அமைச்சர் செல்லூர் ராஜூ கழுத்தில் ‘வைரஸ் ப்ளாக் அவுட்’ அட்டை..; இது கொரோனாவை கொல்லுமா.?

sellur rajuஏழை முதல் பணக்காரன் வரை எவரையும் மிச்சம் வைக்காமல் போட்டு தாக்கி வருகிறது கொரோனா வைரஸ்.

நாம் எவ்வளவு தான் பாதுகாப்புடன் விழிப்புணர்வு உடன் இருந்தாலும் சில நேரம் நம்மையே தொற்றிக் கொள்கிறது.

அமித்ஷா முதல் அமிதாப் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெல்ல மெல்ல குணமடைந்து வருகின்றனர்.

அண்மையில் தன்னை கொரோனா தொட்டுவிட்டுச்சென்றது என்றார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ.

ஆனாலும் தற்போது பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ‘வைரஸ் ப்ளாக் அவுட்’ என்ற பெயரில் ஜப்பான் நிறுவன அட்டையை தன் கழுத்தில் தொங்கவிட்டு வருகிறார்.

இந்த அட்டையானது 1 மீட்டர் சுற்றளவில் காற்றில் வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த அட்டைக்குள் குளோரின் டை ஆக்ஸைடு நிரப்பப்பட்டுள்ளது.

முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றுடன் இந்த அட்டை ஒரு கூடுதல் பாதுகாப்பு என சொல்லப்படுகிறது.

அமேசான் உள்ளிட்ட இணையதளத்தில் இந்த அட்டை ₹ 150 முதல் கிடைக்கிறதாம்.

இந்த அட்டை கொரோனாவை கொல்லுமா.? என்பதுதான் புதிராகவே உள்ளது.

Overall Rating : Not available

Latest Post