இன்று 2 அதிரடி; அப்பா டிஆருக்கு காதல்; மகன் எஸ்டிஆருக்கு அரசியல்

இன்று 2 அதிரடி; அப்பா டிஆருக்கு காதல்; மகன் எஸ்டிஆருக்கு அரசியல்

Today 10th July T Rajendar and STR announced 2 movie titlesஇன்று ஜீலை 10ஆம் தேதி நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தன் புதிய படத்தை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நமீதான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு இன்றையக் காதல் டா என தலைப்பிட்டுள்ளார்.

வழக்கம் போல அவரே அந்த படத்தின் அனைத்தை வேலைகளையும் செய்கிறார்.

இப்படம் முழுக்க காதல் திரைப்படமாக உருவாகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதே நாளில் அவரின் மகன் சிம்பு நடிக்கவுள்ள மாநாடு என்ற படத்தின் டைட்டில் லுக் வெளியானது.

இப்படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்குகிறார்.

அப்பாவுக்கு இந்த வயதிலும் காதல் படம். மகனுக்கு இந்த வயதிலேயே அரசியல் படம்.. அசத்துங்க… மக்களே…

Today 10th July T Rajendar and STR announced 2 movie titles

திருப்பூர் சுப்ரமணியம் தலைமையில் புதிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்

திருப்பூர் சுப்ரமணியம் தலைமையில் புதிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்

tirupur subramaniamதமிழ் சினிமாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு என்று தனி சங்கம் உள்ளது.

அண்ணாமலை அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் அந்த சங்கத்தை நிர்வகித்து வந்தனர்.

புதிய நிர்வாகிகளை தேர்தல் வைத்து தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என நிர்வாகிகள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதற்கு உடன்படாத சில விநியோகஸ்தர்கள் தனியாக பிரிந்து புதிய சங்கத்தை உருவாக்க நினைத்தனர்.

அதன்படி புதிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவராக திருப்பூர் சுப்ரமணியமும், துணை தலைவராக சரஸ்வதி முத்தனனும், பொதுச் செயலாளராக பன்னீர் செல்வமும், செயலாளராக சேலம் இளங்கோவும், கூடுதல் செயலாளராக ராம்நாட் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வாகி உள்ளனர்.

இவர்கள் புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

வழக்கை லதா ரஜினி எதிர்கொள்ள வேண்டும் என கோர்ட்டு உத்தரவு

வழக்கை லதா ரஜினி எதிர்கொள்ள வேண்டும் என கோர்ட்டு உத்தரவு

latha rajiniaknthசௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்த அனிமேஷன் படம் கோச்சடையான்.

இப்படத்தை ரஜினிகாந்த் குடும்பமே தயாரித்து இருந்தது.

இதை தயாரித்தது தொடர்பாக மீடியா ஒன் குளோபல் நிறுவனத்திற்கு ஆட்பீரோ என்ற நிறுவனம் கடன் அளித்திருந்தது.

இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்தார்.

அந்தக் கடனை திருப்பிச் செலுத்தாதால் ஆட்பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு, இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஜூலை 10-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் ரூ.6.23 கோடி பணத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு இன்று (ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. லதா ரஜினிகாந்த் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

இந்த விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யவும் சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை லதா ரஜினிகாந்த் எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

தமிழ்ப்படம்2-வில் மீண்டும் இணைந்த மாதவன்-விஜய் சேதுபதி

தமிழ்ப்படம்2-வில் மீண்டும் இணைந்த மாதவன்-விஜய் சேதுபதி

madhavan and vijay sethupathiமிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தமிழ்ப்படம் 2’.

இவர்களுடன் திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ளார்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் இசையமைத்துள்ளார். வருகிற வியாழக்கிழமை(ஜூலை 12) இந்தப் படம் ரிலீஸாகவுள்ளது.

தமிழ் சினிமாவையும் டாப் ஹீரோக்களையும் கலாய்த்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், மாதவன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சித்தார்த், பிரேம்ஜி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்களாம்.

விக்ரம் வேதா படத்திற்கு பிறகு இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டி. ராஜேந்தருடன் நமீதா இணையும் *இன்றையக் காதல் டா*

டி. ராஜேந்தருடன் நமீதா இணையும் *இன்றையக் காதல் டா*

TRடி.ராஜேந்தர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘வீராசாமி’.

அவரே பாடல் எழுதி ஒளிப்பதிவு செய்து இசையமைத்து தயாரித்து இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதன்பிறகு படம் எதையும் இயக்காத டி.ஆர்., கடந்த ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் ‘கவண்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ஒரு படத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார் டி.ராஜேந்தர்.

லேடி டானாக நமிதா இந்தப் படத்தில் நடிக்கிறார்.

ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாப் என ஏகப்பட்ட பேர் நடிக்கும் இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் டி.ஆரும் நடிக்கிறார்.

வழக்கம்போல கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தையும் டி.ராஜேந்தரே செய்கிறார்.

சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.

நவீன்-ஆனந்தி இணையும் *அலாவுதீனின் அற்புத கேமரா*

நவீன்-ஆனந்தி இணையும் *அலாவுதீனின் அற்புத கேமரா*

Moodar Koodam Naveens next is Alaudhinin Arputha Camera‘மூடர் கூடம்’ படத்தை இயக்கி நடித்தவர் நவீன்.

மியூஸிக்கல் பிளாக் காமெடிப் படமாக வெளியான இது, பெரும்பாலானவர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

‘மூடர் கூடம்’ படத்துக்குப் பிறகு ‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்தார். தனராம் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சமுத்திரக்கனி – சங்கவி இருவரும் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தயாராகி பல நாட்கள் ஆனாலும், இன்னும் வெளியாகவில்லை.

இவர் அடுத்து ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார். ‘கயல்’ ஆனந்தி நாயகியாக நடித்து வருகிறார்.

முழுவதும் வெளிநாட்டில் படமான இந்தப் படத்தில், பிக் பாக்கெட் அடிப்பவராக நடித்துள்ளார் ஆனந்தி.

கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.

படத்தலைப்பு வைக்காமல் இதுவரை சூட்டிங் நடைபெற்ற நிலையில் தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதன் டைட்டில் லுக்கை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை விரைவில் வெளியிட இருக்கிறார்களாம்.

இந்தப் படத்துக்குப் பிறகு, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார்.

Moodar Koodam Naveens next is Alaudhinin Arputha Camera

Moodar Koodam Naveens next is Alaudhinin Arputha Camera

More Articles
Follows