நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த இடங்கள்..; அரசுப் பள்ளிகள் அளவில் இந்திய அளவில் ஜீவித்குமார் முதலிடம்

நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த இடங்கள்..; அரசுப் பள்ளிகள் அளவில் இந்திய அளவில் ஜீவித்குமார் முதலிடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jeevith kumarமருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி நடைபெற்றது.

இதில், நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களையும் நாமக்கல் போதுப்பட்டியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ, மாணவியர் பிடித்தனர்.

அதன்படி திருப்பூர் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளதுடன், தேசிய அளவில் 4-வது இடம் பிடித்துள்ளார்.

மேலும், சேலத்தை சேர்ந்த மோகனபிரபா 705 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், தருமபுரியை சேர்ந்த அரவிந்த் 691 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேர் தேர்ச்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதிய 6,692 பேரில்
1,615 மாணவர்கள் தேர்ச்சி.

4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்

15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி தட்சிணாமூர்த்தி மற்றும் மகேஸ்வரி தம்பதியரின் மூத்த மகன் ஜீவித் குமார் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.

இவர் நீட் தேர்வில் அரசுப் பள்ளிகள் அளவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அருகில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து நீட் தேர்வு எழுதி உள்ளார்.

ஆனால் அப்போது அவரால் அதிக மதிப்பெண்களை பெறமுடியவில்லை அதன்பின் ஓராண்டு காலமாக ஆசிரியர்களின் உதவியோடு, நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பு ஒன்றில் பயின்ற ஜீவித் குமார், தற்போது நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இந்திய அளவில், தரவரிசைப் பட்டியலில் 1123 வது இடத்தையும் பிடித்துள்ளார் ஜீவித் குமார்.

Theni government school student scores 664 out of 720 in NEET exam

யாருமே செய்யாத தப்பை நான் செய்யல..; குடி போதையில் கார் ஓட்டி ஓவராக பேசிய நடிகை

யாருமே செய்யாத தப்பை நான் செய்யல..; குடி போதையில் கார் ஓட்டி ஓவராக பேசிய நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress vamshikaவழக்கம்போல சென்னையில் வாகன சோதனையில் போக்குவரத்து போலீசார் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.

அப்போது கோடம்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற கார்களை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது ஒரு காரில் ஓட்டுனர் இருக்கையில் இருந்த பெண் குடிபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.

அவர் கர்நாடகவை சேர்ந்த நடிகை வம்ஷிகா என்பதும் தெரியவந்தது.

நடிகை வம்ஷிகா குடிபோதையில் இருப்பது உறுதியானது.

எனவே அவர் மீது பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பின்னர் விசாரணைக்காக பாண்டி பஜார் காவல்நிலையம் வந்த வம்ஷிகா செய்தியாளர்களிடம் பேசினார்.

” தான் மது அருந்திருந்ததாகவும் ஆனால் சுய நினைவோடுதான் கார் ஓட்டி இருந்ததாக தெரிவித்தார்.

மது அருந்துவிட்டு கார் ஓட்டுவது தப்புதான்.

ஆனால் யாரும் செய்யாத தப்பை தான் செய்யவில்லை என விளக்கம் வேற அளித்துள்ளார்.

அதன்பின்னர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர் எனவும் நடிகை வம்ஷிகா தெரிவித்தார்.

Kannada actress Vamshika caught red handed in drunk and drive

‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி

‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ezhunthu va andreaவாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ சில பாடல்களைக் கேட்போம்.
நமக்குள்ளும் சக்திகள் இருக்கிறது, அதை நமக்கே சில பாடல்கள் உணர்த்தும். அப்படியொரு பாடலாக அமைந்துள்ளது ‘எழுந்து வா’. இந்தப் பாடல் குறித்து ‘எழுந்து வா’ பாடல் குழுவினரிடம் கேட்ட போது “சுதந்திரம் என்பது நமது மனதில் இருந்தே தொடங்குகிறது, நீங்கள் பார்க்கும் 4 சுவர்களுக்கு வெளியே அல்ல. உங்கள் ஒற்றுமை கைகொடுப்பதால் மனிதன் உருவாக்கிய எல்லைகள் மங்குகின்றன.
நீங்கள் சக்தி வாய்ந்தவர். உங்களால் ஒரு போரை நிறுத்த முடியும். நீங்கள் வாகை சூடலாம். நீங்கள் பறக்கலாம். நீங்கள் காரணமாக இருக்கலாம். நீங்கள் மாற்றமாக இருக்கலாம். எனவே, எழுங்கள். ஏனெனில் உங்கள் நேரம் வந்துவிட்டது. எழுங்கள்! ஏனெனில் உங்கள் குரல் கேட்க வேண்டும். எழுங்கள்! ஏனெனில் போதும் என்பது போதாது. எழுந்து வா” என்பது தான் இந்தப் பாடல் சொல்ல வரும் கருத்து என்றார்கள்.
கரோனா அச்சுறுத்தலால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்தச் சமயத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர். ஆண்ட்ரியா மற்றும் ஆர்யன் தினேஷ் தங்களுடைய குரல்களின் மூலம் இருவகை கொண்ட மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் நேரத்தில், இந்த கூட்டணிக்கான வரிகளை திவ்யா லீ நாயர் எழுதியுள்ளார்.
பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=BzihkXIUQ94&feature=youtu.be
பாடல் குழுவினர் விவரம்:
பாடல் தயாரிப்பு: ப்ரித்வி சந்திரசேகர்
பாடல் எழுதி இசையமைத்தவர்கள்: ஆண்ட்ரியா மற்றும் ஏடிகே
ஆங்கில வரிகள்: ஆண்ட்ரியா
ராப்: ஏடிகே

Andrea and ATK team up for Ezhunthu va

காந்தி படத்தை போல ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிப்பார்கள்..; விஜய்சேதுபதிக்கு சரத்குமார் ஆதரவு

காந்தி படத்தை போல ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிப்பார்கள்..; விஜய்சேதுபதிக்கு சரத்குமார் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi sarath kumarஇலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

அந்த படத்தில் மக்கள் செல்வன் நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்தநிலையில், விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

“கலைத்துறை, அரசியல் தலையீட்டு காரணங்களால் சவால்களை எதிர்கொள்வது வருந்தத்தக்கது.

