அக்டோபர் 28 அன்று சுகாதார குழு.. தியேட்டர்கள் திறப்பதில் தாமதம்..; தடுமாறுகிறதா தமிழக அரசு.?

அக்டோபர் 28 அன்று சுகாதார குழு.. தியேட்டர்கள் திறப்பதில் தாமதம்..; தடுமாறுகிறதா தமிழக அரசு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

EPSஇன்று அக்டோபர் 20 காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் அவர்களை அவரது இல்லத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்தனர்.

அனைத்து தொழில்நிறுவனங்களும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் உடனடியாக அனுமதி வழங்க இயலவில்லை.

அக்டோபர் 28 அன்று சுகாதார குழுவின் கூட்டத்தில் இது சம்பந்தமாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது அபிராமி ராமநாதன், அம்பத்தூர் ராக்கி தியேட்டர் உரிமையாளர் ஹரி, சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் உரிமையாளர் வெங்கடேஷ், வேலூர் சீனிவாசன், ராமநாதபுரம் ரமேஷ் தியேட்டர் உரிமையாளர் ரமேஷ், சேலம் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Theatre owners meet EPS on reopening of theatres

முதல்வர் தாயார் உருவப்படத்துக்கு மலரஞ்சலி..; 800 படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்சேதுபதி

முதல்வர் தாயார் உருவப்படத்துக்கு மலரஞ்சலி..; 800 படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து மறைந்த முதலமைச்சரின் தாயாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் விஜய் சேதுபதி

800 படத்திலிருந்து விலகி விட்டீர்களா என்ற கேள்விக்கு… “முற்றுப்புள்ளி வைத்து விட்டேன்” என்று பதிலளித்தார் நன்றி வணக்கம் என்றால் முற்றுப்புள்ளி வைத்ததாக தான் அர்த்தம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் இதைப்பற்றி பேச வேண்டாம் எனவும் தெரிவித்தார்” விஜய்சேதுபதி.

Vijay Sethupathi

Actor Vijay Sethupathi attends CM Edappadi Palanisamy mother condolence meeting

ஐஷ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ‘பூமி’ பட ஹீரோ

ஐஷ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ‘பூமி’ பட ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam ravi bhoomiஇரண்டு மிகப்பெரும் பெயர்கள் ஒரு திரைப்படத்தில் இணையும் போது ரசிகர்களிடம் அப்படத்திற்கு தானாகவே ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் தொடர்ந்து தன் நடிப்புத்திறமையால் அனைவரையும் கவர்ந்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்ணனி பாத்திரத்தில் நடிக்க, ஸ்டோன் பெஞ்ச் ஃப்லிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் (Stone Bench Films and Passion Studios) தயாரிக்கும் “பூமிகா” படத்தின் டைட்டில் லுக் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்தது. தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி வெளியிட்டிருக்கும் “பூமிகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் அர்த்தங்கள் கொண்டதாக, அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.

இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் இது குறித்து கூறியதாவது….

எங்களின் படக்குழு சார்பாக, மிகுந்த எளிமையுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு தந்தமைக்கு நடிகர் ஜெயம்ரவிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

முதலில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டபோது நடிப்பு திறமை மிக்க ஆளுமை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி அவர்களை அணுகியபோது, எந்தவித தயக்கமுமில்லாமல் உடனடியாக ஒத்துக்கொண்டு, எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு தந்தார்.

மேலும் படம் குறித்து கூறும் போது, “பூமிகா” திரைப்படம் ஒரு ஆழமான உணர்வுகளுடன் கூடிய திரில்லர் படமாக, பல எதிர்பாரா திருப்பங்கள் கொண்டதாக இருக்கும். தனிப்பட்ட வகையில் ஐஷ்வர்யா ராஜேஷ் உடைய அசரவைக்கும் நடிப்பு எனக்கு பெரும் திருப்தியை அளித்தது. அவர் இப்படத்தின் ஆரம்பகட்டத்தில் இருந்தே, மிகுந்த உற்சாகமுடன், கடுமையான ஈடுபாட்டுடன் இப்படத்தில் பங்கேற்றார்.

நீலகிரியில் படப்படிப்பு நடைபெற்றபோது, பலவிதமான பருவ நிலை மாறுபாடுகளால் படக்குழு மொத்தமுமே கடும் இன்னல்களுக்கு உள்ளானது. ஆனால் அப்போதும் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் கடுமையான ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் ஒவ்வொரு ஷாட்டிலும் அற்புதமான நடிப்பை வழங்கினார்.

