5 ஸ்டார் ஹோட்டலுக்கான தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக சுற்றுலா தினத்தை நினைவுகூரும் சுற்றுலாத்துறை அமைச்சகம் , 2018 செப்டம்பர் 27 அன்று புது தில்லி விஜய பவனில் தேசிய சுற்றுலா விருதுகளை வழங்கியது சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜெ. அல்ஃபோன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கினார்.

அந்த விழாவில் சென்னை ட்ரையண்ட், 5-ஸ்டார் பிரிவில் சிறந்த ஹோட்டலுக்கான தேசிய சுற்றுலா விருது “வென்றது.

“சிறந்தவற்றுள் சிறந்ததாக நங்கள் அடையாளம் காணப்பட்டதில் பெருமைப்படுகிறோம் . இந்த விருதை மதிப்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜெ. அல்பான்ஸில் கைகளில் இருந்து பெறுவதே பெரும் பாக்கியம் மற்றும் கௌரவம் எங்களுக்கு. “- திரு. மேனேஜர் ட்ரைடெண்ட் சென்னை.

ட்ரையன்ட், சென்னையில் இந்திய கலாச்சாரத்தின் அழகு மற்றும் சிறந்த விருந்தினருக்கு உறுதியான உறுதிப்பாடு – நமது விருந்தினர் அனுபவத்தின் ஒவ்வொரு விபரத்திலும்.

சென்னையிலுள்ள பொது மேலாளர் அமித் சைன்ச்சர்,கூறுகையில் “இந்த மதிப்புமிக்க விருதை நாங்கள் வென்றுள்ளோம் என்பதை எங்களால் விவரிக்க முடியாது, நாங்கள் இப்பொழுது முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் எங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளோம், மேலும் நாங்கள் எங்களின் விருந்தினர்களுக்கு இனிமேலும் இதைவிடவும் சிறந்த உபசரிப்புகளையும் விருந்தினர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்வோம் என இந்த தருணத்தில் சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

ஸ்டைலான விருந்தினர் அறைகள் மற்றும் சாட், கேஸ்ட்ரோனமிகல் சிறப்பம்சம், ஒரு நேர்த்தியான ஸ்பா மற்றும் உடற்பயிற்சி மையம் மற்றும் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள உள்ள அற்புதமான நிகழ்வுகள் அறை ஆகியவற்றுக்கான வசதிகளை கொண்டது ஹோட்டல், ட்ரையண்ட், சென்னை.

சைன்ச்சர் மேலும் கூறியது , “இந்த அங்கீகாரம் எங்களுக்கும் எங்களது குழுவினருக்கும் மிகவும் பெருமையளிக்கிறது.

இதன் மூலம் இனிமேல் எமது விருந்தினர்கள் விடுமுறைக்கு அல்லது வியாபாரத்திற்காக வருகிறவர்கள் மறக்கமுடியாத மற்றும் மகிழ்ச்சியடையும் வகையில் எங்களது உபசரிப்பு இருக்கும் என உறுதிப்படுத்துகிறோம்.

இந்தியாவின் சுற்றுலா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் ,தேசிய சுற்றுலா விருதுகள், இந்தியாவின் சுற்றுலா மற்றும் சுற்றுலாத் துறையின் மிகச்சிறந்த விருதுகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகளால் ஹோட்டல் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் பங்களிப்பு அதிகப்பதால் இந்தியாவை ஒரு சுற்றுலா தலமாக மாறுவதில் பெரும் பங்களிக்கிறது

சென்னை ட்ரைடன்ட் பின்வரும் விருதுகளை பெற்றுள்ளது:

1. தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் சிறந்த ஐந்து ஸ்டார் ஹோட்டல்
2. MakemyTrip வாடிக்கையாளர் சாய்ஸ் விருது
3. ஸ்வாக் சர்வே விருது
4. BW ஹோட்டல் விருது

Trident Chennai wins National Tourism Award for the Best 5-Star Category Hotel in India

காற்றின் மொழி-யை தள்ளி வைத்த தனஞ்செயன்; ஜோதிகா ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஹீரோக்களின் பிறந்த நாளை முன்னிட்டு தான் படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக், பாடல்கள், பட ரீலீஸ் தேதியை அறிவிப்பார்கள்.

இதில் சற்றும் எதிர்பாராத வகையில் ஜோதிகாவின் பிறந்த நாளான அக்டோபர் 18ஆம் தேதி அவர் நடித்த காற்றின் மொழி திரைப்படம் வெளியாகும் என அறிவித்தார் அப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன்.

இதனால் ஜோதிகா ரசிகர்கள் காற்றின் மொழியுடன் அவரது பிறந்தநாளை கொண்டாட தயாராக இருந்தனர்.

ஆனால் தற்போது ரிலீஸ் தேதியை வேறு வழியில்லாமல் தீபாவளிக்கு பிறகு தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார்.

அவர் தன் ட்விட்டரில் இதுகுறித்து கூறியுள்ளதாவது…

அக்டோபர் 17-ம் தேதி தனுஷின் ‘வடசென்னை’, 18-ம் தேதி விஷாலின் ‘சண்டக்கோழி 2’, ‘திருப்பதிசாமி குடும்பம்’, ‘அண்டாவ காணோம்’, ‘எழுமீன்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.

எனவே, ‘காற்றின் மொழி’ படத்துக்குத் திரையரங்குகள் கிடைக்கவில்லை.

இதனால், அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளிக்குப் பிறகு ‘காற்றின் மொழி’ ரிலீஸாகும் என தெரிவித்துள்ளார்.

ராதாமோகன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்க, மனோபாலா, லட்சுமி மஞ்சு உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
ஏ.எச்.காஷிஃப் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளனர்.

