ஞாயிறு முழு ஊரடங்கு..; வார தினங்களில் இரவில் ஊரடங்கு.. தமிழக அரசு உத்தரவு முழு விவரம்

ஞாயிறு முழு ஊரடங்கு..; வார தினங்களில் இரவில் ஊரடங்கு.. தமிழக அரசு உத்தரவு முழு விவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் 2வது அலையால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. தினம் தினம் லட்சக்கணக்கான உயிர்கள் மரணிக்கின்றன.

இந்தியாவிலும் நிலைமை கை மீறி போய்விட்டது.

இதனை தொடர்ந்து இன்று ஏப்ரல் 18ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட ஆலோசனைப்படி சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

அந்த சமயத்தில் இரவு நேர ஊரடங்கின் போது, தனியார்/ பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.

தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை செயல்பட அனுமதியில்லை.

ஆனால் அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம் , மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி, மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

மேலும் ஊடகம் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேலும் இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் ,சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட் அனுமதிக்கப்படமாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

TN Govt says Complete lockdown on Sundays. Night Curfew from 10PM to 4 AM

மற்ற விவரங்கள் இதோ…

*தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.*

தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்.

இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை.

முழு ஊரடங்கு நாளில் இறைச்சி, மீன், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட தடை – தமிழக அரசு.

முழு ஊரடங்கு நாளில் ஞாயிறு அன்றும் திருமண நிகழ்ச்சியில் 100 பேர் வரை பங்கேற்கலாம் – தமிழக அரசு

வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி – தமிழக அரசு.

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அனைத்து நாட்களிலும் தடை.உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல் – தமிழக அரசு.

இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல் – தமிழக அரசு.

ஊடகங்களுக்கு 24X7 அனுமதி அத்தியாவசிய உற்பத்திகளுக்கு 24X7 அனுமதி – தமிழக அரசு.

கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.

டீக்கடைகள், ஹோட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி – தமிழக அரசு.

ஷாப்பிங் மால்கள், ஜவுளிக் கடைகள் உள்ளிட்டவை  இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி – தமிழக அரசு…

மகள்களுக்கு சினிமாவில் நாட்டமில்லை.. மூத்த மகளுக்கு வரன்.; விவேக் கடைசி கண்ணீர் பேட்டி

மகள்களுக்கு சினிமாவில் நாட்டமில்லை.. மூத்த மகளுக்கு வரன்.; விவேக் கடைசி கண்ணீர் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivek daughter photos‘சின்ன கலைவாணர்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக்.

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த விவேக் சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 17ல் அதிகாலை 4.45 மணிக்கு விவேக் காலமானார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் அஞ்சலி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று பிற்பகல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் தகன மயானத்துக்கு விவேக்கின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு உத்தரவின்படி மாநில காவல்துறை சார்பாக சென்னை ஆயுதப்படையினர் மயானத்தில் அணிவகுத்து நின்றனர்.

பின்னர் வானை நோக்கி தங்களின் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டனர்.

அதன் பின்னர் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் பின்னர் சம்பிரதாய சடங்குகளை நிறைவேற்ற விவேக் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக மக்கள் மனதில் விவேக் எவ்வளவு பெரிய ஹீரோவாக திகழ்ந்துள்ளார் என்பதை இன்றைக்கு அவருக்கு அஞ்சலி செலுத்து வந்த மக்கள் கூட்டத்தை பார்த்தே புரிந்து கொள்ள முடியும்.

கொரோனா காலம் என்பதையும் மக்கள் பொருட்படுத்தாமல் கூட்டமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் நடிகர் விவேக் அளித்த கடைசி பேட்டி ஒன்றில் தனது மகளின் திருமணம் பற்றி பேசியிருக்கிறார்.

அதில், ‛‛சினிமாவையும், குடும்பத்தையும் எப்போதும் நான் ஒன்றாக இணைக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

மகள்கள் பற்றி விவேக் கூறும்போது…

‛‛மூத்த மகள் அமிர்தநந்தினி ஆர்கிடெக்ட்டாக உள்ளார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறோம்.