ஸ்டோன் பெஞ்ச் ஃப்லிம்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில், தொடர்ந்து தரமான படங்களை தந்து, தனக்கென தனி முத்திரையை பெற்றுள்ளது. அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இப்படத்தில் எனக்கு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி. நாங்கள் ஒட்டுமொத்த குழுவாக கடுமையான உழைப்பில் மிகச்சிறந்த படைப்பாக இப்படத்தை தருவோம். கண்டிப்பாக இத்தயாரிப்பு நிறுவனத்தின் தரமான படமெனும் முத்திரையை இப்படம் பெறும்.

இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் ரிலீஸாகவுள்ள “இது வேதாளம் சொல்லும் கதை”
படம் மூலம் திரை கலைஞர்களிடம் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறார்.

பல பிரபல திரைப்படங்களில் ரசிகர்களின் கவனம் குவித்த பாவெல் நவகீதன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் தமிழின் திறமைமிகுந்த பல புதுமுகங்கள் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜாஜாரா ( Roberto Zazzara ) உடைய அட்டகாச ஒளிப்பதிவு படத்தை பன்மடங்கு மெருகேற்றும்படி அமைந்துள்ளது.

வெறும் விஷுவல் மேஜிக்காக மட்டுமில்லமல் கடும் பருவ நிலை மாறுபாடுகளுக்கிடையே, ஒளிபற்றாக்குறையிலும் அவரது திறமையான ஒளிப்பதிவு கண்டிப்பாக பெரிதாக பேசப்படும்.

ஸ்டோன் பெஞ்ச் ஃப்லிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் (Stone Bench Films and Passion Studios) சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறியதாவது….

ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டததற்காக நடிகர் ஜெயம்ரவிக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அவரால் பூமிகா படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. டைட்டில் லுக்கிற்கு கிடைத்த பெரும் வரவேற்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. அதே நேரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் பெரும் பொறுப்புணர்வையும் தந்தது.

ஐஷ்வர்யா ராஜேஷ்
தொடர்ந்து தன் சிறந்த நடிப்புத்திறமையால், மிக நல்ல கதாபாத்திரங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து, தமிழின் மதிப்பு மிகு நடிகையாக வளர்ந்து வருகிறார். விநியோக தளத்திலும் அவரது மதிப்பு பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது. ஆதாலால் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் எங்களுக்கு கூடுதல் பொறுப்பு இருந்தது.

அந்த வகையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்துள்ள ஆதரவு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மிகச்சிறப்பான பணியை செய்துள்ள இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் மற்றும் அவரது குழுவிற்கு பாராட்டுக்கள். தற்போது ரசிகர்களுக்கு எங்கள் படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லரை காட்ட பெரும் ஆர்வத்துடன் உள்ளோம். மிக விரைவில் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

தொழில் நுட்ப குழு விபரம்

ஒளிப்பதிவு – ராபர்டோ ஜாஜாரா ( Roberto Zazzara )

இசை – ப்ரித்வி சந்திரசேகர்

படத்தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின்

சண்டைப்பயிற்சி – டான் அசோக்

கலை – மோகன்

ஒலிக்கலவை – MR ராஜா கிருஷ்ணன்

ஒலியமைப்பு – ஸிங்க் சினிமா

ஒலிப்பதிவு செய்தவர் – தாமஸ் குரியன்

2D அனிமேஷன் – மனு ஆனந்த் & ஷாஜ் அஹமத்

கலரிஸ்ட் – பாலாஜி கோபால்

உடை வடிவமைப்பு – ஜெயலக்‌ஷ்மி சுந்தரேஷன்

மேக்கப் – வினோத் சுகுமாரன் & ராம் பாபு

விஷிவல் எபெக்ட்ஸ் – igene

விஷிவல் எபெக்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் – தேவா சத்யா

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா

டிசைன்ஸ் – வெங்கி

தயாரிப்பு மேலாண்மை – D ரமேஷ் குச்சிராயர்

தலைமை விநியோக தொடர்பாளர் – செந்தில் முருகன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு – பவன் நரேந்திரா

துணை தயாரிப்பு – M அசோக் நாராயணன்

இணைத் தயாரிப்பு – கல் ராமன், S. சோமசேகர், கல்யாண் சுப்ரமண்யம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படைப்பை கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் (Stone Bench Films and Passion Studios) சார்பில் தயாரிக்கிறார்கள்.

