தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
தமிழருவி மணியன் தலைமையில் உள்ள காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைய உள்ளதா? என்று கேட்டனர்.
இணைந்தால் மகிழ்ச்சி. என்றார்.
ரஜினி மக்கள் மன்றத்தில் இதுவரை ஒரு கோடி இணைந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளதே இது உண்மையா? என்று கேட்டனர்.
அந்த செய்தி தவறானது. அந்த இலக்கை நோக்கி பயணிக்கிறோம். என்றார்.
பொதுவாக புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் கூட எங்கள் கட்சியில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இரண்டு கோடி மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பார்கள்.
ஆனால் முதன்முறையாக அரசியலில் இறங்கும் ரஜினி இப்படி உண்மைய சொல்லியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் காமராஜர் போன்ற தலைசிறந்த அரசியல்வாதிகள் தமிழகத்தில் உருவாக வேண்டும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Till now 1 crore members not joined in Rajini Makkal Mandram says Rajini