்டமா இருக்கு; இப்படி பண்ணாதீங்க.. பீஃல் செய்யும் சிம்பு

சிம்புக்கு உள்ள ரசிகர் பட்டாளம் நாம் அறிந்த ஒன்றுதான்.

சிம்புக்காக இவர்கள் எதையும் செய்ய தயாராகவே உள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் ஒரு ரசிகர் சிம்புவை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு குறித்த வீடியோ மற்றும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த ரசிகர் தனது கையில் ‘எஸ்டிஆர்’ STR என டாடூஸ் வரைந்திருக்கிறார்.

அதை சிம்புவிடம் அவர் காட்ட, “இதெல்லாம் மனசுல இருந்தாலே போதும். இப்படியெல்லாம் பண்ணாதீங்க கஷ்டமா இருக்கு.” என்று தனது வேதனையை பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் அன்பின் மிகுதியில் சிம்புவை கட்டியணைத்து முத்தமிடுகிறார் ரசிகர்.

இந்த காட்சிகள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

விமல்-ஓவியாவின் களவாணி-2 படத்தலைப்பை மாற்றினார் சற்குணம்

விமல்-ஓவியாவின் களவாணி-2 படத்தலைப்பை மாற்றினார் சற்குணம்

DVBSTfyU0AIGE7aகடந்த 2010ஆம் ஆண்டு விமல், ஓவியா நடிப்பில் வெளியான படம் களவாணி.
சற்குணம் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த கூட்டணி 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளது.

இப்படத்தை சற்குணமே இயக்கி தயாரிக்கவுள்ளார். அதுபற்றிய அறிவிப்பை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இப்படத்தில் விமல் மற்றும் ஓவியாவுடன் முதல் பாகத்தில் நடித்த முக்கியமான கலைஞர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் தலைப்பை கே2 (K2) என வைத்துள்ளனர்.

மீண்டும் நெகட்டிவ் டைட்டில்; திமிரு புடிச்ச(வன்) விஜய்ஆண்டனி

மீண்டும் நெகட்டிவ் டைட்டில்; திமிரு புடிச்ச(வன்) விஜய்ஆண்டனி

thimiru pudichavan stillsசினிமாவில் படத்தின் தலைப்பு முதல் அனைத்திற்கும் சென்டிமெண்ட் பார்ப்பது அதிகம்.

ஆனால் அந்த விதிமுறைகளை தகர்த்தெறிந்தவர் விஜய் ஆண்டனி.

தான் நடித்த படங்களுக்கு பிச்சைக்காரன், சைத்தான், எமன் உள்ளிட்ட நெகட்டிவ்வான தலைப்புகளையே வைத்தார்.

ஆனால் இந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் அண்ணாதுரை என்ற பாசிட்டிவ்வான படத்தலைப்பு கொண்ட ஒரு படத்தில் நடித்தார்.

இது போதிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் மீண்டும் நெகட்டிவ் தலைப்புகளையே செலக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

தன் அடுத்த படத்திற்கு ‘திமிரு புடிச்சவன்’ என பெயர் வைத்திருக்கிறார்.

கணேஷா இயக்கவுள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்ரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.

பிப்ரவரி 7 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இதனிடையில் விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள காளி படம் வருகிற மார்ச் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய்ஆண்டனியுடன் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

More Articles
Follows