கிராமத்து பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையில்..; ஆதங்கத்தில் ஐஸ்வர்யா

கிராமத்து பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையில்..; ஆதங்கத்தில் ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது…

இந்த நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்த சுஹாசினி மேடமிற்கு நன்றி. இயக்குநர் கண்ணன் ஒரு படத்தை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்கும்போது, முதலில் தயங்கினேன். படம் பாருங்கள் என்று கூறியதும் பார்த்தேன்.

மறுஉருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். அதேபோல், எனக்கும் ஒப்பீடும், குழப்பமும் இருந்தது. 2, 3 நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். சமையலறைக்கு செல்வார், வேலை பார்ப்பார் திரும்ப வருவார்.

இதையே தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நான் இதை கவனித்ததே இல்லை. அன்று தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

மேலும், கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது. அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் கண்ணன் சாருக்கு நன்றி. நிமிஷாவின் நடிப்பை 50 சதவிகிதம் நடித்திருந்தாலே நான் சந்தோஷப்படுவேன். என்னை அழகாக காட்டியிருந்ததற்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடித்த ராகுல் ஒரு இயக்குநர். இந்த படத்தில் நடிக்கும் போது நான் இதுபோன்ற ஆள் இல்லை என்று கூறினார்.

இதுபோன்ற சிறந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன் பேசும்போது

கண்ணனின் முதல் படத்திற்கு நான் தான் ஒளிப்பதிவு செய்தேன். அவர் எப்போதுமே நகைச்சுவையாகத்தான் இருப்பார். ஒரு படத்தின் படப்பிடிப்பை இரண்டு நாட்களிலேயே துவங்கி விடுவார். மலையாள பாணியில் இருக்கக் கூடாது என்பதற்காக ஒளிப்பதில் சிறிது மாற்றங்கள் செய்திருக்கிறோம். ஐஸ்வர்யா என்னுடைய நண்பர். சிறு சிறு விஷயங்களில் கூட மிக அருமையாக நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு இன்னொரு நாயகன் பின்னணி இசை. பின்னணி இசைக்கு மட்டும் இரண்டு மாதங்கள் பணியாற்றியிருக்கிறார்கள்” என்றார்.

நடிகை கலைராணி பேசும்போது…

இப்படத்தை மலையாளத்தில் பார்த்து வியந்தேன். சமையலறை முக்கிய பாத்திரமாக இருந்தது. ஆண்களுக்கு சமையலறையில் வேலை இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், எந்தளவிற்கு சிரமத்திற்குள்ளாகிறார்கள் என்று யதார்த்தமாக இருந்தது.

பெண்களும் சிறு சிறு விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல, ஆண்களும் சமையலறையில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

கண்ணன் சாருடன் இரண்டாவது முறை நடிக்கிறேன். அவர் எப்போதுமே கலைஞர்களை குடும்பமாக வைத்துக் கொள்வார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை மிகவும் சிரமப்படுத்தியிருக்கிறேன்.. கதைக்காக.. என்றார்.

The whole life of village women is in the kitchen – Aishwarya Raesh

எந்த அம்சங்களும் இல்லாமல் நடித்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி.. – கண்ணன்

எந்த அம்சங்களும் இல்லாமல் நடித்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி.. – கண்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது…

இப்படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது…

12 படங்கள் இயக்கியிருக்கிறேன் என்றால் அதற்கு உங்களுடைய ஆதரவு தான் காரணம். சுஹாசினி மேடம் பேச்சு எளிமையாக, தெளிவாக இருந்தது.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் சுஹாசினி மேடம் தான் என்னை உதவி இயக்குநராக மணி சாரிடம் சேர்த்துவிட்டார்.

இன்று வேகமாக இயக்குகிறேன் என்றால், மணி சாரிடம் கற்றுக் கொண்டது தான் காரணம். காலை 6.30 மணிக்கெல்லாம் முதல் ஷாட் எடுத்து விடும் பழக்கம் கொண்டவர் மணி.

மிலிட்டரி வீரர் போல உழைப்போம். அன்று கற்று கொண்டது.. இன்று வேகமாக நல்ல படங்களை எடுக்க முடிகிறது.

