இந்தியாவில் டிக் டாக்-க்கு தடை; ரூ. 45000 கோடி வருவாய் இழப்பு என சீன ஊடகம் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் ஜூன் 15-ம் தேதி லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனால் இருநாடுகளும் தங்களது எல்லையில் படைகளை குவித்து வருகின்றனர்.

சில தினங்களில் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக்-டாக், ஹெலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா அரசு கண்டனம் தெரிவித்தும் உள்ளது.

இந்த நிலையில், சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ டிக்-டாக் தடையால் அதன் தாய் நிறுவனமான ‘பைட்-டான்ஸ்’ நிறுவனத்திற்கு ரூ. 45,000 கோடி வருமானம் இழப்பீடு ஏற்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

டிக்-டாக் செயலியை அமெரிக்காவை விட இந்தியாவில் 2 மடங்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசு தடை விதித்துள்ளதால் சீன செயலிகள் மீதான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டிவி-யிலிருந்து அடுத்த ஹீரோயின்..; ஜெய்க்கு ஜோடியாகும் திவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் என்பதை நாம் அறிவோம்.

அதுபோல மேயாத மான் பட நாயகி பிரியா பவானி சங்கரும் டிவியில் இருந்து வந்தவர் தான். இவர் புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் டிவி சீரியல்கள் நடித்து வந்தார்.

தற்போது செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி என்பவரும் வெள்ளித்திரையில் நாயகியாக வலம் வரவுள்ளார்.

இவர் ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் திவ்யா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

மேலும் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்தில் திவ்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Pure Evil Character… ‘மாஸ்டர்’ பட வில்லன் மக்கள் செல்வன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வில்லனாக ஆரம்பித்து தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய்சேதுபதி.

ஆனாலும் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

விக்ரம் வேதா படத்தில் ஹீரோ என்றாலும் நெகடிவ் கேரக்டரில் மிரட்டியிருந்தார்.

தற்போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.

கொரோனா பிரச்சினையால் மாஸ்டர் படம் ரிலீஸ் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் தனது கேரக்டர் பற்றி மனம் திறந்துள்ளார் விஜய் சேதுபதி.

“மாஸ்டர் திரைப்படத்தில் நான் கொடூரமான வில்லனாக நடித்திருகிறாராம். அதாவது “Pure Evil Character” என தெரிவித்துள்ளார்.

பயணங்கள் முடிவதில்லை.: தனியார் ரயில்கள் தலைவலியா.? ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாகவே அரசின் பல துறைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த வரிசையில் ரயில்வேயும் இணைந்துள்ளது.

151 பயணிகள் ரயில்கள் மற்றும் 109 வழித்தடங்களை தனியாருக்கு விட விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.

இந்த ரயில்களை, இரு வழிகளில் தினமும் இயக்கவும், வாரத்தில்,ஒரு நாள், இரண்டு நாள் மற்றும் மூன்று நாட்கள் இயக்கவும் அழைப்பு கோரப்பட்டுள்ளது.

இதே போல் தினசரி ரயில் இயக்க, தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மங்களூர் – சென்னைக்கு வாராந்திர ரயில், சென்னை – மும்பைக்கு வாரம் இருமுறை, கொச்சுவேலி கவுஹாத்தி இடையே வாரத்தில் மூன்று நாட்கள் என, 14 வழித்தடங்களில் ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகத்தால் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வேயில், தமிழகம்,கேரளா மற்றும் ஆந்திராவில், 14 வழித்தடங்களில், 26 தனியார் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது.

35 ஆண்டுகளுக்கு தனியாருக்கு லைசென்ஸ் தரப்படவுள்ளது.

இதில் தனியார் ரயில்களே கட்டணம் நிர்ணயம் செய்துகொள்ள முடியும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

(கையில் போதிய பணமின்றி பஸ் பயணத்தை தவிர்த்து ரயிலை நம்பியவர்கள் தற்போது மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்படுவார்கள் எனத் தெரிகிறது.)

