தூய்மை இந்தியா பற்றிய ஆவணப்படம் துப்பறிவு 2020

தூய்மை இந்தியா பற்றிய ஆவணப்படம் துப்பறிவு 2020

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thupparivu 2020 documentary film regarding Clean Indiaஆச்சி கிழவி திரைக்கூடம் சார்பில் மா.திரவியபாண்டியன் தயாரிப்பில் சொழிந்தியம் வழங்கும் ‘துப்பறிவு’ 2020 இசை ஆல்பம் ஒன்று உருவாகியுள்ளது.

இது தூய்மை இந்தியா இயக்கம் சார்ந்து உருவாகியிருக்கிறது. ஒரு திட்டம் வெற்றி பெற அரசு மட்டும் போதாது மக்கள் ஒத்துழைப்பும் தேவை என்று வலியுறுத்துகிறது இந்த ஆல்பம்.

இதன் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தமிழ் ஆல்பத்தை வெளியிட்டார். தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தி ஆல்பத்தை வெளியிட்டார்.

விழாவில் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது… “இது ஒரு குடும்ப விழா வாக உணர்கிறேன். இதை இயக்கியுள்ள தினேஷின் தந்தை திரவிய பாண்டியன் எது செய்தாலும் என்னிடம் கேட்டுத்தான் செய்வார்.

தன் மகன் இம் முயற்சியில் இறங்கிய போது வணிக அம்சங்களுக்கு இடம் தராமல் இனம் மொழி,தேசம் என்று உயர்ந்த நோக்கத்துக்கு ஆதரவாக இருந்து ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

சினிமாவில் இந்த தம்பி நல்ல இலக்கை நோக்கிச் சென்று வெற்றி பெறுவார். இவர் ஒரு கமர்ஷியல் படம் செய்ய வேண்டும். எனக்கு ஒரு படம் இயக்க வேண்டும். ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ் எல்லாம் கூட கமர்ஷியல் படத்தில்தான் நல்ல கருத்தையும் சொல்வார்கள். அதே மாதிரி செய்யுங்கள்.” என்று கூறி வாழ்த்தினார்.

பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சுபாஷ் பேசும் போது, “ஒரு டாக்டர் நோயாளியைக் காப்பாற்றவும் ஊசி போடலாம். ஒருவரை விஷ ஊசி போட்டுக் கொல்லவும் ஊசி போடலாம்.

இப்படி ஊசியை எப்படியும் பயன்படுத்தலாம். அதுபோல் தான் சினிமாவும் என்று கூறலாம். அப்படி நல்ல நோக்கத்துக்கு இந்த ஆல்பம் உருவாகியுள்ளது பெரிய விஷயம். வாழ்த்துகள் ” என்றார்.

தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் பேசும்போது, ” இருக்கும் தெரு சுத்தமானால் நாடு சுத்தமாகும். அப்பா ஒரு நல்ல தயாரிப்பாளர் மகனுக்கு நல்ல அங்கீகாரம் பெற இந்த ஆல்பத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். வாழ்த்துகள்.” என்றார்.

விழாவில் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “

துப்பறிவு என்கிற தலைப்பைப் பார்த்து விட்டு ஏதோ ஜேம்ஸ் பாண்ட் ரகப் பட மோ என்று நினைத்தேன். இங்கு வந்த பிறகுதான் சமூகத்துக்குத் தேவையான ஒன்று என்று தெரிந்தது. படத்தில் குப்பை சேர்க்காதீர் என்று சொல்ல நினைக்கிற இளைஞனின் கோபம் புரிகிறது.

நீங்கள் சினிமாவுக்கு வந்து நல்ல படம் எடுப்பீர்கள். உங்கள் தமிழ் உணர்வைப் பாராட்டுகிறேன். தமிழனாக இருப்பதே பெருமை. வாழ்க. தமிழ்வெல்க. ” என்று கூறினார்.

ஒரு படைப்பில் கேள்வி கேட்டால் அரசு விரோதமா? என்று இந்த ஆவணப்பட இயக்குநர் தமிழ் ஆப்தன் என்கிற தினேஷ் பேசும் போது ஆதங்கமாகக் கேட்டார்.

அவர் பேசும் போது “இந்த முயற்சிக்கு வந்திருந்து வாழ்த்த வந்துள்ள திரையுலக முன்னோடிகருக்கு என் நன்றி.” என்றார்.

‘துப்பறிவு 2020 இசை ஆல்பம் இயக்கிய அனுபவம் பற்றிக் கூறும்போது, ” இது தூய்மையாக இருப்பதை வலியுறுத்தவே எடுக்கப்பட்டது. ஒரு நாடு சுத்தமாக இருக்க அரசு முயன்றால் மட்டும் போதாது.

