TRISHA Back to Form : பொன்னியின் செல்வன் ஹிட்.; அஜித் – விஜய்யுடன் ரெண்டு

TRISHA Back to Form : பொன்னியின் செல்வன் ஹிட்.; அஜித் – விஜய்யுடன் ரெண்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

மேலும் இந்தப்பட ப்ரமோஷனில் திரிஷாவின் சிகை மற்றும் ஆடை அலங்காரங்கள் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

இதனால் தற்போது திரிஷாவின் மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் உயர்ந்துள்ளது.

எனவே த்ரிஷாவின் ரிலீசாகாத படங்களை தூசி தட்ட ஆரம்பித்துள்ளனர் கோலிவுட் இயக்குனர்கள்.

அவரது கைவசம் ‘ராங்கி’, ‘கர்ஜனை’ ‘சதுரங்க வேட்டை 2’ ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.

எனவே இந்த படங்கள் ஒவ்வொன்றும் விரைவில் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

மேலும் விஜய் உடன் ‘தளபதி 67’ மற்றும் அஜித் உடன் ‘தல 62’ ஆகிய படங்களில் திரிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கர்நாடக ரத்னா’ விழாவில் ரஜினிகாந்த் – ஜூனியர் என்.டி.ஆர். பங்கேற்பு

‘கர்நாடக ரத்னா’ விழாவில் ரஜினிகாந்த் – ஜூனியர் என்.டி.ஆர். பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021 கடந்தாண்டு அக்டோபர் 29ல் மாரடைப்பால் காரணமாக காலமானார் நடிகர் புனீத் ராஜ்குமார்.

அப்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் 45 வயதிலேயே உயிரிழந்நது இந்திய திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது.

இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கல்விக்கும் உதவி புரிந்தார்.

இதனையடுத்து மறைந்த புனீத் அவர்களுக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான ‘கர்நாடக ரத்னா’ விருதை வழங்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்து இருந்தார்.

அதன்படி விருது வழங்கும் விழா இன்று நவம்பர் 1 மாலை 4 மணிக்கு பெங்களூருவில் விதான் சவுதாவில் நடக்கிறது.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதையொட்டி தனி விமானம் மூலமாக இல் நடிகர்களும் பெங்களூரு வந்தனர்.

இவர்களை கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் வரவேற்றார்.

கூடுதல் தகவல்…

கர்நாடகத்தில் இதுவரை 9 பேருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth – Jr. N.T.R. at the ‘Karnataka Ratna’ award ceremony

சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா ?

சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்து தல படத்தில் STR, கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிசம்பர் 14 அன்று திரைக்கு வர திட்டமிடப்பட்டது, ஆனால் சமீபத்திய அறிக்கைகள் படி படக்குழு வெளியீட்டு தேதியை மாற்றியமைக்கப் போகிறது என்று கூறுகின்றன. முழு படப்பிடிப்பையும் தயாரிப்பாளர்கள் இன்னும் முடிக்கவில்லை.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர், அடுத்தகட்ட ஷெட்யூலை விரைவில் தொடங்க உள்ளனர். இந்நிலையில் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் இறுதியில் முடிவாகும் என சொல்லப்படுகிறது.

TOP STAR & ROCK STAR.: பிரசாந்துடன் இணைந்த அனிருத் விஜய்சேதுபதி பிரபுதேவா

TOP STAR & ROCK STAR.: பிரசாந்துடன் இணைந்த அனிருத் விஜய்சேதுபதி பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாப்ஸ்டார் பிரஷாந்த் நடித்துவரும் படம் ‘அந்தகன்’.

இந்த திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன்.

இதில் பிரசாந்துடன் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, ஆதேஷ்பாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருகிறார்

இப்படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிகட்ட காட்சிக்காக “டோர்ரா புஜ்ஜி” என்ற பாடலை ராக்ஸ்டார் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் விஜயசேதுபதி இணைந்து பாடியுள்ளனர்.

இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க நடனபுயல் பிரபுதேவா இசைந்துள்ளார்.

பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பாடல் காட்சி படமான உடனே ‘அந்தகன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘அந்தகன்’ படத்தை கலைப்புலி S தாணு அவர்கள் உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார்.

அந்தகன்

Anirudh VijaySethupathi Prabudeva teams up for Andhagan

‘தலைவர் 170’ படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்

‘தலைவர் 170’ படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி இரண்டு படங்களுக்கு ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்தார் என்றும், தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று அழைக்கப்படும் முதல் படத்தை ‘டான்’ சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்றும் நாங்கள் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம். ​​​​சமீபத்திய அப்டேட் என்னவென்றால் அரவிந்த் சாமி, வடிவேலு ஆகியோர் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

‘தலைவர் 170’ படத்திற்கான பூஜை நவம்பர் 5ம் தேதி சென்னையில் நடக்கிறது. 1991-இல் வெளியான தளபதி படத்தில் அரவிந்த் சாமி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வாரிசு’ படப்பிடிப்பில் குழந்தையுடன் இருக்கும் விஜய் – யாருடைய குழந்தை..?

‘வாரிசு’ படப்பிடிப்பில் குழந்தையுடன் இருக்கும் விஜய் – யாருடைய குழந்தை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யுடன், ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படம் 2023 பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘வாரிசு’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஒரு குழந்தையுடன் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த குழந்தை வேறு யாருடைய குழந்தை இல்லை அது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தை தான்.

மேலும், விஜய்யின் ரசிகர்கள் அந்த படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

vijay recent click with a child

More Articles
Follows