இந்திய நாட்டு வருவாயில் சுமார் 93,000 கோடி ரூபாய் பங்களிப்பை ஊடகங்கள் & பொழுபோக்கு துறை வழங்குகிறது.

கொரோனா சூழலில் அனைத்து தரப்பினரும் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, பல சோதனைகளைக் கடந்து முன்னேற்றம் காண்பதற்காக புதுப்புது படைப்புகளை கொடுக்க தயாராக உள்ள கலைத்துறையின் ஊக்கத்தை தடுக்கின்ற முயற்சி ஏற்புடையதல்ல.

நாட்டின் வளர்ச்சிக்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ இதுபோன்ற நிகழ்வுகள் உதவப் போவதில்லை.

காந்தி படத்தை மக்கள் எப்படி விரும்பி ரசித்தார்களோ, அதே அளவிற்கு ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ரசிக்கத்தான் செய்வார்கள் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.

எந்தவொரு படைப்பிலும் ஒரு இனத்தை இழிவுபடுத்தி காட்சிப்படுத்தக் கூடாதே தவிர, தனிமனிதன் தன் வாழ்க்கையில் வளர்ச்சியடைய ஊக்கமளிக்கும் வகையிலான சாதனையாளரின் சரித்திரத்தை தெரிந்துகொள்வதில் தவறில்லை.

ஒரு சாதாரண மனிதன் பல போராட்டங்களுக்குப் பிறகு, எப்படி விளையாட்டு துறையில் உச்சநிலையை அடைந்தான் என்பதை சித்தரிக்கும் கதைக்களத்தை வரவேற்க வேண்டும்.

அதை அரசியல் ரீதியாக மட்டும் அணுகி எதிர்ப்பு தெரிவிப்பது சரியாக இருக்காது. முக்கியமாக கலைஞர்களுக்கு அணை கட்டக்கூடாது.

எல்லைகளைக் கடந்து கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஒரு நடிகர் இப்படித்தான் நடிக்கவேண்டும். இந்த கதாபாத்திரத்தில்தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தால் கலை உலகம் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியாத சூழல் நிச்சயமாக உருவாகிவிடும்.

அனைத்தையும் தாண்டி படமானது தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்படும் என்பதால் தணிக்கை குழு மீது நம்பிக்கை வைத்து இப்பொதுதே படத்தை பற்றி கருத்துகள் தெரிவித்து படைப்பாளிகளின் முயற்சியை தடுக்கவேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Sarathkumar extends support to Vijay Sethupathi on ‘800’ controversy

புரிந்து செயல்பட்டால் விஜய்சேதுபதி எதிர்காலத்துக்கு நல்லது..; தமிழக அமைச்சர் அதிரடி கருத்து

புரிந்து செயல்பட்டால் விஜய்சேதுபதி எதிர்காலத்துக்கு நல்லது..; தமிழக அமைச்சர் அதிரடி கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadambur rajuஇலங்கை கிரிக்கெட் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் (வாழ்க்கை வரலாற்று படம்) வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள திரைப்படம் ‘800’.

இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என பல்வேறு அமைப்பினர்

இதுகுறித்து தமிழக அமைச்சர் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

‘800’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து புரிந்து செயல்பட்டால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது

நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வை புரிந்து செயல்பட்டால் நடிகர் விஜய்சேதுபதி எதிர்காலத்திற்கு நல்லது.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி, அவர் யோசித்து பார்க்க வேண்டும்

இவ்வாறு தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Minister reaction on Muthaiah Muralitharan biopic

விஷ்ணு விஷாலின் தந்தை ஓய்வுபெற்ற டிஜிபி என்பதால் விசாரணை அவருக்கு சாதகமாகும்.; – சிபிஐ என்கொயரி வேண்டும் என சூரி வேண்டுகோள்

விஷ்ணு விஷாலின் தந்தை ஓய்வுபெற்ற டிஜிபி என்பதால் விசாரணை அவருக்கு சாதகமாகும்.; – சிபிஐ என்கொயரி வேண்டும் என சூரி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sooriநடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஓய்வு பெற்ற டிஜிபி ஆவார்.

ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் இணைந்து, நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டதாக நடிகர் சூரி புகார் அளித்தார்.

அதாவது நிலத்திற்கான உரிய ஆவ‌ணங்கள் இல்லாததால் தமது பணத்தை திரும்ப கேட்டபோது, அ‌வர்கள் தராமல் ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ரமேஷ் குடவாலா உள்ளிட்ட இருவர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் ‌வழக்குப்பதிவு செய்தனர்.

தரவேண்டிய பணத்தை கேட்டபோது விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலாவும், அன்புவேல் ராஜனும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சூரி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ரவீந்திரன், நடிகர் சூரியின் புகார் மீது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதி வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு எதிரான புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சூரி மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், ரமேஷ் குடவாலா டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால் காவல்துறை விசாரணை அவருக்கு சாதகமாக அமையலாம் என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Soori requests CBI enquiry against of Vishnu Vishal father

More Articles
Follows