மக்களும் ஒத்துழைக்க வேண்டும். நாட்டில் ஏராளமாகக் குவிந்து கிடக்கும் குப்பைகள் எல்லாம் மக்கள் போட்டது தான். மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

ஆனால் தணிக்கையில் சான்றிதழ் தரத் தயங்குகிறார்கள். தராமல் ஏதேதோ சொல்லி இழுத்தடிக்கிறார்கள். ஆறு ரிவ்யூ ஆகி விட்டது. இன்னமும் சான்றிதழ் தரவில்லை. போராடிச் சோர்வு அடைந்து விட்டோம்.

கேள்வி கேட்டால் அரசை எதிர்ப்பதாக தவறாக நினைக்கிறார்கள். பிரச்சினை என்று இருந்தால் கேள்வி வரத்தான் செய்யும். ஒரு படைப்பு கேள்வி கேட்டால் அரசு விரோதமா? கேள்வி கேட்டாலே பயப்படுவது ஏன்? போராடிப் பார்த்து விட்டு இன்று மாலை ஆன்லைனில் வெளியிடுகிறோம்.” என்றார்.

இவ்விழாவில் ஆல்பத்தில் நடித்துள்ள பாடகர் வீரமணிதாசன், இசையமைப்பாளர் பினூப் ராகினி.ஒளிப்பதிவாளர் அசோக் பன்னீர்செல்வம் உள்ளிட்ட படக்குழு வினரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆவணப் படத்துக்காக வாரணாசி, அலகாபாத்,சென்னை போன்ற பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

துப்பறிவு 2020 யூடியூப் தளத்தில் உலகெங்கும் உலா வரவுள்ளது.

Thupparivu 2020 documentary film regarding Clean India

Thupparivu 2020 documentary film regarding Clean India

 

தன் பிறந்தநாளில் பல வருட கனவை செய்துக் காட்டிய சௌந்தரராஜா

தன் பிறந்தநாளில் பல வருட கனவை செய்துக் காட்டிய சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Soundararajaசுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் ஹீரோக்களின் நண்பராக நடித்த நடிகர் சௌந்தரராஜா, எல்லா ஹீரோக்களுக்கும் நண்பராக நடித்த கவுண்டமணியுடன் ஹீரோவாக “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தின் மூலமாக அறிமுகமானார்.

தங்க ரதம், ஒரு கனவு போல, கள்ளன், சிலுக்குவார்பட்டி சிங்கம், திருட்டுப்பயலே 2, என சௌந்தரராஜாவின் திரைப்பயணம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஆகஸ்டு 11. சௌந்தரராஜாவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள உமையாள்பரணச்சேரி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 25 வளர்ந்த பெரிய மரக்கன்றுகளை மாணவர்களுடன் சேர்ந்து நட்டு, அதை வளர்க்க ஏற்பாடு செய்து தன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார், சௌந்தரராஜா.

தன் சொந்த செலவில், முறையாக பெரிய குழிகள் தோண்டி, அடிப்படை உரமிட்டு, ஆடு, மாடுகள் கடிக்காமல் இருக்க, ரூபாய் 1200க்கு மேல் விலையுள்ள ஆளுயர பாதுகாப்பு கூண்டுகள் ஒவ்வொரு மரக்கன்றுக்கும் ஏற்பாடு செய்து, அவற்றை முறையாக வளர்க்க உறுதி, மற்றும் ஏற்பாடும் செய்திருக்கிறார் சௌந்தரராஜா. ஏன் எனில் பெயருக்கு மரக்கன்று நட்ட நிகழ்வாக அது இருக்கக்கூடாது என்று சௌந்தரராஜா விரும்பியதே காரணம்.

இதுபற்றி சௌந்தரராஜா கூறுகையில்…

இந்த பிறந்தநாளில் என் பலவருடக்கனவு நிறைவேறியது. சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல மாமன்னன் அசோகன் மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார்னு பாடம் படிச்சிருப்போம்.

அதுக்கு அப்புறம் நம்ம, ஒவ்வொருத்தரும் தனி மனிதனாக எவ்வளவு மரங்களை நட்டோம், எவ்வளவு குளங்களை வெட்ட காரணமாக இருந்தோம்னு கேட்டா, அது பெரிய கேள்விக்குறி தான்.

என் வாழ்நாளில் நிறைய மரங்களை நடணும்னு பெரிய கனவு எனக்கு. நடுறது மட்டுமில்லை. அதை முறையா பராமரிச்சு வளர்க்கணும். என் வாழ்நாளில் 10 இலட்சம் மரங்கள் நடணும்கிறது என் கனவு. அது நிறைவேற நான் மட்டும் போதாதுன்னு நெனைச்சேன்.

அதனால், அப்துல்கலாம் அய்யா வழியில் மாணவர்களோட பேச முடிவெடுத்தேன். இப்போ என்னோட இந்த பிறந்தநாளில் 120 மாணவர்களுடன் 25 மரக்கன்றுகள் நட்டதை என் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வா நினைக்கிறேன்.

