தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில ஆண்டுகளாக நேரடி அரசியல் ஈடுப்படாவிட்டாலும் அரசியலை கவனித்து வந்தார் நடிகர் விஜய்.
தற்போது தன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி நேரடி தேர்தல் அரசியலில் களம் கண்டு வெற்றியும் கண்டு வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
அவர்களை தன் இல்லத்திற்கு வரவழைத்து வாழ்த்தி அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார் நடிகர் விஜய்.
இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர் முகமது பர்வேஸ் வெற்றிபெற்றுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகராட்சியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பூக்கடை மோகன் வெற்றி பெற்றார்.
மேலும் விருதுநகர் மாவட்டம் தென் கொடிக்குளம் பேரூராட்சி 5வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் ராஜசேகரன் வெற்றி பெற்றுள்ளார்.
TN urban local body poll results: Vijay Makkal Iyakkam candidates win in several areas