மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தை வேடிக்கை பார்க்கும் அரசு; ரஜினி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த 2019 ஆண்டு முடிவடைகிறது.

ஆலையின் அடுத்த விரிவாக்கப் பணிகளை தற்போது தொடங்கியுள்ளனர்.

இந்த ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்றுநோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் தூத்துக்குடி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் கடந்த 47 நாட்ளாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் அனைத்து போராட்டங்களிலும் முதல் நடிகராக கலந்துக் கொள்ளும் ஜிவி. பிரகாஷ் ஆரம்பம் முதலே இந்த போராட்டம் குறித்த விவரங்களை தன் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.

நாளை ஏப்ரல் 1ஆம் தேதி இந்த புரட்சி போராட்டத்தில் மக்களில் ஒருவனாக கலந்துக் கொள்ளவிருக்கிறேன் என கமல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த போராட்டத்தை கண்டு கொள்ளாத அரசு குறித்து ரஜினி தன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் கருத்து இதோ…

Rajinikanth‏Verified account @rajinikanth

ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது #SterliteProtest

TN govt not responding to protests over Sterlite says Rajinikanth

ஹாலிவுட் இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டு பிராயசித்தம் தேடிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விஸ்வரூபம்-2’ படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

இவர்சமீபத்தில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலனை மும்பையில் சந்தித்திருக்கிறார்.

இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளதில்…

‘‘சமீபத்தில் ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலனை சந்தித்தேன்.

அவர் இயக்கிய ‘டன்கிர்க்’ திரைப்படத்தை திரையரங்கில் பார்க்காமல் டிஜிட்டல் முறையில் பார்த்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ’ஹேராம்’ படத்தின் டிஜிட்டல் பிரதியை அவருக்கு வழங்கியிருக்கிறேன்.

அவர் நான் நடித்த ‘பாபநாசம்’ படத்தை பார்த்ததில் மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த 90-வது ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ‘டன்கிர்க்’ திரைப்படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamalhassan met hollywood director Christopher Nolan news updates

தகுதியில்லாதவர்கள் ரஜினியை விமர்சிக்கலாமா..? நட்ராஜின் நச் கேள்விகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள நிலையில் பலரும் பல்வேறு விமர்சனங்களை அவர் மீது விசி வருகின்றனர்.

அதற்கு எல்லாம் சில மேடைகளில் பேசும்போது பதிலடி கொடுத்து வருகீறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் ஒரு தனியார் டிவி பேட்டியில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கியுள்ள பிரபல இயக்குனர் ரஜினியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

அதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளரும் நடிகரும் நட்டி என்ற நட்ராஜ் ரஜினியை விமர்சித்தவருக்கு தக்க பதிலடிகளை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது ரஜினி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதோ அந்த ட்வீட்டுக்கள்…

1) தன்துறை சம்பந்தப்பட்ட அனைவரையும் அரவணைத்தது..அதுவே ஒரு துவக்கம்…தயாரிப்பாளர், வினியோகஸ்தர், திரைஅரங்கங்கள், அனுபவித்த வெற்றிகள் எண்ணிலடங்காதவை… இதை விட எத்துனையோ குழந்தைகளின் படிப்புக்கு உதவியவை..கிடைத்ததை அனைவருடன் பகிர்ந்தது..அது போதும்….

2) ஒரு படங்கூட ஓடாத… தன் தயாரிப்பாளர்களை கடன்காரன் ஆக்கிய கேடு கெட்டவன்லாம் பேசுவானாம்… யார் என்ன பண்ணனும்னு…இதில் இவன் ரசிகனாமா?…எப்படி தொங்கினாலும் வவ்வாலாக முடியாதுடீ..வர போக வண்டி குடுத்தாங்கல்ல…போ…

3) கூடப்பிறந்த அண்ணன் தம்பிக்கு என்ன பண்ணிருக்க… எத்தனை பேருக்கு பீஸ் கட்டி இருக்க… எத்தன பேருக்கு சாப்பாடு போடறே.. பதக்குனு அத சொல்லு…நல்லவன் பேர் சொன்ன பதக்குங்குதா?… ஏன் ஆகாது… இயற்கை தானே…..

சினிமா ஸ்டிரைக் தொடரும்; முதல்வரை சந்திக்க திரையுலகினர் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விஷால், பிபிசி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி.சி. ஸ்ரீ ராம், இயக்குநர் சங்க தலைவர்

விக்ரமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியது :-

பொதுமக்கள் திறைஅரங்கிற்க்கு வந்து படம் பார்க்கும் போது எந்த வித பாரமும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும்.

