தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 520கிமீ தொலைவில் வலு கொண்டுள்ளது.
இது தொடர்ந்து புயலாகவும் நாளை மறுநாள் தீவிர புயலாக மாறுகிறது.
எதிர்வரும் 25 ம் தேதி நகர்ந்து காரைக்காலுக்கும், மகாபலிபுரத்துக்கும் இடையே கரையை கடக்கவுள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் 26ம் தேதி வரை கன மழை பெய்யும்.
இந்த நிலையில் ஏழு மாவட்டங்களில் நாளை, (நவம்பர் 24) மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தம் என அறிவித்துள்ளது.
நாளை நவம்பர் 24, 25-ம் தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
TN govt announced bus transport will be suspended for 7 districts