Actor Jayam Ravi released Aishwarya Rajesh in bhoomika first look

ஆன்லைன் கிளாஸ்.. மொபைல் இல்லாமல் அவஸ்தைப்பட்ட மாணவிக்கு ஃப்ரீ லேப்டாப் கொடுத்த அமைச்சர்

ஆன்லைன் கிளாஸ்.. மொபைல் இல்லாமல் அவஸ்தைப்பட்ட மாணவிக்கு ஃப்ரீ லேப்டாப் கொடுத்த அமைச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. ஆட்டோ டிரைவரான இவர் மிகவும் வறுமையான சூழலில் சின்னஞ் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு பூரணகுணம் அடையாமல் உடல் மெலிந்து தினமும் வலியோடு வாழ்ந்து வருகிறார்.

இவர்களது மகள் பவித்ரா, தண்டையார்பேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால் ஆன்லைனில் பாடம் கற்பதற்கு பவித்ராவிடம் செல்போனும் கிடையாது, லேப்டாப்பும் கிடையாது. ஒரு சின்னஞ்சிறிய டிவியில் அரசின் கல்வி நிகழ்ச்சிகளை மட்டும் பார்த்து வருகிறார்.

எழுத்துகள் சிறிய வடிவில் இருப்பதாலும் டிவி என்பதால் உடனடியாக அந்த பக்கங்கள் மாறுவதாலும் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. பக்கத்து வீட்டில் உள்ள நண்பர்களிடம் செல்போன் கேட்டால் அவர்களும் தருவதற்கு தயாராக இல்லை.

இதுகுறித்த செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியைப் பார்த்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக அந்த மாணவியை தொடர்புகொண்டு லேப்டாப் தர தயாராக இருப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து இன்று காலை தனது பெற்றோருடன் வந்த பவித்ரா அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்தார்.

அப்போது நீ என்ன படிக்கிறாய் என்னவாக ஆகப் போகிறாய் என்று கேட்ட போது, வறுமையின் சோகம் உருவத்திலும் மாணவியின் முகத்திலும் தெரிந்தாலும் கூட உற்சாகமாக டாக்டராக போகிறேன் என்றார்.

வாழ்த்துகள்! நன்றாக படித்து முன்னேறு என்று வாழ்த்துச் சொல்லி விலை உயர்ந்த லேப்டாப் ஒன்றை பரிசாக கொடுத்தனுப்பினார் அமைச்சர் ஜெயக்குமார்.

செய்தியில் மாணவியின் நிலையை அறிந்து உடனடியாக அவரை அழைத்து லேப்டாப் கொடுத்த அமைச்சருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

minister jayakumar

TN Minister Jeyakumar provided laptop to poor student in chennai

விடுங்க விஜய்சேதுபதி.. அதெல்லாம் வேணாம்..; முத்தையா முரளிதரன் அப்செட்

விடுங்க விஜய்சேதுபதி.. அதெல்லாம் வேணாம்..; முத்தையா முரளிதரன் அப்செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi as muttiah muralitharanஇலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இலங்கையில் போர் நடைபெற்ற போது தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர் முத்தையா முரளிதரன் என்பதால் அந்த படத்தில் மக்கள் செல்வன் நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்தநிலையில், இப்பட சர்ச்சைகள் குறித்து முத்தையா முரளிதரனே ஓர் அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

நான் தமிழ் பற்றாளன் என்றெல்லாம் எவ்வளவோ சொல்லி பார்த்தார்.

ஆனாலும் எதிர்ப்புகள் ஓயவில்லை. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விஜய்சேதுபதி கூட இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளை தவிர்த்தார்.

இந்தநிலையில், இப்பட சர்ச்சைகள் குறித்தும் விஜய்சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிட வேண்டி முத்தையா முரளிதரனே மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த விஜய்சேதுபதி.. நன்றி வணக்கம் என்பதை மட்டும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த இரு செய்திகளை பார்த்த மக்கள் செல்வன் என் பெயரிட்ட சீனுராமசாமி தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

தனது ஹீரோ அந்தஸ்தை உயர்த்திக் காட்ட நினைக்காமல்
எப்போதும் போல எளிமையாக
நன்றி வணக்கம்
என்று தன்னை நாடி வந்தவருக்கு
விடை தந்து தமிழ் மக்களின் அன்புக்கு அமைதி வழியில் மேன்மை செய்த மக்கள்செல்வன் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்.