அந்த மாணவர்கள் படிக்கிற பள்ளியிலேயே அந்த மரங்களை நட்டது இன்னும் மகிழ்ச்சியான விசயம். மாணவ, மாணவிகளிடம் பேசிய போது, இந்த மரக்கன்றுகளை 25 மரக்கன்றுகளாக பார்க்காமல் 25 குழந்தைகளாக நேசித்து வளர்க்கவேண்டும். வளர்ப்பீர்களா என்று கேட்டேன்.

மிகவும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து கோரஸாக வளர்ப்போம் என்றார்கள்.

இந்த நிகழ்வில் எனக்கு உற்றதுணையாக இருந்த தலைமையாசிரியர் குணசேகரன் சார், மற்ற ஆசிரியர்கள், ஆசிரியைகள் முல்லைவனம், அகந்த், சானா, பாடலாசிரியர் முருகன் மந்திரம், நண்பர் அசோக், உள்ளிட்ட அனைவருக்கும் என் அன்பையும் நன்றியையும் சொல்லிக்கொள்கிறேன்.

இன்னும் சில வருடங்களில் மரங்கள் வளர்ந்து அப்போது படிக்கிற மாணவர்களுக்கு நிழல் தரும். அந்த சந்தோஷத்தை இப்போதே உமையாள்பரணச்சேரி அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் எனக்குத் தந்து உறுதி அளித்தார்கள். இதைப்போலவே மாணவர்களோடும் மக்களோடும் தொடர்ந்து பேசி நிறைய மரங்கள் வளர்க்கச்செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து செய்வேன்.

அதோடு மாணவர்களிடம் பேசிய சௌந்தரராஜா, தேர்தலில், சாதி, மத அடிப்படையிலோ, பணம் வாங்கிக்கொண்டோ ஓட்டு போடக்கூடாது என்று உங்கள் அப்பா, அம்மாவிடம், சகோதர, சகோதரிகளிடம் உறுதியாக சொல்லவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆள் உயரத்திற்கு வளர்ந்த பூவரசு, புங்கம், நாவல், ஐந்து இதழ் பாலை, வேம்பு ஆகிய வகையில் 25 மரக்கன்றுகள், இயற்கை அடி உரம் இடப்பட்டு நடப்பட்டது நட்ட நாளில் இருந்து தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதால் சௌந்தரராஜா உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Actor Soundararaja Tree Planting with 120 Govt Shool Students

Actor Soundararaja Tree Planting

பாக்யராஜ்-டிஆர் நிலைமை தெரியும்ல; ரஜினி-கமலுக்கு அமைச்சர் அட்வைஸ்

பாக்யராஜ்-டிஆர் நிலைமை தெரியும்ல; ரஜினி-கமலுக்கு அமைச்சர் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN minister Sellur Raju advice to Rajini and Kamalதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, கமல் மற்றும் ரஜினி ஆகியோரின் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆரை போல அரசியலுக்கு வந்த நடிகர்கள் சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகியோரின் நிலைமைமைய ரஜினி, கமல் ஆகியோர் அறியாதவர்கள் அல்‌ல.

சீன மற்றும் பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்தபோது, தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் எம்ஜிஆர் நிதியாக கொடுத்தார்.

ஆனால் ரஜினி, கமல் இருவரும் மக்களுக்கு என்ன நன்மை சொல்லியிருக்கிறார்கள். என்ன செய்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

TN minister Sellur Raju advice to Rajini and Kamal

அசிங்கமா திட்டுறாங்க; அதான் போறேன்… சிம்பு அதிரடி முடிவு

அசிங்கமா திட்டுறாங்க; அதான் போறேன்… சிம்பு அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu quits twitter and clarifies reasonsஅஜித், விஷால், விக்ரம், விஜய்சேதுபதி உள்ளிட்ட ஒரு சில தமிழ் நடிகர்களை தவிர பெரும்பாலான நடிகர்கள் ட்விட்டரில் உள்ளனர்.

தங்கள் படங்களின் தகவல்கள் மற்றும் இதர அறிக்கைகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் சிம்புவும் தன் ரசிகர்களுடன் இதில் அடிக்கடி கலந்துரையாடுவார்.

இந்நிலையில் இனி தான் சமூக வலைத்தளங்களை உபயோகப்படுத்த போவது இல்லை எனவும் அதிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன் குரலை பதிவு செய்து பதிவிட்டுள்ளார். அதில்…

எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் நேர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.

அதில் ஒரு பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது. ஒரு நட்சத்திரத்திற்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதைர கேட்கிறேன்.

நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்” #HappyIndependenceDay என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஆடியோ பதிவில்…

ஒருவர் ஒரு கருத்தை பதிவிட்டால், சிலர் அதை கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வாய்க்கு வந்தபடி திட்டுகின்றனர்.

எது சொன்னாலும் அதுபற்றி விமர்ச்சிக்கின்றனர்.

சிலரை வாழ்த்தவும், என் ரசிகர்களுடன் பேச முடியாமல் போகுமே என்ற கவலை எனக்குள்ளது.

ஆனால் வேறு வழியில்லாமல் ட்விட்டரில் இருந்து விலகுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Simbu quits twitter and clarifies reasons

str tamil letter

கமலின் வாழ்க்கையை மாற்றிய படங்கள்; ரஜினி படமும் உண்டு

கமலின் வாழ்க்கையை மாற்றிய படங்கள்; ரஜினி படமும் உண்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan picks his 70 favourite movies worldwideஇந்திய சினிமாவின் சகலகலா வல்லவன் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் மட்டும்தான்.

குழந்தையாக இருக்கும்போதே நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது சினிமாவுலகில் மட்டும் 58 ஆண்டுகளை கடந்துவிட்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

அண்மையில் ஆங்கில வலைத்தளத்திற்கு அளித்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணம் பற்றியும், தன் வாழ்க்கையை மாற்றிய சில படங்கள் பற்றியும் தெரிவித்திருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்ட 70 படங்கள் வரிசை இதோ…

இதில் ஒரு சில படங்கள் தான் ரஜினியுடன் நடித்த படங்களை குறிப்பிட்டுள்ளார்.

• Kunku (1937)
• Chandralekha (1948)
• Parasakthi (1952)
• Devadasu (1953)
• Andha Naal (1954)
• Jhanak Jhanak Payal Baje (1955)
• The Apu trilogy (1955, 1956, 1959)
• Mayabazar (1957)
• Ajantrik (1958)
• Kagaz Ke Phool (1959)
• Meghe Dhaka Tara (1960)
• Mughal-E-Azam (1960)
• Ganga Jamuna (1961)
• Chemmeen (1965)
• Ennathan Mudivu (1965)
• Padosan (1968)
• Sudigundalu (1968)
• Bhuvan Shome (1969)
• Samskara (1970)
• Anubhavangal Paalichakal (1971)
• Tere Mere Sapne (1971)
• Pakeezah (1972)
• Vamsha Vriksha (1972)
• Achanak (1973)
• Garam Hawa (1973)
• Kaadu (1973)
• Nirmalyam (1973)
• Ankur (1974)
• Bhootayyana Maga Ayyu (1974)
• Aval Oru Thodal Kathai* (1974)
• Apoorva Raagangal* (1975)
• Chomana Dudi (1975)
• Hamsageethe (1975)
• Sholay (1975)
• Harmonium (1976)
• Swapnadanam (1976)
• Manmadha Leelai* (1976)
• 16 Vayathinile* (1977)
• Avargal* (1977)
• Ghatashraddha (1977)
• Kodiyettam (1977)
• Manavoori Pandavulu (1978)
• Maro Charitra* (1978)
• Red Rose* (1978)
• Sommokadidi Sokokadidi* (1978)
• Moondram Pirai* (1980)
• Sankarabharnam (1980)
• Amavasya Chandrudu* (1981)
• Ee Nadu (1982)
• Ardh Satya (1983)
• Masoom (1983)
• Sagara Sangamam* (1983)
• Malgudi Days (1986)
• Naamukku Parkkan Munthiri Thoppukal (1986)
• Swati Mutyam* (1986)
• Nayakan* (1987)
• Pushpak* (1987)
• Thaniyavarthanam (1987)
• Aporva Sagotharargal* (1989)
• Thevar Magan* (1992)
• Drohkaal (1994)
• Mahanadi* (1994)
• Hey Ram* (2000)
• Anbe Sivam* (2003)
• Virumaandi* (2004)
• Dasavathaaram* (2008)
• Vishwaroopam* (2013)
• Manam (2014)
• Dangal (2016)
• Thithi (2016)

Kamal Haasan picks his 70 favourite movies worldwide

சிவகார்த்திகேயன் படத்திற்கு மட்டும் தனிச்சட்டமா..? சுரேஷ்காமாட்சி

சிவகார்த்திகேயன் படத்திற்கு மட்டும் தனிச்சட்டமா..? சுரேஷ்காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and suresh kamatchiசிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் அடுத்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் விளம்பரம் இன்று தினந்தந்தியில் முழு பக்க அளவில் வெளியானது.

இதுகுறித்து தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கூறியதாவது…

தினத்தந்தியில் வேலைக்காரன் படத்தின் முழுபக்க விளம்பரம்.தமிழ் சினிமாவில் எடிட்டர் மோகன் அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் தனி சட்டமா?

More Articles
Follows