துபாயில் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி; ஆனா எல்லாரும் படம் பார்க்க முடியாதாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் 60 நாட்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல ஆயிரக்கணக்கான கோடி பணம் முடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு குறையாத போதும் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இதுநாள் வரை தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

ஆனால் தற்போது சில விதிமுறைகளுடன் சூட்டிங் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சின்னத்திரை சூட்டிங் தொடங்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் துபாயில் திரையரங்குகளை இன்று முதல் திறக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன் படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பட்டியலிட்டுள்ளது.

மொத்த இருக்கைகளில் 30 சதவிகிதம் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

12 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் திரையரங்குகளில் அனுமதிக்கக் கூடாது.

பார்வையாளர்கள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

இரு பார்வையாளர்களுக்கு இடையில் 2 மீட்டருக்கு மேல் இடைவெளிக் கடைபிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு காட்சிகளுக்குப் பின்னும் திரையரங்கத்தின் அனைத்து பகுதிகளும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ஆன்லைன் கிளாஸ் கூடாது.. இல்ல இல்ல நடத்தலாம்.. அமைச்சர் பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா பொது முடக்கத்தால் கடந்த 2 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

10 வகுப்பு பொதுத் தேர்வுகள் கூட ஒத்திவைக்கப்பட்டன.

இதனையடுத்து சில தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று மே 27ஆம் தேதி காலையில் பேட்டி அளித்த தமிழக அமைச்சர் செங்கோட்டையன், “ஆன்லைன் வகுப்பு எடுப்பதை நிறுத்த இயக்குனர் மூலமாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. மீறி நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என ஊக்குவித்து வருகிறது.

தற்போது ஆன்லைனில் வகுப்பு நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதற்கு அனைத்து பள்ளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில்…

“60 நாட்களுக்கும் மேலாக தமிழக பள்ளிக் கல்வி மாணவர்கள் கரோனா எனும் கொடிய நோய் மற்றும் ஊரடங்கு காரணமாக வீட்டுச் சிறையில் முடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் படித்ததை மறந்து விட்டார்கள். கற்பதை நிறுத்திக் கொண்டார்கள்.

அதை மீட்டெடுப்பதற்காக தனியார் பள்ளிகள் பெற்றோரிடமோ மாணவரிடமோ எந்தவிதக் கல்விக் கட்டணமும் பெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன. இதற்கு முன் கல்வி அமைச்சரே ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று கூறியுள்ளன. அதற்கான கட்டணம் கூட பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது. மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி வாரியம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை செய்தி வெளியிட்டிருப்பது சரியல்ல” என்று அனைத்து பள்ளிகள் சங்கம் தெரிவித்தது.

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என்று பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், உடனே மறுப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக புது விளக்கம் ஒன்றை அவர் அளித்துள்ளார்.

“ஆன்லைன் வகுப்பு எடுப்பதை நாம் தடுக்க முடியாது. மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வகுப்புகளை நடத்தக் கூடாது. தனிப்பட்ட முறையில் ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்துவதை நாம் தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

அஜித் ஸ்டைலில் பன்ச் பேசி சிக்ஸ் பேக் காட்டிய வலிமை வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நாயகியாக காலா பட நாயகி ஹீமா குரோஷி நடிப்பார் என கூறப்படுகிறது.

ஆனால் படத்தில் நடிக்கும் கலைஞர்கள் பற்றி தகவல்களை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை படக்குழு.

ஆனால் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என்பவர் அஜித்துக்கு வில்லனாக நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.

தெலுங்கில் ஹிட்டான ஆர்.எக்ஸ் 100 என்ற படத்தில் இவர் நடித்திருந்தார்.

தற்போது கொரோனா முழு அடைப்பு காரணமாக வலிமை பட ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த 2 மாத இடைவெளியில் வீட்டிலேயே ஒர்கவுட் செய்த தனது சிக்ஸ் பேக் படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

அத்துடன் அஜித் ஸ்டைலில் ஒரு பன்ச் டயலாக் போல ஒன்றை பதிவிட்டுள்ளார்.

“லாக் டவுன் நமது திட்டங்களை மாற்றியது. ஆனால் நமது குறிக்கோளை அதனால் மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது உண்மையா? என்னதான் ஆச்சு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள போதிலும் கொரோனா பொது முடக்கத்தால் ரிலீசாகவில்லை.

நாளை மறுநாள் மே 29ஆம் தேதி சூர்யா தயாரித்துள்ள ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள் படம் ஆன்லைனில் வெளியாகிறது.

இதனிடையில் சூர்யாவுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் ‘GET WELL SOON SURIYA ANNA ‘ என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

சென்ற வாரம் வீட்டில் உள்ள ஜிம்மில் ஒர்கவுட் செய்து கொண்டிருந்தாராம் சூர்யா. அப்போது கையில் ஒரு சின்ன காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தான் சிலர் பெரிதுப்படுத்தி செய்தியாக பதிவிட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்கள் சூர்யா கைவசம் உள்ளது.

சூட்டிங்க்கு 20 பேர் பத்தாது.. 50 பேர் வேண்டும்…; அமைச்சரிடம் குஷ்பூ வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

இதனால் சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை.

இதன் காரணமாக தினக்கூலி பணியாளர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.

ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக 20 பேரை வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது.

ஆனால் 200 பேர் பணியாற்றும் இடத்தில் 20 பேரை கொண்டு பணியாற்ற முடியாது. குறைந்தது 50 சதவிகிதம் அல்லது 50 பேரை அனுமதிக்க வேண்டும் என்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க செயலாளர் குஷ்புவும், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலாளர் குஷ்பு, இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து வேண்டுகோள் வைத்துள்ளனர்.

சினிமா இல்லனா வெப் சீரிஸ்.. வடிவேலு எடுத்த அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வடிவேலு இல்லாத சினிமா… உப்பு இல்லாத உணவாக மாறிவிட்டது.

அவர் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவரின் காமெடி மற்றும் மீம்ஸ்களே என்றும் டிரெண்ட்டிங்கில் உள்ளது.

ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்து வந்தார் வடிவேலு.

அப்போது ஏற்பட்ட சில கருத்து மோதல்களால் படத்திலிருந்து விலகினார் வடிவேலு.

இதனையடுத்து ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

மெர்சல், கத்தி சண்டை உள்ளிட்ட ஓரிரு படங்களில் மட்டுமே தலைகாட்டினார்.

ஆனால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குவதால் புதிய படங்களில் வடிவேலு நடிக்கவில்லை.

இந்த நிலையில், வடிவேலுவை வெப் தொடரில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிய வந்துள்ளது.

இதற்காக ஆன்லைன் முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், வடிவேலுவுக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க காமெடி தொடராக இது உருவாகவுள்ளதாம்.

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows