தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகிறது.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சி 9-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அங்கு மொத்தம் 1,551 வாக்குகள் உள்ள நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் மட்டுமே பதிவாகியது.
திமுக வேட்பாளர் அருள்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் 1 வாக்கையும், தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கார்த்திக் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவராக பதவி வைக்கிறார்.
“கார்த்திக் வீட்டில் அவர் உள்பட அவர் குடும்பத்தில் 6 பேர் உள்ளனர். அவரது குடும்பத்தினர் வாக்களித்திருந்தாலே இதை விட அதிகம் வாக்கு வாங்கியிருக்க முடியும்.” என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியில் இரண்டாம் வார்டு உறுப்பினர் விஜய் மக்கள் மன்றம் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் இதே மாமண்டூர் பகுதியில் நான்காம் வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டவரும் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த பல வருடங்களாக விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்து வருகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேட்சையாக போட்டியிட்டவர்களில் 49 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளதாக தகவல்.
TN rural Local body Election results 2021