நான் ஆல்ரெடி அரசியல்வாதிதான்…; இரும்புத்திரை இசை விழாவில் விஷால்

நான் ஆல்ரெடி அரசியல்வாதிதான்…; இரும்புத்திரை இசை விழாவில் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Those who do service to public is politician says Vishal at Irumbu Thirai audio launchவிஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள இரும்புதிரை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷால், விஷாலின் தாயார் லட்சுமி தேவி, தந்தை ஜி.கே. ரெட்டி, இயக்குநர் மித்ரன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகை குட்டி பத்மினி, இயக்குநர் லிங்குசாமி, கில்ட் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன், நடிகர் ராஜ் கிரண், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், FEFSI R.k. செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழா துவங்கியதும் கிட்னி பைலியர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகனான விஷால் வர்ஷனுக்கும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகளான N. மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி அவர்களுக்கு நன்கொடையை வழங்கினார். மேடையில் அவருடன் நடிகை குட்டி பத்மினியும் இருந்தார்.

விஷால் பேசியதாவது…

சமூக பிரச்னையை பற்றி படத்தில் பேசும் போது அது மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும். யுவன் ஷங்கர் ராஜா என்னுடைய குடும்ப நண்பர். அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். யுவன் இசையில் பாடல் நன்றாக வந்துள்ளது. படத்தின் பின்னணி இசைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

இரும்புத்திரை மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம். அதை இந்திய இராணுவத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன். இப்படத்தில் இடம்பெறும் ஊழல் எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கும். இப்படம் தாமதமாக வெளியாவதற்கு நான்தான் காரணம் அதற்கு மனிப்பு கேட்டு கொள்கிறேன்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் இரும்புத்திரை முக்கியமான திரைப்படம். இப்படத்தில் வரும் பிரச்னையை என்னுடைய தந்தையும் தன் வாழ்வில் சந்தித்துள்ளார்.

என்னுடைய தந்தை போல் எனக்கும் மிலிட்டரி ஆபிசர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது இந்த படத்தில் இராணுவ வீரனாக நடித்துள்ளேன்.

மக்களுக்கு சேவை செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான். அப்படி பார்த்தால் நானும் அரசியல்வாதிதான்.
இரும்புத்திரை என்னுடைய 24வது திரைப்படம். என்னுடைய அனைத்து படங்களுக்கும் ஆதரவு அளித்ததற்கு நன்றி என்றார் விஷால்.

R.K. செல்வமணி பேசியது :- அதிரடி பாடலில் விஷாலை பார்த்தபோது அமிதாப் பச்சனை பார்த்தது போல் இருந்தது. விஷால் ஒரு சிறந்த நடிகர். நான் பேசுவதற்கு மேடை 2௦ வருடம் கழித்து தான் எனக்கு கிடைத்தது.

இயக்குநர் மித்ரன் பேசுவதை பார்க்கும் போது நன்றாக இருந்தது. இளம் இயக்குநர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார் R.K.செல்வமணி.

Those who do service to public is politician says Vishal at Irumbu Thirai audio launch

Irumbu Thirai Audio Launch Photos

மலையாளியிடம் உள்ள சகிப்புத்தன்மை தமிழனிடம் இல்லை..: பார்த்திபன்

மலையாளியிடம் உள்ள சகிப்புத்தன்மை தமிழனிடம் இல்லை..: பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthibanஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேணி”. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்.

இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

முழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனு ஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ஜெயப்ரதா, பார்த்திபன், ரேவதி, ரேகா, அனுஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சுஹாசினி மணிரத்னம் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்த்திபன் பேசுகையில், “இந்த நிகழ்ச்சி நடைபெரும் இடம் க்ரீன் பார்க், பசுமைப் பூங்கா. இந்த இடம் மட்டுமே பசுமைப் பூங்காவாக இல்லாமல், இந்த நாடே பசுமைப் பூங்காவாக மாற வேண்டுமெனில் முக்கியமாக தண்ணீர் தேவை. ஆன்மீக அரசியலைப் பற்றி சமீபத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள், இது நீர்மீக அரசியல் பேசும் படம்.