இளையமகள் தேஜஸ்வினி சிட்டி வங்கியில் வேலை பார்க்கிறார். இருவருக்கும் சினிமாவில் நாட்டமில்லை. அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் என தெரிவித்துள்ளார்.

மகளின் திருமணத்தை பார்க்கலாம் என நிச்சயம் நினைத்திருப்பார் சின்ன கலைவாணர் விவேக்.

அதற்குள் விண்ணுலகில் தன் நகைச்சுவை பணியை தொடர சின்ன கலைவாணர் சென்று விட்டாரோ..??!!

Actor Vivek talks about his daughters in recent interview

நான் அவனுக்கு ரசிகன்.; விவேக் மரணம் குறித்து வடிவேலு உருக்கம்.. (வீடியோ)

நான் அவனுக்கு ரசிகன்.; விவேக் மரணம் குறித்து வடிவேலு உருக்கம்.. (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விவேக்.

மாரடைப்பால் இன்று அதிகாலை மரணமடைந்தார் விவேக்.

இந்த நிலையில் விவேக் மரணம் குறித்து நடிகர் வடிவேலு உருக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்.., “இன்னைக்கு காலைல செய்தில பாத்தேன். என்னுடைய நண்பன் விவேக் ஹார்ட் அட்டாக்ல இறந்த செய்தியைக் கேட்டு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு.

அவனும் நானும் நிறைய படங்கள்ல ஒண்ணா ஒர்ப் பண்ணியிருக்கோம்.

அவனப் பத்தி பேசும் போது துக்கம் தொண்டையை அடைக்குது. ரொம்ப நல்லவன்.

அப்துல் கலாம் ஐயா கிட்ட நல்ல நெருக்கமா இருப்பான். அதே மாதிரி விழிப்புணர்வு மரக்கன்று நடுதல் பிரச்சாரம்… நான் அவனுக்கு ரசிகன்.

அவன் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப ரசிக்கிற மாதிரி இருக்கும். என்ன விட எளிமையா ரொம்ப நல்லா பேசுவான்.

அவனுக்கு இப்படியொரு நிலைமை வந்தது, ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால முடியல, இந்த நேரத்துல நான் என்ன பேசுறதுன்னே எனக்கு தெரியல.

அவன நேர்ல பாத்து அஞ்சலி செலுத்த என்னால முடியல, ஏன்னா நான் மதுரைல இருக்கேன்.

என் தாயாரோட இருக்கேன் நான். என்னோட நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவிச்சுக்கிறேன்.

விவேக் எங்கேயும் போகல, உங்களோட தான் இருக்கான். மக்களோட மக்களா நிலைச்சு இருக்கான்.

அவன் ஆன்மா சாந்தியடையணும்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Actor Vadivelu break down in tears talking about his dearest friend Vivekh

‘பத்மஸ்ரீ’ விவேக் காலமானார்..: காவல்துறை மரியாதை அளிக்க தமிழக அரசு உத்தரவு

‘பத்மஸ்ரீ’ விவேக் காலமானார்..: காவல்துறை மரியாதை அளிக்க தமிழக அரசு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivek (2)சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக்.

இவர் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது நடிகர் விவேக் மயங்கி விழுந்துள்ளார்.

விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

எனவே அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.45 மணிக்கு மரணமடைந்தார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் ரசிகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விவேக்குக்கு கௌரவம் அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து அவரது இறுதிச் சடங்கின்போது காவல்துறை மரியாதை அளிக்க முடிவு செய்த தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டது.

தேர்தல் ஆணைய அனுமதி கொடுத்ததை அடுத்து அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

Actor Vivek’s funeral to be held with police honours by TN government

JUST IN ‘சின்ன கலைவாணர்’ விவேக் திடீர் மரணம்..; அவரின் வாழ்க்கை பாதை ஒரு பார்வை

JUST IN ‘சின்ன கலைவாணர்’ விவேக் திடீர் மரணம்..; அவரின் வாழ்க்கை பாதை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சின்ன கலைவாணர்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக்.

