சென்னையில் 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி; விதிமுறைகள் என்ன?

industrial estate in chennaiகொரோனா வைரசை கட்டுப்படுத்த கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

இந்த நிலையில் சில தளர்வுகள் தற்போது வணிக நிறுவனங்களை திறக்க மாநில அரசுகள் அனுமதித்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னை, கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

25 சதவீத தொழிலாளர்களுடன் ஆலைகள் இயங்கலாம் என தெரிவித்துள்ளனர்.

முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு பணிபுரிய அனுமதி இல்லை.

மேலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், தொழிலாளர்களுக்கு தினமும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் விடுப்பு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமும் காலை மற்றும் மாலையில் தொழிற்சாலையை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும், தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசின் வழிகாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Overall Rating : Not available

Latest Post