ஊரடங்கில் வெளியே வந்த நபர்.. அபராதம் விதித்த போலீசார்.. திருப்பி கொடுக்க உத்தரவிட்ட முதல்வர்

தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் திருவள்ளூர் செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்காக மருந்து வாங்க பைக்கில் திருவள்ளூருக்குச் சென்றார்.

செல்லும் வழியில் அவரை மறித்த போலீசார் ஊரடங்கை மீறியதாகக் கூறி 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

அந்த நபர் மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை அபராதமாகச் செலுத்தியுள்ளார்.

இதனால் மருந்து வாங்க பணமில்லாமல் வெறுங்கையுடன் வீடு திரும்பியுள்ளார்

இந்த சம்பவத்தை அவர் முதலமைச்சருக்கு ட்விட்டரில் தெரிவித்தார்.

இதனைப்பார்த்த தமிழக முதல்வர் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லியுள்ளார்

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் 500 ரூபாயைத் திருப்பிக் கொடுத்துள்ளார் திருவள்ளூர் காவல் ஆய்வாளர்.

மேலும் அவர் மகனுக்குத் தேவையான மருந்துகளையும் இலவசமாக வாங்கி கொடுத்துள்ளார்.

TN Cm request Police to return the charged fine to poor man

Overall Rating : Not available

Latest Post