‘ரஜினி நல்லவர்..; தெளிவான முடிவு எடுப்பார்.. அவரின் முடிவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’..- தமிழக அமைச்சர்கள் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்காலும் பிரச்னையாலும் தன் உடல் நிலையாலும் தன் அரசியல் கட்சி அறிவிப்பை தாமதப்படுத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

எனவே அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை நவம்பர் 30ந் தேதி ஆலோசனை செய்யவுள்ளார் ரஜினிகாந்த்.

நவம்பர் 30 ஆம் தேதி மஹா அவதார் பாபாஜியின் ஜென்ம நட்சத்திரம் ரோகிணி நட்சத்திர நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

இதில் அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா ஊரடங்கால் 6 மாதங்களாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத ரஜினி தற்போது இதில் கலந்து கொள்ள வருவதால் ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனமும் நாளைய ஆலோசனை கூட்டம் பக்கம் திரும்பியுள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும் என தமிழக அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி நல்ல மனிதர். ரஜினியின் அரசியல் முடிவை மக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். மக்களில் ஒருவனாக நானும் எதிர்ப்பார்க்கிறேன் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார். அவர் நல்ல மனிதர். அவர் கட்சி ஆரம்பித்த பின்னர்தான் அவரின் கொள்கைகள் தெரிய வரும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

TN ministers about Rajini’s political entry

ஓய்வில்லாமல் உழைக்கும் மகன்..; சிம்புக்கு காஸ்ட்லி காரை பரிசளித்த உஷா ராஜேந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின் வேலைகளை விறுவிறுப்பாக முடித்து கொடுத்தார்

இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்.

ஓயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில் நடிகர் சிலம்பரசனின் தாய் உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்வித்தார்.

நீண்ட நாளாக நடிகர் சிலம்பரசன் டி.ஆர் விருப்பப்பட்ட காரை (Mini Cooper Car) அன்பு பரிசாக தனது மகனுக்கு அளித்தார்.

தனது தாயின் பாசமிகு பரிசை பெற்ற நடிகர் சிலம்பரசன் டி.ஆர் தற்போது தனது புதிய காரில் தான் சுற்றி வருகிறாராம்.

Usha Rajendar gifted Mini cooper car to her son STR

பள்ளிகள் திறப்பு தாமதம்..: 50% பாடத்திட்டங்களை குறைக்க கல்வித்துறை முடிவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி மாணவர்கள் & பெற்றோர்களிடையே தினம் தினம் எழுந்தது.

தற்போது ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சில பாட பகுதிகள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதும் பள்ளிகள் திறப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் நிலையே உள்ளது.

இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை 50% குறைப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஆனால் இது தொடர்பான எந்த அறிக்கையும் அரசு சார்பில் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

About 50% school syllabus reduced in Tamil Nadu for 2020 ?

BIG NEWS வருவாரா? மாட்டாரா..? பாபாஜி ஜென்ம நட்சத்திர நாளில் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி இறுதி முடிவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்காலும் தன் உடல் நிலையாலும் தன் அரசியல் கட்சி அறிவிப்பை தாமதப்படுத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை செய்யவுள்ளார் ரஜினிகாந்த்.

நவம்பர் 30 ஆம் தேதி மஹா அவதார் பாபாஜியின் ஜென்ம நட்சத்திரம் ரோகிணி நட்சத்திர நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

இதில் அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rajinikanth to hold discussions with district secretaries of RMM on Monday

ஒரு டாக்டர் & நர்ஸ் உடன் டிசம்பர் 15க்குள் 2000 நடமாடும் மினி கிளினிக்..; முதல்வர் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவம்பர் மாத கொரோனா ஊரடங்கு முடிவடைய உள்ளது.

எனவே டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதல்வர் பேசியதாவது…

நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

கால்நடைகளை இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்.

நிவர் புயல் அறிவிப்பின் போதே மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்துக்கு தேவையான உதவிகளை சொன்னபடி செய்தார்.

பிரதமரும் தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

இதுவரை 7525 கோடி ரூபாய் கொரனா தடுப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5,22,530, காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன.

நாட்டிலேயே கொரோனா தொற்று கண்டறிய அதிகளவில் ஆய்வகங்கள் அமைத்தது தமிழகம் தான்.

பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிவதில்லை. மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நோய் கட்டுப்படுத்த முடியாது.

ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் 2000 நடமாடும் மினி கிளினிக் தொடங்கப்படும்.

ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த மினி கிளினிக்குகள் செயல்படும். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் இருப்பார்கள்.

இவ்வாறு தமிழக முதல்வர் பேசினார்.

Tamil Nadu plans 2000 mini clinics in december

வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திலிருந்து சூர்யா விலகல்..?.; கலைப்புலி தாணு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி s தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்க சூர்யா நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது.

இப்படத்திற்கு ‘வாடி வாசல்’ என பெயரிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

ஆனால் சூட்டிங் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா @Suriya_offl விலகுகிறார்.

கூடிய விரைவில் தகுந்த கதாநாயகன் பெயர் அறிவிக்கப்படும்

நன்றி , வணக்கம் .
#Vaadivasal !! என போலியான தகவலை ஒரு நபர் பதிவிட்டார்.

https://t.co/E1Z9mL0kZo இந்த ட்விட்டர் அக்கவுண்ட் என்னுடையது அல்ல, என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம்.” என தாணு தெரிவித்தார்.

மேலும் அவரது பிஆர்ஓ தரப்பில்….

தயாரிப்பாளர் திரு கலைப்புலி s தாணு அவர்களின் பெயரில் போலியான ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் அவரது படங்கள் பற்றிய தவறான செய்தி பரப்புகிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் .

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rumours on Vaadi Vasal shut down, the project is truly on

More Articles
Follows