‘தெறி’க்க விட இது பத்தாது… அடம் பிடிக்கும் விஜய் ரசிகர்கள்

‘தெறி’க்க விட இது பத்தாது… அடம் பிடிக்கும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theri movie 365 days celebrations by Vijay fansகடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி ரிலீஸ் ஆனது.

அனைத்து தரப்பு மக்களின் ஆதரவால் இப்படம் மாபெரும் ஹிட்டடித்த்து.

இந்நிலையில் இதன் ஓராண்டை கொண்டாடும் வகையில், தமிழகத்தில் உள்ள முக்கிய தியேட்டர்கள் விஜய் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுக்கள் ஒருசில மணி நேரத்திலேயே விற்று தீர்ந்தது.

எனவே இன்னும் கூடுதலாக காட்சிகளை திரையிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு திரையரங்குகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.

Theri movie 365 days celebrations by Vijay fans

பாரதிராஜாவுக்காக கை கோர்க்கும் ரஜினி-கமல்..?

பாரதிராஜாவுக்காக கை கோர்க்கும் ரஜினி-கமல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Kamal Bharathirajaஇயக்குனர் சிகரம் பாலசந்தர் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகிய இருவரின் பேரன்பை பெற்றவர்கள் ரஜினி மற்றும் கமல்.

இந்த இயக்குனர்கள் இயக்கும் படம் என்றால் இணைந்து நடிக்க, ஆர்வத்துடன் இருப்பார்கள்.

இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்பு தேடும் புதியவர்களுக்காக திரைப்பட கல்லூரி ஒன்றை தொடங்கவிருக்கிறார் பாரதிராஜா.

இதற்கு ‘பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா’ என்ற பெயரிட்டுள்ளார்.

இதில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து துறை சம்பந்தான பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளதாம்.

இந்த கல்லூரியின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினி-கமல் ஆகிய இருவரையும் பாராதிராஜா அழைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Rajini and Kamal may participate in Bharathiraja Film Institute opening ceremony

சிவகார்த்திகேயன் பெயருடன் கனெக்ட்டாகும் விஷ்ணு விஷால் படம்

சிவகார்த்திகேயன் பெயருடன் கனெக்ட்டாகும் விஷ்ணு விஷால் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Silkukuvarpatti Singam Sivakarthikeyanஎழில் இயக்கிய ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தை தயாரித்து நடித்தார் விஷ்ணு விஷால்.

காமெடிக்கு பஞ்சமில்லாத இப்படம் வசூலை ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து மற்றொரு படத்தை தயாரிக்கவிருக்கிறார் விஷ்ணு.

அறிமுக இயக்குனர் செல்லா இயக்க, ரெஜினா கெசண்ட்ரா நாயகியாக நடிக்கிறார்.

இதில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஓவியா. இவர்களுடன் லிவிங்ஸ்டன், சிங்கமுத்து, கருணாகரன், யோகிபாபு, ஆன்ந்த்ராஜ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் டிநக்க, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்

இந்நிலையில் இப்படத்திற்கு ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ என்ற டைட்டில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ என்ற செல்லப் பெயர் நாயகனுக்கு வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் தவிர ‘சின்ட்ரெல்லா’, ‘கதாநாயகன்’, தமன்னா உடன் ‘பொன் ஒன்று கண்டேன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

Vishnu Vishal next movie titled Silkukuvarpatti Singam

vishnu oviya regina

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பர்ஸ்ட் லுக் தேதி

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பர்ஸ்ட் லுக் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas Thaana Serndha Kootam first look release updatesஹரி இயக்கிய சி3 படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், மாஸ்டர் சிவசங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மறுநாள் அதாவது தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Suriyas Thaana Serndha Kootam first look release updates

கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோர்ட் உத்தரவு

கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

High Court Orders CBI Probe into Kalabhavan Mani Death issueமலையாள சினிமாவை சேர்ந்த கலாபவன் பணி 200-க்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 2 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மார்ச் 6-ம் தேதி உயிரிழந்தார்.

இவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. எனவே கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இது தொடர்பான மருத்துவ அறிக்கையில், அவர் குடித்த மதுவில் குளோரோபைரிபாஸ் என்ற பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கலாபவன் மணியின் உறவினர்கள் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வலியுறுத்தினர்.

ஆனால் அப்போது இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இதை ஏற்காமல், மாநில போலீசாரே தொடர்ந்து விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவி்த்தது.

இந்நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள, பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசு, கலாபவன் மணியின் உறவினர்களின் கோரிக்கையை ஏற்றது.

இதனையடுத்து, கலாபவன் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு பரிந்துரை செய்யவே, சிபிஐ விசாரிக்க கேரள ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

High Court Orders CBI Probe into Kalabhavan Mani Death issue

அஜித் பட இயக்குநருடன் இணைவாரா ரஜினிகாந்த்.?

அஜித் பட இயக்குநருடன் இணைவாரா ரஜினிகாந்த்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith-Siruthai-Sivaசிறுத்தை என்ற வெற்றிப் படத்தை கொடுத்த போது சிறுத்தை சிவா என அழைக்கப்பட்டார்.

அதன்பின்னர் அஜித் நடித்த வீரம் மற்றும் வேதாளம் ஆகிய படங்களை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார்.

தற்போது விவேகம் படத்தை இயக்கி, அஜித் படங்களின் இயக்குனர் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர், ரஜினிக்காக ஒரு மாஸான கதை ஒன்றை தயாராக வைத்திருக்கிறாம்.

விரைவில் ரஜினியை சந்தித்து கதை சொல்லவும் தயாராகி வருகிறாராம்

சிவா கதைக்கு ரஜினிகாந்த் ஓகே சொல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Will Rajinikanth act in Ajith movies director Siva

More Articles
Follows