என பதிவிட்டுள்ளார்.

Muthiah Muralidaran statement about 800 movie and Vijay Sethupathi reaction

muttiah muralitharan statement

என் கதையை எடுத்து உல்டா செய்து லாபம் சம்பாதிக்கும் கார்த்திக் சுப்பராஜ்..; அஜயன் பாலா அதிரடி புகார்

என் கதையை எடுத்து உல்டா செய்து லாபம் சம்பாதிக்கும் கார்த்திக் சுப்பராஜ்..; அஜயன் பாலா அதிரடி புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமேசான் ஆன்லைன் ஓடிடி தளத்தில் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியாகியுள்ள ஆந்தாலஜி ‘புத்தம் புதுக் காலை’.

இதில் ஐந்து குறும்படங்கள் உள்ளன.

இதனை ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இந்த ஆந்தாலஜி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘மிராக்கிள்’ குறும்படத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். இந்த படம் தான் நன்றாக உள்ளது என விமர்சனங்களை பெற்றது.

இந்த குறும்படம் தான் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்தக் கதை தனது குறும்படத்தின் காப்பி என்று குற்றம்சாட்டியுள்ளார் அஜயன் பாலா.

இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பதிவில் அஜயன் பாலா கூறியிருப்பதாவது:

“நேற்று நண்பர் இலங்கைவேந்தன் போன் செய்து உடனே அமேசானில் ‘புத்தம் புதுக் காலை’ படம் பாருங்க என பதட்டத்துடன் சொன்னார் . என்ன என கேட்டபோது அவர் சொன்ன தகவல் ஷாக்கா இருந்தது .

அதில் கடைசியாக் வரும் ‘மிராக்கிள்’ படம் அப்படியே நான் நடிக்க நிலம் நடிப்பு பயிற்சி மாணவர்களுக்காக கடந்த வருட இறுதியில் உருவாக்கி கரோனாவால் போஸ்ட் புரொட்க்‌ஷன் தாமதமாகி கடந்த மாதம் யூ-டியூப்பில் வெளியானது என் ‘சச்சின் கிரிக்கெட் கிளப்’ குறும்படம்.

இதன் கதையை அப்படியே சுட்டுவிட்டார்கள் என்றார் அவர். நானும் இரவே பார்த்தேன். என் கதையில் பத்து பேர் அவர்கள் கதையில் இரண்டு பேர். கதைக்களம் பகல் அதில் இரவு.

மற்றபடி பேராசை பெருநட்டம் எனும் என் கதைக்கருவும் பணத்தேவைக்காகத் தவறு செய்யப்போய் இருக்கும் பணத்தை கோட்டை விடுவதுமான கதை அமைப்பும் இறுதியில் டம்மி பணம் எனும் கதையின் முக்கிய திருப்பம் க்ளைமாக்ஸாக அமைந்திருப்பதும் அப்படியே இருக்கிறது.

படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா என் நட்பு வட்டத்தில் இருப்பவர். பன்னிரெண்டு வருடமாய் நன்கு பழகியவர். இதை சட்டப்பூர்வமாய் எதிர்கொள்ள வழி இருக்கிறதா தெரியவில்லை. ஒரு குறும்படத்தின் முக்கிய தகுதியே தனித்த ஐடியா தான். இருபது வருடமாய் போராடி படம் இயக்க முடியவில்லை. சரி ஒரு குறும்படமாவது எடுக்கலாம் என்று பார்த்தால் அதையும் உல்டா அடித்து ஓடிடிக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் அளவுக்கு தமிழில் கதை பஞ்சமா?

எத்தனை சிறுகதைகள் கொட்டிக் கிடக்கிறது. எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளனின் கதையை பயன்படுத்தும் எண்ணம் வருவதில்லை. சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல. சரி சுட்டார்களே ஒழுங்காகவாவது திரைக்கதை அமைத்தார்களா அதுவும் இல்லை. ஒரு டயரை திருடப்போகும் வீட்டிலும் சுமந்து செல்லும் லாஜிக் இல்லாத மொக்கை காட்சியெல்லாம் ஒரிஜினலாக சிந்திக்கும் படத்தில் வரவே வராது”

இவ்வாறு அஜயன் பாலா தெரிவித்துள்ளார்.

Miracle short film

Karthik Subbaraj’s miracle on OTT copied ?

More Articles
Follows