இந்த நாட்டில் தண்ணீர் பிரச்சினை தீர வேண்டுமெனில் நதிகளை இணைக்க வேண்டுமென எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு மனித மனங்களை இணைக்க வேண்டும். அப்படி இதயங்களை இணைக்கும் ஒரு படமாக நிச்சயமாக “கேணி” இருக்கும். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு கேரள எல்லைக்குள் பிரிக்கப்படுகிற தமிழகத்தைச் சேர்ந்த கிணற்றுக்காக கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சேர்ந்து தமிழர் ஒருவர் போராடுவதே “கேணி” படத்தின் கதை.

இந்தப் படத்தை எடுத்திருப்பதும் ஒரு மலையாளி. பொதுவாக நீர் பிரச்சனை என்பது தமிழர்கள் சம்பந்தப்பட்டதோ, மலையாளிகள் சம்பந்தப்பட்டதோ இல்லை. அது மனிதர்கள் சம்பந்தப்பட்டது. தண்ணீரை வைத்துக் கொண்டு கேரளாவோ தமிழ்நாடோ அரசியல் செய்யலாம், ஆனால் கலைஞர்கள் அந்த அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். ஏனென்றால் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலையில்லை, பிரச்சனைகளைப் பேசிக்கொண்டே தான் இருப்போம்.

தமிழகத்தை விட கேரளாவில் கலைஞர்களுக்கான சுதந்திரம் என்பது அதிகமாக இருக்கிறது, அது பாராட்டிற்குரியது.

அங்கே திருவனந்தபுரம் ராஜாவைக் கூட விமர்சனம் செய்யலாம், இங்கே யாரையுமே விமர்சனம் செய்ய முடிவதில்லை. அதனால் தான் நல்ல விசயத்தை சொல்லும் இந்த “கேணி” படத்திற்குள் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

எனக்கு பெரியார் விருது கொடுத்த போது சில விஷயங்கள் பேசினேன். அதற்கு கூட சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்தளவிற்கு சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது.

அந்த வகையில் பார்க்கப் போனால் கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குகிறது. இந்தப் படம் நல்ல தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது பாராட்டிற்குரியது” என்று பேசினார்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்காக ஜீரோ டிகிரி பதிப்பகம் துவக்கம்

மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்காக ஜீரோ டிகிரி பதிப்பகம் துவக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Translating Tamil books into English Zero degree publishing launch event‘மொழிபெயர்ப்பு இலக்கியங்களை அதிகம் பதிப்பிக்க வேண்டும் என்ற நோக்கில், ‘ஜீரோ டிகிரி பப்ளிஷிங்’ என்ற பதிப்பகத்தை துவக்கி இருக்கிறோம்’ என, அதன் நிறுவனர்கள் கூறினர்.

சென்னை, எழும்பூர், மியூசியம் தியேட்டரில், ‘ஜீரோ டிகிரி பப்ளிஷிங்’ என்ற பதிப்பகம் துவக்கவிழா, நேற்று நடந்தது.

அதில், அதன் நிறுவனர்களான, ராம்ஜி, காயத்ரி ராமசுப்ரமணியன் ஆகியோர் பேசியதாவது:

தமிழ் எழுத்தாளர்களின் நுால்களை, இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்திற்கும்; மற்ற மொழிகளில் உள்ள இலக்கியங்களை தமிழுக்கும் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த பதிப்பகத்தை துவக்கி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

விழாவில், சாருநிவேதிதா எழுதிய, ‘ஜீரோ டிகிரி, அன்பெயித்புல் யுவர்ஸ், மார்ஜினல் மேன்,பைசாந்தியம்’ ஆகிய நுால்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நுால்கள் வெளியிடப்பட்டன.

மேலும், பட்டுக்கோட்டை பிரபாகரின், ‘மிட் ஏர் மிஷாப்ஸ், த வெர்டிக்ட் வில் சீக் யூ’ ஆகிய ஆங்கில மொழிபெயர்ப்புகள்; இந்திரா சவுந்தரராஜன் எழுதிய, ‘அவுட் ஆப் த புளூ’ என்னும் ஆங்கில மொழிபெயர்ப்பு, அராத்து எழுதிய, ‘நள்ளிரவின் நடனங்கள்’ ஆகிய, 10 நுால்கள் வெளியீடும் நடந்தது.

