ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கொரோனா தடுப்பு சிகிச்சைக்கு ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் ரெம்டெசிவர் மருந்துக்கு டிமாண்ட் ஏற்ப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் ரெம்டெசிவர் மருந்திற்காக பொதுமக்கள் நீண்ண்ண்ணட வரிசையில் காத்திருக்கும் நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்து விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னையில் ஓரு சில இடங்களில் ரெம்டெசிவருக்காக, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, ரெம்டெசிவரை தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வரும் 18 ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும்.

அதைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், விற்பனை மையங்களுக்குச் சென்று மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Govt decides to sell Remdesivir directly to private hospitals

Overall Rating : Not available

Latest Post