‘நடிகர்கள் சம்பளத்த கொடுங்க; எங்ககிட்ட ஏன் கேட்கிறீங்க?’ விஷாலுக்கு தியேட்டர் ஓனர்ஸ் கண்டனம்

‘நடிகர்கள் சம்பளத்த கொடுங்க; எங்ககிட்ட ஏன் கேட்கிறீங்க?’ விஷாலுக்கு தியேட்டர் ஓனர்ஸ் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஒரு டிக்கெட்டிலிருந்து விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் தரப்படும் “என்கிற விஷாலின் அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

அப்போது காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் P கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசும் போது…

“நான் விஷால் பேசியதைத் தொலைக்காட்சி ஊடகங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஒரு டிக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் என்று அறிவிப்பு செய்து இருக்கிற விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

விஷால் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார். இப்போது அவர் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

அவர், தான் சம்பந்தப்பட்ட சங்கம் சார்ந்து பேசினால் பிரச்சினை இல்லை.
ஆனால் எங்கள் சங்கம் தொடர்பாக அறிவிப்பு செய்ய அவர் யார்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

அவருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்?

அவர் ஒன்று செய்யலாம். அவர் விவசாயிகளுக்காக சம்பளமே வாங்காமல் ஒரு படம் நடித்துக் கொடுக்கலாம்.

நடிகர் சங்கத்தைக் கூட்டி எல்லா நடிகர்களும் தங்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்து அதை விவசாயிகளுக்கு வழங்கலாம

தயாரிப்பாளர் சங்கத்தைக் கூட்டியும் இப்படி ஏதாவது வழங்கலாம்.

ஆனால் எங்களை இதில் சம்பந்தப் படுத்துவது ஏன்? வருகிற படங்களில் 99% படங்கள் லாபமில்லை.

இந்நிலையில் தம்பி விஷால் ஒன்றும் புரியாமல் இப்படிச் சொல்வது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. இது அவருக்கு இது பற்றித் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.

அவருக்கு அனுபவம் இல்லை. அப்படி என்றால் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.

இப்படி எதுவும் புரியாமல் குழப்படி செய்யக் கூடாது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக்கூடாது.

இது பற்றி விஷாலோடு ஊடகங்களிலோ அல்லது எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Theatre owners condemn to Vishal scheme about 1 rupee from 1 ticket

தேசிய விருது மகிழ்ச்சி என்றாலும் வருந்தும் ‘ஜோக்கர்’ படக்குழு

தேசிய விருது மகிழ்ச்சி என்றாலும் வருந்தும் ‘ஜோக்கர்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Joker movieஇரண்டு தேசிய விருதுகளை பெற்ற ஜோக்கர் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் ராஜுமுருகன் , நாயகன் சோம சுந்தரம், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜு முருகன் பேசியது…

நான் ஒரு நல்ல படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தேன் , இப்படம் அனைவரின் ஒத்துழைப்பில் திரையரங்குக்கு வந்ததே மிகப்பெரிய வெற்றி. ஜோக்கர் திரைப்படம் இங்கு இருக்கும் அனைவரும் தங்களுடைய கருத்தை சுதந்திரமாக பேச வழிவகுத்து தந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

இப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் பாலிவுட் நடிகர் நாவசுதின் சித்திக் போன்ற மிக சிறந்த நடிகர் என்றார் இயக்குநர் ராஜு முருகன்.

நடிகர் குரு சோம சுந்தரம் பேசியது…
ஜோக்கரில் நர்ஸ் வேடத்தில் நடித்த நடிகை ஒருவர் என்னை கைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு , நானும் இப்படத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று பெருமையாக கூறினார்.

எனக்கு அது சந்தோஷத்தை தந்தது. இந்த படத்தில் எழுத்து , இசை , தயாரிப்பு என்று அனைத்தும் ஒருங்கே இனைந்து மிகச்சிறப்பாக அமைந்தது. நான் இந்த படத்தில் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியது…

ஜோக்கர் கதையை கேட்டதும் நிச்சயம் படத்துக்கு தேசிய விருந்து கிடைக்கும் என்று நான் இயக்குநர் ராஜு முருகனிடம் கூறினேன். அதற்க்கு அவர் கிடைத்தால் நன்றாக இருக்கும், மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும் என்றார். தேசிய விருது பெற்றுள்ள சுந்தர் ஐயர் “ ஜாஸ்மீன் “ பாடலை வெறும் இருபதே நிமிடத்தில் பாடினார் என்பது அதன் சிறப்பாகும்.

சுந்தர் ஐயர் இப்பாடலில் நிறைய புதிய விஷயங்களை கொண்டு வந்தார் அது மட்டுமல்லாமல் பாடலில் நிறைய எமோஷனை சேர்த்தார் என்றார் ஷான் ரோல்டன்.

தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது…

ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோசம் இருந்தாலும் எங்கள் நாயகன் குரு சோமசுந்தரம் அவர்களுக்கும் விருது கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்தோம்.

