மாரி2 படத்தில் தனுஷின் வில்லனை படக்குழுவினர் அறிவித்தனர்

மாரி2 படத்தில் தனுஷின் வில்லனை படக்குழுவினர் அறிவித்தனர்

Tovino Thomas to play antagonist in Dhanushs Maari 2பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்த படம் மாரி.

அனிருத் இசையமைத்த இப்படத்தில் விஜய்யேசுதாஸ் வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தமாஸ் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அடுத்த அக்டோபர் மாதம் முதல் மாரி2 படத்தில் தனுஷ் நடிப்பார் என கூறப்படுகிறது.

Tovino Thomas to play antagonist in Dhanushs Maari 2

tovino thomas maari 2

நடிகை திவ்யாவை மணக்கும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்

நடிகை திவ்யாவை மணக்கும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்

rk suresh with vidhya

சலீம், தர்மதுரை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஆர்.கே. சுரேஷ்.

பின்னர் பாலா இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை படம் மூலம் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்.

தற்போது வேட்டை நாய், பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் தான் திருமணம் செய்யப்போகும் நடிகையை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார்.

சன்டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சுமங்கலி சீரியலில் நடித்து வரும் திவ்யாவை மணக்கவிருக்கிறார்.

இவரும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது பாசம் வந்துவிட்டதாக கூறினார்.

ஆனால் இது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமே. விரைவில் திருமண தேதியை அறிவிப்பேன் என்றார்.

விரைவில் இல்லறத்தில் இணையவுள்ள மக்களை உங்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

Producer cum Actor RK Suresh to enter wedlock with Actress Dhivya

‘ஆண்டவர்’ கமலை ஆதரிப்பேன்; ‘கடவுள்’ ரஜினியை ஆதரிக்கமாட்டேன்… ஆர்.கே.சுரேஷ் அதிரடி

‘ஆண்டவர்’ கமலை ஆதரிப்பேன்; ‘கடவுள்’ ரஜினியை ஆதரிக்கமாட்டேன்… ஆர்.கே.சுரேஷ் அதிரடி

rk suresh stillsதாரைப் தப்பட்டை, மருது உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ்.

தற்போது நிறைய படங்களில் தனி நாயகனாக நடித்து வருகிறார் இவர்.

இந்நிலையில் சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரஜினி, கமல் மற்றும் அரசியல் பற்றி பேசினார்.

அப்போது தான் அரசியல் பின்னணியிலிருந்து வந்ததால், நானும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்றார்.

மேலும் தனக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் அவர் எனக்கு கடவுள் போன்றவர்.

ஆனால் அவர் அரசியலில் தெளிவான முடிவை எடுக்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் குறித்து பேசி வருகிறார்.

கமல் சரியான முடிவுகளை எடுத்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய உடனே முதல்வர் ஆனவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

அவரே வந்து கமலை சந்திக்கிறார் என்றால் அவரின் அனுகுமுறையானது எப்படியானது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

எனவே கமல் கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் முதல் ஆளாக அவரை ஆதரிப்பேன்.” என்றார்.

கமலை ஆண்டவர் என ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருவது தாங்கள் அறிந்த ஒன்றுதான்.

I support Kamal and wont support Rajini in Politics says Producer RK Suresh

தீபாவளி விருந்தாக அமையும் விக்ரமின் ஸ்கெட்ச் டீசர்

தீபாவளி விருந்தாக அமையும் விக்ரமின் ஸ்கெட்ச் டீசர்

Vikram Tamannaah starring Sketch teaser on Diwali 2017வாலு படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படத்தை இயக்கி வருகிறார் விஜய்சந்தர்.

இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில், இறுதிகட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பட டீசரை தீபாவளி தினத்தன்று அதாவது இந்தாண்டு அக்டோபர் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் விக்ரம் உடன் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்க, தமன் இசையமைத்துள்ளார்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார்.

Vikram Tamannaah starring Sketch teaser on Diwali 2017

கேரக்டர் லுக்கை வெளியிட்டு அசத்திய இது வேதாளம் சொல்லும் கதை படக்குழு

கேரக்டர் லுக்கை வெளியிட்டு அசத்திய இது வேதாளம் சொல்லும் கதை படக்குழு

Idhu Vedhalam Sollum Kathai movie character posters goes viralபுதுமுக இயக்குநர் ரத்தீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘இது வேதாளம் சொல்லும் கதை’.

அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், அபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தின் 3 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளதாம்.

டிசம்பரில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதன் டீசரை விஜய்சேதுபதி தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த கேரக்டர் போஸ்டர்களை கவுதம்மேனன், முருகதாஸ், வெங்கட்பிரபு உள்ளிட்ட 8 பிரபலங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டர்கள் தற்போது அது இணையங்களில் வைரலாகி வருகிறது.

Idhu Vedhalam Sollum Kathai movie character posters goes viral

character posters of Idhu vedhalam sollum kathai

மெர்சல் டைட்டிலை பயன்படுத்த தடை; நியூ டைட்டில் இதுவா..?

மெர்சல் டைட்டிலை பயன்படுத்த தடை; நியூ டைட்டில் இதுவா..?

mersal vijayவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் மெர்சல் தலைப்புக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை ஐகோர்ட்.

மேலும் வருகிற
அக்.3க்குள் படத்தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒருவேளை இந்த தலைப்புக்கு தடை நீடிக்குமானால், ஆளப்போறான் தமிழன் என்ற தலைப்பு வைக்கப்படலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

More Articles
Follows