தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா 2வது அலை காரணமாக இரவு பத்து மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை கட்டாய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் இரவுக்காட்சி திரையிட முடியாது.
ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குகளுக்கு வரும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஏப்ரல் 20 முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.
இந்த நெருக்கடி சூழல் குறித்து விவாதிக்க தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதன்படி …அரசு அறிவுறுத்தலின்படி தொடர்ந்து திரையரங்குகள் இயக்க முடிவு.
தொடர்ந்து அரசு வழிகாட்டுதலின்படி திரையரங்குகள் இயங்கும் எனவும் புதிய அரசு (மே 2 வாக்கு எண்ணிக்கை நாள்) உருவான பிறகு இரவு காட்சிகளை மீண்டும் திரையிட அவரிடம் கோரிக்கை வைக்கப்படும்.
இவ்வாறு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Theatre owners desicion on night show cancel