இந்த தனியார் ரயில்களில் டிரைவரும் கார்டும் (பாதுகாவலர்கள்) மட்டும் ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

மற்ற ஊழியர்கள் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஊழியர்களாக இருப்பார்கள்.

ஒரு ரயில் 16 பெட்டிகளுடன் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயண நேரம் பெரிய அளவில் குறையும்.

தற்போது உள்ளது போல இல்லாமல் தனியார் ரயில்கள் நவீன தொழில்நுட்ப வசதியுடன் வடிவைக்கப்படும்.

இந்த தனியார் ரயில் சேவை தொடர்பாக ரயில்வேயின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது…

இந்த நவீன ரயில்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.

ரயில்வேயில் பாதுகாப்பை அதிகப்படுத்தி, உலகத் தரம்வாய்ந்த பயணத்தைப் பயணிகளுக்கு வழங்கவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

முதல்கட்டமாக 109 வழித்தடங்களில், 151 நவீன ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும்.

ரயிலை நிர்வாகம் செய்யும் தனியார் துறையினர், குறித்த நேரத்தில் இயக்குதல், நம்பகத்தன்மையை ஏற்படுத்துதல், ரயிலைப் பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடுமுழுக்க பல்வேறு வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க மும்பை – 2, டெல்லி -2, சண்டிகார், சென்னை, செகத்திராபாத், ஜெய்பூர், பெங்களூர் உட்பட 14 தொகுப்புகளாக என பிரிக்கப்படவுள்ளன.

சென்னை தொகுப்பில் மட்டும் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை – மதுரை, சென்னை – மங்களூர், சென்னை – கோயம்புத்தூர், திருச்சி – சென்னை, கன்னியாகுமரி – சென்னை, சென்னை – புதுடெல்லி, சென்னை – புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

एक दो तीन … हवा हवा… பாடல் புகழ் டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

30-40 வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியாவை ஹிந்தி பாடல்களே ஆக்ரமித்து இருந்தன.

அந்த சமயத்தில் பாலிவுட்டில் பிரபலமான ‘ஏக் தோ தீன்’, (एक दो तीन ), ‘ஹவா ஹவா’ हवा हवा ‘தம்மா தம்மா’ போன்ற பாடல்கள் தென்னிந்தியாவில் மிகப்பிரபலம்.

இந்த சூப்பர் டூப்பர் பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் தான்.

ஸ்ரீதேவி மற்றும் மாதுரி தீட்சித் ஆகிய நடிகைகளின் நடனத்திற்கு இவர் தான் ஆஸ்தான நடன இயக்குர்.
இவர் மூன்று முறை தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஏற்பட்ட திடீர் மரடைப்பால் சரோஜ் கான் உயிரிழந்தார்.

இவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையிலும் கொரோனா இல்லை எனத் தெரியவந்துள்ளது.

சரோஜ் கானுக்கு ராஜு கான் என்ற மகனும், சுகையான கான் என்ற மகளும் உள்ளனர்.

சரோஜ் கானின் இயற்பெயர் நிர்மலா. இந்துவாகப் பிறந்து பின்னர் முஸ்லிம் மதத்துக்கு மாறினார்.

சரோஜ் கான் தனது 13 வயதில், நடன இயக்குநர் சோஹன்லாலைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது சோஹன் லாலுக்கு 41 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Saroj Khan who made Sridevi Madhuri dance passed away

சாத்தான்குளம் 4 போலீஸ் மீது இரட்டைக் கொலை வழக்கு; 5 போலீஸ் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 4 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் வழக்கில் தொடர்புடையதாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரத்தை இரட்டை கொலை வழக்காக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் அடுத்தடுத்த நாட்களில் இறந்ததால் தனித்தனியே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

சிபிசிஐடி போலீசார் நேற்று கொலை வழக்காக பதிவு செய்த நிலையில் தற்போது இரட்டை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் வாக்குமூலம் கொடுத்த தலைமை பெண் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவருக்கும் கொடுக்கப்பட்ட சிகிச்சை, உடல்நிலை குறித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீசார் திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows