டாஸ்மாக்கை மூடினால் நஷ்டம்; சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கு மே 17 வரை அமலில் இருக்கும்போதே மே 7 முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்தது தமிழக அரசு.

இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் மதுபிரியர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் டாஸ்மாக் மது விற்பனையின் போது, சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை எனவும் கொரோனா தொற்று அதிகளவில் பரவும் எனவும் கூறப்பட்டு அவசர வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
அதில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

மதுக்கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அத்தனை நடவடிக்கைகளையும் காவல்துறை கொண்டு எடுத்தோம்.

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

TN Govt Moves SC Challenging Madras HCs Order On Closure Of TASMAC

இந்துக்கள் மனதை புண்படுத்திய விஜய்சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க போலீசில் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசியிருந்தார் நடிகர் விஜய்சேதுபதி.

அதில்.. “கோயில்களில் சாமி சிலைகளை குளிக்க வைக்கும்போது (அபிஷேகம்) பார்க்க அனுமதிப்பவர்கள், உடை மாற்றும்போது மட்டும் அனுமதிப்பதில்லையே ஏன் ?” என்பதை ஒரு தாத்தா, பேத்தி கதை மூலம் கேள்வியாக கேட்டிருந்தார்.

இது வீடியோ தற்போது தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இதை பரப்பி பல விதமான கமெண்டுக்களை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி பேசி வருகிறார்.

அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த மகா சபை அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பான மனுவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ளது.

அந்த மனுவில், “விஜய் சேதுபதி இந்து மத ஆகம விதிகளை பற்றி புரிந்து கொள்ளாமல் கேலி, விமர்சனம் செய்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மத சம்பிரதாயங்களை பயன்படுத்தி வருகிறார்.

அவர் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Sethupathi hurting Religious Sentiments Complaint filed

தள்ளிப் போகும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்தார். இவரது தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் சங்கம் இருந்தது.

இப்போது தனி அதிகாரியின் நிர்வாகத்தில் செயல்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

வருகிற ஜுன் மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் தேர்தல் அதிகாரியாக முன்னாள் நீதிபதி எம்.ஜெய்சந்திரனை நியமித்தது.

இதைத் தொடர்ந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 21ந் தேதி நடைபெறும் என்று அதற்கான அட்டவணை கடந்த ஏப்ரல் மாதம் 16ந் தேதி வெளியிடப்பட்டது.

இதில், டி.சிவா தலைமையில் ஒரு அணியினரும், முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியினரும், தாணு தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி எம்.ஜெய்சந்திரனும், தனி அதிகாரி கே.கே.மஞ்சுளாவும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதாலும், தேர்தலுக்கு கால அவகாசம் கேட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil film producers union election postponed

இயக்குனர் படத்தை கைவிட ‘திடீர்’ இயக்குனரான நடிகர் கிஷோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த கிஷோர் அவர்கள் வெற்றிமாறன் இயக்கிய தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதனையடுத்து பல படங்களில் வித்தியாசமான வேடங்களை ஏற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஆடுகளம், விசாரணை, ஹவுஸ் ஓனர், வெண்ணிலா கபடி குழு, வட சென்னை, றெக்க போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்பை சொல்லும்.

தற்போது ஒரு படத்தில் நடித்து வந்த இவர் தீடீரென இயக்குனராக மாறியிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் ராகவ் இயக்கத்தில் உருவான கதவ் என்ற படத்தில் நடித்து வந்தார் கிஷோர். நாயகியாக அனுபமா குமார் நடித்து வருகிறார்.

திடீரென சில காரணங்களால் இயக்குனர் ராகவ் படத்தை இயக்க முடியாமல் போக கிஷோரே இயக்குநராக மாறியிருக்கிறார்.

தற்போது இந்த படத்திற்கு புதிய பெயராக கருப்பு மற்றும் வெள்ளை என தலைப்பு வைத்திருக்கிறார்களாம்.

Actor Kishore turns a director for Black and White movie

கொரோனா சிகிச்சை பெறும் ரசிகரின் உடல்நலம் விசாரித்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் பலரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பலர் வீட்டிலேயே முடங்கி கிடந்தாலும் ஒரு சிலர் வழக்கம் போல தங்களை வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட STR நற்பணி மன்றத்தின் மாவட்ட தலைவர் C.N.சிம்பு ஆனந்தன் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர் தற்போது சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த நடிகர் சிம்பு உடனடியாக மன்ற நிர்வாகிகள் மூலம் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

உடல் நலம், சிகிச்சை முறைகள் கேட்டு தைரியமாக இருக்கும்படி அறிவுரை சொன்னாராம்.

அவர் நலம் பெற்று வீடு திரும்ப இறைவனிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளார் சிம்பு.

நீங்க இல்லாம நான் இல்ல…. என்ற சிம்புவின் பாடலுக்கு சரியானவர் சிம்பு என்று சொன்னால் அது மிகையல்ல.

Simbu enquire about his fan who is affected by Corona

சசிகுமார் ரூ.25000 உதவி; கடனை திருப்பி கொடுப்பேன் என விவசாயி உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்வேறு துறைகள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது.

முக்கியமாக நமக்கு உணவிடும் விவசாயிகளின் வாழ்வதாரமே முற்றிலும் முடங்கியுள்ளது.

விவசாய மக்களுக்கு ஊரடங்கு கடுமையாக விதிக்கப்படாவிட்டாலும் உற்பத்தி செய்த பொருட்களை சரிவர விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன் இணையத்தில் ஒரு வீடியாவை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் தன் வாழைத் தோட்டத்தின் வீடியோவை வெளியிட்டுருந்தார்.

அந்த வீடியோவைப் பார்த்த முன்னாள் பத்திரிகையாளரும், கத்துக்குட்டி பட இயக்குனருமான இரா.சரவணன் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

“வெளிநாட்டு வாழ்க்கை வேணாம்னு துபாய்ல இருந்து ஊருக்கு வந்து, இந்த வருஷம் 3.5 ஏக்கர் வாழை போட்டேன்.

தார் வெட்டுற பருவம். நல்லா விளைஞ்சு நிக்குது. ஆனா வெட்ட வழியில்லை. நட்டாத்துல நிக்கிறேன். யாராவது உதவுங்களேன்” எனக் கதறுகிறார் மதுரை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இரா.சரவணனின் இந்த ட்வீட்டைப் பார்த்த இயக்குனர் மற்றும் நடிகரான சசி குமார் உடனடியாக அந்த விவசாயிக்கு 25 ஆயிரம் ரூபாய் அனுப்பி உதவி செய்துள்ளார்.

இதனால் மனம் நெகிழ்ந்த கோபாலகிருஷ்ணன், ‘சசி சார் உதவியா கொடுத்தாலும், அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்கு திருப்பிக் கொடுப்பேன்’ என்று கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எதையுமே இலவசமாக பார்க்கும் மக்கள் மத்தியில் பெற்ற உதவியை கடனாக நினைத்து திருப்பி கொடுப்பேன் என்று கூறிய இந்த விவசாயி உயர்ந்து நிற்கிறார்.

Actor Sasikumar help farmer but farmer says he will re pay

https://twitter.com/erasaravanan/status/1258607551752671232

More Articles
Follows