Translating Tamil books into English Zero degree publishing launch event

zero degree publishing launch event

ஜல்லிக்கட்டு பார்வையாளர் மரணம்; அவரது மகளை தத்தெடுத்தார் அபி சரவணன்

ஜல்லிக்கட்டு பார்வையாளர் மரணம்; அவரது மகளை தத்தெடுத்தார் அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Abi Saravanan adopted 10 year girl as his sisterஅலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற பாலமேடு கிராமத்தில் கடந்த ஜன-15 மாட்டுப்பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடந்தது.

இந்த நிகழ்வின்போது அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை நோக்கி ஆவேசமாக சீறிப் பாய்ந்த ஒரு காளை முட்டியதில் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து(19) என்பவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார்.

இறுதி சடங்கிற்கு ஆதரவு தரவேண்டிய ஜல்லிக்கட்டு பேரவையோ விழா கமிட்டியோ அல்லது லட்சகணக்கில் கார் பைக் தங்க வெள்ளி நாணயங்களை பரிசாக தந்த உபயதார்களோ அவரது உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியை கூடு செய்து தர முன்வரவில்லை என்பதுதான் கொடுமை.

இந்தநிலையில் உடலை போஸ்ட்மாடர்ம் செய்து உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு சில அரசு மருத்துவ ஊழியர்கள் லஞ்சம் கேட்ட அவலமும் நடந்தது.

இந்தநிலையில் அதே தினம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை கொண்டாடிக்கொண்டு இருந்த நடிகர் அபிசரவணன் இந்த செய்தியை கேள்விப்பட்டு உடனடி காளிமுத்துவின் இறுதிச்சடங்கிற்கான உதவியாக ஜந்தாயிரம் ருபாயை நேரில் சென்று தந்துவிட்டு, மறைந்த காளிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார்.

மேலும் தனது அண்ணனை இழந்து படிப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியான நிலையில் உள்ள காளிமுத்துவின் தங்கை பத்து வயது சிறுமிக்கு இனி அண்ணன் ஸ்தானத்தில் இருந்து அவளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டு படிப்பை தொடர உதவுவேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அபிசரவணன்.

இதற்குமுன் விவசாயிகள் போராட்டத்தின்போது டெல்லியிலேயே தங்கி அவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் அபிசரவணன், தற்கொலை செய்துகொண்ட சில விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தன்னால் இயன்ற உதவியை செய்ததுடன், மற்ற சில நல்ல உள்ளங்களிடமும் இருந்து அவர்களது வாழ்வாதாரத்திற்கான நிதி உதவியையும் பெற்று தந்துள்ளார்

தொடர்ந்து இதுபோன்று தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்துவரும் வளர்ந்து வரும் நடிகரான அபிசரவணனின் மனிதாபிமானம் போற்றுதலுக்குரியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Actor Abi Saravanan adopted 10 year girl as his sister

abi saravanan

அதர்வாவின் பூமராங் பட டைட்டில் லுக்கை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

அதர்வாவின் பூமராங் பட டைட்டில் லுக்கை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DT4gOkpVMAAqqEXஆர் கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் – ஷரதா ஸ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘இவன் தந்திரன்’.
இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ஆர்.கண்ணன் ஒரு புதிய படத்தை தயாரித்து இயக்கவிருக்கிறார்.

இதில் நாயகனாக அதர்வா நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புகழ் மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

மேலும் வில்லனாக ஹிந்தி நடிகர் உபேன் படேல் நடிக்கிறார்.

ரதன் இசையமைக்கவுள்ள இதற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படத்திற்கு ‘பூமராங்’ என தலைப்பிட்டுள்ளனர். இப்பட டைட்டில் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்

குடியரசு தினத்திலிருந்து தள்ளிப் போனது டிக் டிக் டிக்

குடியரசு தினத்திலிருந்து தள்ளிப் போனது டிக் டிக் டிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tik Tik Tikசக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் டிக் டிக் டிக்.

இது இமான் இசையில் உருவாகியுள்ள 100வது படமாகும்.

இந்திய சினிமாவில் முதன்முறையாக தயாராகியுள்ள விண்வெளி படம் இது என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் பாடல்கள், டீசர் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் ஜனவரி 26ஆம் தேதி படத்தை திரையிட நினைத்திருந்தனர்.

ஆனால் ஒரு சில காரணங்களால் தற்போது படத்தின் ரிலிஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

More Articles
Follows