அவருக்கும் கிடைத்து இருந்தால் எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எல்லாம் கூடி வரும்போது ஜோக்கர் திரைப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றார்.

Joker movie team reaction for winning Two National award

national award joker team

‘ரசிகர்களை சந்திக்க மறுப்பு…’ வாட்ஸ் அப்பில் ரஜினி வாய்ஸ்

‘ரசிகர்களை சந்திக்க மறுப்பு…’ வாட்ஸ் அப்பில் ரஜினி வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Meeting with fans postponed Rajini voice in WhatsAppவருகிற ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கவிருக்கிறேன் என ரஜினி தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது அந்த சந்திப்பு நடைபெற முடியாத சூழ்நிலை உள்ளதாக அவர் வாட்ஸ் அப்பில் தன் குரலை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

என்னை வாழவைத்த தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கு நான், ரஜினிகாந்த் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அணைவருக்கும் ஒரு தகவல், பத்து ஆண்டுகள் ஆயிற்று நான் உங்களை சந்தித்து, உரையாடி, புகைப்படம் எடுத்து. ரசிகர்களாகிய நீங்களும் என்னை சந்திப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தீர்கள். நேரமின்மையின் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனது.

தற்போது அதற்கான சந்தர்ப்பமும்,வாய்ப்பும் கிடைத்த நிலையில் ரசிகர்களாகிய உங்களை நான் சந்திப்பதற்கு ஏப்ரல் 12 முதல் 16 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், உங்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 300 என்ற வீதம் தோராயமாக 2000 பேருடன் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க, என்னுடைய ஆசை மற்றும் விருப்பத்தின் பெயரில் திட்டமிடப்பட்டிருந்தது. அத்தனை நபர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுப்பது என்பது ஒரு நாளில் நடைமுறையில் கடினமான விடயம் என்பதால், 8 பேர் கொண்ட குழுவாக புகைப்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்ககூடியதாக இருந்ததால், ரசிகர்கள் அணைவரும் தனித்தனியாக என்னுடன் புகைப்படம் எடுக்க கோரிக்கை வைத்தீர்கள். ரசிகர்களாகிய உங்களின் விருப்பத்தை ஏற்று, தற்போது நடைபெற இருந்த (ஏப்ரல் 12- 16 தேதி) சந்திப்பை ஒத்தி வைத்துள்ளோம்.

இனி வரும்காலத்தில், ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுக்க தக்க முன்னேற்பாடு செய்யப்படும். இதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கிறோம்.

என் ரசிகர்களாகிய நீங்கள் இதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

Meeting with fans postponed Rajini voice in WhatsApp

 

தமன்னாவுடன் இணைந்து விக்ரம் போடும் ‘ஸ்கெட்ச்’

தமன்னாவுடன் இணைந்து விக்ரம் போடும் ‘ஸ்கெட்ச்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram sketchகபாலி, தெறி படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருக்கிறார் கலைப்புலி தாணு என்பதை பார்த்தோம்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைக்கிறார்.

தமன்னா நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்தை வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ஸ்கெட்ச் என பெயரிட்டுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vikram Tamannah movie titled Sketch

sketch tamanna

 

C8z2uimXgAAQiHF

‘வேட்டை நாய்’க்காக சூர்யாவை காப்பியடிக்கும் ஆர்.கே. சுரேஷ்

‘வேட்டை நாய்’க்காக சூர்யாவை காப்பியடிக்கும் ஆர்.கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and RK sureshதாரை தப்பட்டை, மருது படங்களில் வில்லனாக மிரட்டியவர் தயாரிப்பாளர் ஆர். கே. சுரேஷ்.

தற்போது நான்கு படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

இந்நிலையில், ‘மன்னாரு’ பட இயக்குனர் ஜெய்சங்கர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

இப்படத்தின் கேரக்டர் நந்தா படத்தில் சூர்யா ஏற்ற கேரக்டர் போன்ற முரட்டுத்தனமாக கேரக்டராக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு ‘வேட்டை நாய்’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

படத்தின் நாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் ஒப்பந்தம் ஆனவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

‘என் அண்ணன் ரஜினி பார்த்துப்பார்…’ கமல் நெகிழ்ச்சி

‘என் அண்ணன் ரஜினி பார்த்துப்பார்…’ கமல் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhaasan and rajinikanthகமலின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் அண்மையில் காலமானார்.

அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது, இன்றைய இளம் நடிகர்கள் வைத்திருக்கும் பணம் கூட கமல்ஹாசனிடம் இல்லை என தெரிவித்தார்.

இதுவரை சந்திரஹாசன் கமலின் கணக்கு வழக்குகள் பார்த்துக் கொண்டார்.

இனி அடுத்த அண்ணன் சாருஹாசன்தான் கமலை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ரஜினியின் இந்த பேச்சு குறித்து கமல் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

‘அந்த அண்ணன் இல்லையென்றாலும், இன்னொரு அண்ணனாக ரஜினி இருக்கிறார். அவர் என்னை பார்த்துக்கொள்வார்’ என்றார்.

More Articles
Follows