விவசாயகளும், தயாரிப்பாளர்களும் ஒன்று என்ற நிலையில் தான் இப்போது இருக்கிறோம்.

தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்த வரை புதுபடங்கள் ரீலீஸ் ஆகாது, தமிழகத்தில் உள்ள அனைத்து திரை அரங்கிலும் கம்யூட்டர் டிக்கெட் வழங்க வலியுறுத்தி உள்ளோம்.

எங்களது கோரிக்கையை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் ஒரு மனுவாக கொடுக்க உள்ளோம். தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

முதலமைச்சர், செய்தித்துறை அமைச்சர் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அடுத்த வாரம் புதன் கிழமை பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளோம்.

வேலை நிறுத்தம் என்றால் அடிமட்ட ஊழியர்களுக்கு கஷ்டமான ஒன்றாக தான் இருக்கும்,ஆனால் அதற்கான தகுந்து தீர்வு விரைவில் கிடைக்கும் என்றார் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்.

பெப்சி தலைவர் ஆர்,கே.செல்வமணி பேசியது :-

திரை அரங்குகளில் கம்ப்யுட்டர் டிக்கெட்களை கட்டாயம் வழங்க வேண்டும். குறைந்த அளவில் படம் பார்க்க வரும் மக்களிடம் அதிக அளவில் பனம் வாங்குவதால் தான் படம் பார்க்க திரை அரங்குகளை மக்கள் வருவதில்லை.

அரசு இதை ஒரு வாரியமாக ஒழுங்கு செய்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவே வரும் புதன் கிழமை மனு கொடுக்க அனுமதி கேட்டுள்ளோம் கிடைத்தால் அனைவரும் ஒன்றாக பேரணியாக சென்று முதலவர் மற்றும் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுக்க உள்ளோம் என்றார் பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி

சென்னை ஜெமினி அருகே உள்ள பிலிம் சேம்பர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேட்டி..

1.எங்களுடைய கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறாததால் புதிய திரைப்படங்களை வெளியிட போவதில்லை என்ற நிலை தொடரும்.

2. தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

3.முதலமைச்சர், செய்தித்துறை அமைச்சர் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

4.இதற்காக அடுத்த புதன்கிழமை (ஏப்ரல் 4, 2018) பேரணியாக சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்க திட்டம்.

On 4th April Cine Celebrities plans to meet TN Chief Minister till now strike continues

ஐ ப்ரோ அழகி ப்ரியாவாரியரை பின்னுக்கு தள்ளுவாரா இவர்? (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு அதார் லவ் என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவே என்ற பாடலின் மூலம் இந்தியளவில் புகழ் பெற்றவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

இந்த பாடலில் அவர் தன் புருவத்தை உயர்த்தி கண் அடித்து பல இளைஞர்களை தன் வலையில் வீழ்த்தினார்.

எனவே அவரது வலைத்தள பக்கங்கள் பாலோயர்களால் நிரம்ப ஆரம்பித்தன.

எனவே அவரைப் போன்று அவரது ரசிகர்களும் இளைஞீகளும் முயற்சி செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தற்போது ஒரு பெண், ஒரு பின்னணி இசை ஒலிக்க, தன் புருவத்தை பல விதங்களில் உயர்த்தியும் கண் அடித்தும் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணைங்களில் பரவ ஆரம்பித்துள்ளது.

இவர் பிரியா வாரியரின் சாதனைகளை முறியடிப்பாரா? என்று காத்திருந்து பார்ப்போம்.

Will this new girl break the record of Priya prakash warrior

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்யனும்…: கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மேலாண்மைவாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய முன்வர வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெற உள்ள ஒரு சினிமா நிகழ்ச்சிக்காக மும்பை செல்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது… காவிரி மேலாண்மை வாரியம் கோரி அ.தி.மு.க ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரதம் அறிவித்திருப்பது தாமதமான முடிவு என்று கூறினார்.

மேலும் காவிரி நீரைப் பெறுவதற்காக தமிழக எம்.பிக்கள் தியாகம் செய்ய வேண்டும்.

மேலும் அந்த தியாகம் தமிழக அரசில் இருந்து தொடங்க வேண்டும்” எனவும் கமல் பேசினார்.

ADMK Govt must resign for Cauvery Management Board issue says Kamal

More Articles
Follows