Breaking: ஐபிஎல் ஆட்டமா? மக்கள் போராட்டமா? பங்கேற்ற திரையுலகினர் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையில் இன்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது.

தமிழகமே இந்த போராட்டங்களால் கொந்தளிப்பில் உள்ள நிலையில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஐபிஎல் போட்டியாளர்கள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு செல்வதற்கு முன் அந்த ஓட்டல் முன்பும் போராட்டம் நடத்தினர்.

நாம் தமிழர் கட்சி சீமான், கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், கௌதமன், தங்கர் பச்சான் ஆகியோரும் சென்னையில் நடைபெறும் போராட்டங்களில் கலந்துக் கொண்டனர்.

ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு நடைபெறும் நிகழ்வுகளை இங்கே தொகுத்துள்ளோம்…

டி.டி.கே சாலை, சென்னை
• வீரர்கள் அழைத்து வரப்படும சாலையில் மறியல்
• கிரிக்கெட் வீரர்கள் வரும் சாலையில் மறியல் போராட்டம்
• தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்தவர்கள் மறியல்
• போராட்டத்தால் டி.டி.கே சாலையில் போக்குவரத்து பாதிப்பு
• சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்கிறது போலீஸ்

அண்ணாசாலை, சென்னை
• எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அண்ணா சாலையில் மறியல்
• ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம்

சேப்பாக்கம், சென்னை
• சென்னை சேப்பாக்கத்தில் ரஜினி ரசிகர்கள் கைது
• காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என அடையாள அட்டை விநியோகித்தவர்கள் கைது
• அண்ணாசலையில் வந்த ஆம்புலன்சை மறித்தனர் போராட்டக்காரர்கள்

TN Peoples protest against IPL Match to support Cauvery & Sterlite Issue

BREAKING ஐபிஎல் அப்டேட்ஸ்: ரஜினி மக்கள் மன்றத்தினர் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இது போன்ற போராட்டங்கள் நடைபெற்று வருவதால், சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என பெரும்பாலான அமைப்புகள் தெரிவித்து வந்தன.

இந்நிலையில் இன்று மாலை ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளதால் சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது ரஜினி மக்கள் மன்றத்தினர் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

காலாவதியான ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுப்பு; கமல் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் கடந்த 60 நாட்களாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் மாணவர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் காலாவதியான ஸ்டெர்லைட் ஆலையின் மாசுக்கட்டுப்பாட்டு உரிமத்தை, புதுப்பிக்க ஆலையின் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

இதனை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளதால், பராமரிப்பு பணிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நீட்டித்துள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள்.

சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

உங்களுக்குத் துணையாய் மக்களும் கண்காணிக்கத் துவங்கி விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

Kamalhassan talks about Tuticorin Sterlite renewal cancelled

மனுசனா நீ பட தயாரிப்பாளர் கஸாலிக்கு மிரட்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மனுசனா நீ’ என்ற தமிழ் திரைப்படத்தை கஸாலி என்பவர் தயாரித்து, இயக்கி கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியிட்டார்.

அந்தப் படம் ‘கிருஷ்ணகிரி முருகன்’ தியேட்டரிலிருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு இண்டர்நெட்டில் ஏற்றப்பட்டது.

இது விசயமாக கஸாலி ‘ஃபாரன்சிக் வாட்டர்மார்க்’ முறையில் கண்டுபிடித்து மேற்படி கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் உரிமையாளர் முருகன் மற்றும் ஆப்பரேட்டர் ஆகியோரை பிப்ரவரி 27 ஆம் தேதி போலீசார் கைது செய்து கியூப் நிறுவனத்தின் புரஜக்டர் மற்றும் சர்வர் ஆகியவற்றை பறிமுதல் செய்ய வைத்தது அனைவரும் அறிந்ததே.

இதன் காரணமாக முருகன் தியேட்டர் உரிமையாளரின் மகன் பாலாஜி என்பவர், எப்படியும் தயாரிப்பாளர் கஸாலியை இந்தக் கேஸிலிருந்து வாபஸ் வாங்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்.

கஸாலி உறுதியாக இருக்கவே, தற்போது அந்தத் தியேட்டரில் வேலை செய்யும் துரைராஜ் என்பவரை, கஸாலி மார்ச் 20 ஆம் தேதி அடியாட்களுடன் கிருஷ்ணகிரிக்குச் சென்று அடித்து உதைத்து சாதியைச் சொல்லித் திட்டியதாகவும், புரஜக்டர் மற்றும் சர்வர் இவற்றைத் தூக்கிக்கொண்டு வந்ததாகவும் பொய்யான புகார் கடிதம் ஒன்றை (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) கஸாலிக்கு அனுப்பினார்.

அதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், கஸாலி அவர்களை முகம் தெரியாத ஆட்கள் வீட்டுக்கு வந்து மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

எனவே, கஸாலி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்( கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) கொடுத்திருக்கிறார்.

ஒரு தயாரிப்பாளரின் படம் ரிலீசான அன்றே திருடப்பட்டால் அந்தத் தயாரிப்பாளருக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என்று தெரிந்திருந்தும், பொறுப்பில்லாத சில தியேட்டர்களின் செயலால் தமிழ்த் திரையுலகமே நஷ்டத்தில் தத்தளிக்கிறது.

கண்டுபிடித்து நஷ்டஈடு கேட்டால், கொலை மிரட்டல் அளவுக்குச் செல்லும் கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் போன்றவர்கள் சரியானபடி தண்டிக்கப்பட்டால்தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் சரியாக அமையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

தெலுங்கு பேசப்போகும் தெறி; விஜய் கேரக்டரில் யார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா ராணி படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தன் படத்தை இயக்கும் வாய்ப்பை அட்லிக்கு கொடுத்தார் விஜய்.

படத்தின் பெயர் தெறி என்பதுக்கு ஏற்றார் போல் படமும் தெறி ஹிட்டானது.

ஜிவி. பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்க, முக்கிய கேரக்டரில் நடிகை மீனா மகள் நைனிகா நடித்திருந்தார்.

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவிருக்கிறார்களாம்.

விஜய் கேரக்டரில் ரவி தேஜா நடிக்க, எமி கேரக்டரில் கேத்ரீன் தெரசா நடிக்கிறார்.

சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் என்பவர் இயக்கவுள்ளார்.

மற்ற நடிகர்களின் விவரங்கள் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷை மீட்டு தாருங்கள்; நடவடிக்கை எடுப்பதாக தம்பதியரிடம் கலெக்டர் உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் தனுஷ் தங்களது மகன் என்றனர்.

மேலும் அவர் மாதந்தோறும் தங்கள் வாழ்வாதரத்துக்கான செலவை தர வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் போலியானவை என்று கதிரேசன் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் கதிரேசன் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தங்களுடைய இறுதி காலத்தில் தனுஷ் அருகில் இருக்க, அவரை மீட்டு தர வேண்டும் என அதில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Madurai couple petition to Collector in Dhanush issue

More Articles
Follows