இவர் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசியை அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டார்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த

இந்நிலையில் இன்று குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு விவேக் மயங்கி விழுந்துள்ளார்.

தற்போது சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது…

கொரோனா தடுப்புபூசிக்கும் நடிகர் விவேக்கின் உடல்நிலை கோளாறுக்கும் சம்பந்தம் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்கு வரும் போதே சுயநினைவு அற்ற நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார் விவேக்.

நடிகர் விவேக் அவர்களுக்கு கொரோனோ அறிகுறி இல்லை.

எக்மோ கருவி மூலம் அவரது உடல் தற்போது வரை சீராக உள்ளது. எக்மோ சப்போர்ட்டில் அவர் இருக்கிறார்.

100% ரத்த குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது அவரின் உடல் நிலை மோசமாக உள்ளது. 24மணி நேரம் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.”

இவ்வாறு மருத்துவர் ராஜு சிவசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 17ல் அதிகாலை 4.45 மணிக்கு விவேக் காலமானார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

விவேக் பற்றிய குறிப்புகள்…

*பத்மஸ்ரீ * விவேக்

1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி கோயில்பட்டிஅருகே உள்ள பெருங்கோட்டூர் சேர்ந்த சிவ.அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் இவர். இவருடைய முழு பெயர் விவேகானந்தன்.

இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.

மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்ற இவர், அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப் பார்த்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் நான்கு தேர்வில் வெற்றிப் பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைக்க, அவருடைய இயக்கத்தில் உருவான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானார்.

அந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர் மீண்டும் கே.பாலசந்தர் இயக்கிய ‘புது புது அர்த்தங்கள்’ படத்தில் நடித்து பிரபலமானார்.

அந்தப் படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.

(ஆரம்பத்தில் படங்கள் இல்லாத போது மேல்மாடி காலி என்கிற சின்னத்திரை நாடகத்தில் நடித்திருக்கிறார்.)

அதன் பிறகு ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள், சாமி போன்ற படங்களில் நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைத்தார்.

லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இவருடைய நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றன.

தமிழில் ரஜினி, விஜய், அஜித் முதல் தனுஷ் உடன் வரை நடித்துவிட்டார்.

ஆனால் கமலுடன் இணையவில்லை. இந்தியன் 2 படத்தில் அந்த வாய்ப்பை இயக்குனர் ஷங்கர் வழங்கியிருந்தார். அந்த படத்தின் சூட்டிங் இதுவரை முடியவில்லை.

அனைத்து முன்னணி கதாநாயகர்களின்  படங்களிலும் நடித்துள்ள இவரை, பஞ்சு படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்தார் கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை.

அதன் பிறகு சொல்லி அடிப்பேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாக வில்லை.

அதன் பிறகு நடித்த ’நான்தான் பாலா’, ’பாலக்காட்டு மாதவன்’ போன்ற படங்கள் வெளியாகி இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வரும் விவேக், சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு, ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் (மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆலோசனைப்படி) சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

சினிமா ரசிகர்கள் இவரை ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது.

‘உன்னருகே நானிருந்தால்’, ‘ரன்’, ‘பார்த்திபன் கனவு’, ‘சிவாஜி’ போன்ற திரைப் படங்களுக்காக தமிழ் நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப் படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’ பெற்றார் இவர்.

இவரது மனைவி பெயர் அருள்செல்வி. இவருக்கு அம்ரிதாநந்தினி, தேஜஸ்வினி என்கிற இரு மகள்களும், பிரசன்ன குமார் என்கிற ஒரு மகன் இருந்தார். அவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

Veteran Tamil Actor Vivek passes away

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மையங்கள்..; ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மையங்கள்..; ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilisaiபுதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மையங்களின் தொடக்க விழா நடைப்பெற்றது.

இதில் கலந்துக் கொண்டார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

அப்போது கொரோனா நடமாடும் தடுப்பூசி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

“பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், கொரோனாவை கட்டுப் படுத்துவதில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்” எனவும் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினார்.

Mobile vaccination centre in pondy inaugurated by Governor

More Articles
Follows