Jyothikas Kaatrin Mozhi likely to release post Diwali

சிபிராஜ்-நிகிலா விமல் இணைந்துள்ள *ரங்கா* டிசம்பரில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபிராஜ் தனது சிறப்பான கதை தேர்வால் வெற்றிகரமாக தனது எல்லைகளை விரிவாக்கம் செய்து கொண்டே வருகிறார்.

அடுத்து வெளிவர இருக்கும் அவரின் ‘ரங்கா’ படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்தே ஏதோ புதிதாக ஒரு விஷயம் படத்தில் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு சமூகப் பிரச்சினையின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. படம் சிறப்பாக வந்திருப்பதால் மொத்த குழுவில் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

“வழக்கமாக, தயாரிப்பாளர்கள் படத்தின் வெற்றிக்கு பிறகு நன்றி அறிவிப்பு செய்வார்கள்.

ஆனால் நான் இது தான் நன்றி சொல்ல சரியான நேரம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களின் உழைப்பும், ஒத்துழைப்பும், ஆதரவும் முழுப்படத்துக்கும் இருந்தது.

குறிப்பாக, காஷ்மீரின் கடும் குளிரில், மிகவும் அசாதாரணமான சூழலில் சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோரின் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தது பாராட்டுக்குரியது.

அந்த மாதிரியான சிக்கலான இடங்களில், குறிப்பிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்தது. சிபிராஜ், நிகிலா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.

குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை பார்த்தபோதே, உற்சாகம் தொற்றிக் கொண்டது. படத்தின் இறுதி வடிவத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா.

இயக்குனர் வினோத் டி.எல் பற்றி அவர் கூறும்போது, “அவர் தனது கருத்தை தெரிவித்த விதமும், ரங்கா தலைப்பின் முக்கியத்துவத்தை சொன்னதும் என்னை மிகவும் கவர்ந்தது. ‘காக்கும் கடவுள் ரங்கநாதன்’ என்பதன் தொடர்பு தான் ‘ரங்கா’ என்ற தலைப்பு.

சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தது என்னை போன்ற ஒரு தயாரிப்பாளருக்கு கிடைத்த வரம். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த திரைப்படத்தை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

சிபிராஜ், நிகிலா விமல், ஆகியோருடன் சதீஷ், ரேணுகா, லொள்ளு சபா ஸ்வாமி நாதன், ஜீவா ரவி, சுஜாதா பாபு,ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். BOSS மூவீஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரித்திருக்கிறார்.

ராம்ஜுவன் (இசை), அர்வி (ஒளிப்பதிவு), அருண் ஷங்கர் துரை (கலை), திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), சத்யா என்.ஜே. (ஆடை வடிவமைப்பு), ட்யூனி ஜான் 24AM (டிசைன்ஸ்), விஜி-தஸ்தா (நடன அமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.

Sibiraj starrer Ranga will be 2018 December release

PETTA Exclusive: சசிகுமார் மடியில் ரஜினி குழந்தைகளுக்கு மொட்டை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி, காலா படங்களை முடித்துவிட்டு தீவிர அரசியலில் ரஜினி ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியானது.

ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜே படத்தை இயக்குவதாலும் அனிருத் இசையமைப்பதாலும் இதன் மீதான எதிர்பார்ப்பு உருவானது.

மேலும் இப்படத்தில் ரஜினியுடன் முதன்முறையாக விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல பிரபலங்களும் இணைந்து நடிப்பதால் இதன் மீதாக எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தற்போது இதன் சூட்டிங் காசி மற்றும் வாரணாசியில் பகுதிகளில் நடந்து வருகிறது.

இதில் த்ரிஷாவின் சகோதரனாக சசிகுமார் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்துவது போன்ற ஒரு நிகழ்வு நடப்பதாகவும் அப்போது குழந்தைகள் சசிகுமார் மடியில் உட்கார்ந்து இருப்பதாகவும் காட்சிகள் படமாக்கப்படுவதாக தெரிகிறது.

இந்த காட்சியில்தான் ரஜினியின் செகண்ட் லுக்கான முறுக்கு மீசையுடன் வருகிறாராம்.

இந்த காட்சிகளில்தான் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது.

PETTA exclusive Rajini Trisha Sasikumar shooting updates

பட்டைய கிளப்பும் *பேட்ட*; செகண்ட் லுக்கில் மாஸ் காட்டும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் ரஜினியுடன் சசிகுமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு காசி மற்றும் வாரணாசியில் பகுதிகளில் நடந்து வருகிறது.

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் உடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியானது. இதில் ரஜினியின் தாடி கொஞ்சம் நரைத்து இருந்தது.

இந்நிலையில் பேட்ட படத்தின் செகண்ட் லுக்கை சன் பிக்சர்ஸ் வெளியிட்ள்ளனர்.

இதில் ரஜினி மிகவும் இளமையாக மறுக்கு மீசையுடன் வெள்ளை நிற வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இந்த லுக் ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

எனவே இந்த செகண்ட் லுக் போஸ்டரும் இணையத்தில் டிரண்ட்டாகி வருகிறது.

ஊழலுக்கு எதிராக விஜய் பேசியது வரவேற்கத்தக்கது… : கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று சர்கார் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அந்த விழாவில் விஜய் பேசும்போது… நான் முதல்வர் ஆனால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என பேசினார்.

இதுகுறித்து நடிகர் கமல் பேசியதாவது…

விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருந்தால் அவர் அரசியல் வருவதில் தவறில்லை.

இந்தியாவில் இப்போது உள்ள பிரச்னை ஊழல். விஜய் ஊழலுக்கு எதிராக பேசியுள்ளார், அவர் அப்படி பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

More Articles
Follows