எல்லா அம்சங்களும் இல்லாமல் இறுக்கமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. மலையாளத்தில் நிமிஷா சிறப்பாக நடித்திருந்தார்.

அதை ஐஸ்வர்யா ராஜேஷ் சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக நடித்திருந்தார். நல்ல படங்கள் ஐஸ்வர்யாவிடம் செல்வதற்கு அவருடைய ஈடுபாடு தான்.

ஒளிப்பதிவாளர் பாலு சார் பிறர் கேட்காமலேயே உதவி செய்வார். திறமைகள் நிறைய உடைய அற்புதமான மனிதர். 20 வருடங்கள் கழித்தும் அவர் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பார். எது வேண்டுமோ அதை சண்டைப் போட்டு வாங்கிக் கொள்வார்.

ஜீவிதா, ஹிருதயாவிற்கு நன்றி. ஒரு முக்கியமான காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார் கலைராணி. போஸ்டர் நந்தகுமார் சார் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் நடிப்பைப் பார்த்து என் மனைவிக்கு அவரை அடிக்கும் அளவிற்கு கோவம் வந்தது.
நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் ஜான்சன் சாரும் ஒருவர்.

இப்படத்தின் இசைத்தட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுஹாசினி மேடம் வெளியிட எனது மனைவி மது கண்ணன் பெற்றுக் கொள்வார். எனது மனைவி உண்மையாகவே தி கிரேட் இந்தியன் கிச்சன் தான்” என்றார்.

Thanks to Aishwarya for acting without any features – Kannan

திறமைக்கு வாய்ப்பு இல்லையே என நானும் ரேவதியும் வருத்தப்பட்டோம்.. ஆனா இப்போ – சுஹாசினி

திறமைக்கு வாய்ப்பு இல்லையே என நானும் ரேவதியும் வருத்தப்பட்டோம்.. ஆனா இப்போ – சுஹாசினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்
“தி கிரேட் இந்தியன் கிச்சன்”
படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள்.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது…

நடிகை சுஹாசினி மணிரத்னம் பேசும்போது…

இந்த விழாவிற்கு கண்ணன் அழைக்கும்போது, அவர் அழைத்து எப்படி வராமல் இருப்பேன் என்று ஒப்புக் கொண்டேன்.

இப்போது இருக்கும் புது இயக்குநர்கள் அனைவரும் இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு காட்சியை 12 நாட்கள் படப்பிடிப்பு எடுக்கும்போது, ஒரு படத்தையே 12 நாட்களிலேயே எடுத்து விடுகிறார்.

சென்னையில் நல்ல ரசனையான நிகழ்ச்சி நடந்தால் நிச்சயம் போய் பாருங்கள். அப்போது தான் நாம் வளர முடியும். எனக்கு திறமை இருக்கிறது என்று நினைக்காமல் எல்லாவற்றையும் போய் பாருங்கள், கற்றுக் கொள்ளுங்கள். மெட்ராஸ் டாக்கீஸ் குழுவில் நகைச்சுவை வேண்டுமென்றால் கண்ணனை கூப்பிடுங்கள் என்று தான் கூறுவோம்.

அந்த அளவு நகைச்சுவை உணர்வு கொண்டவர். அப்படி பட்ட அவர் இந்த சீரியசான படத்தையும் அருமையாக எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யாவை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான், ரேவதி போன்றோர்கள் நீண்ட காலமாக திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஐஸ்வர்யாவை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தெலுங்கில் நான் முன்னணி நடிகையாக இருந்ததற்கு இயக்குநர் தான் காரணம். அந்த காலத்திலேயே பெண்களை புரிந்து கொண்ட இயக்குநர்கள் கே.பாலசந்தர் சாரும் தான்.

கண்ணனுக்கு இதுபோன்ற படம் எடுக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியதற்கு வாழ்த்துகள்.

கேரளாவில் விருது குழுவில் இடம் பெற்ற 9 பேர்களில் நான் ஒருவள் தான் பெண். அவர்களிடம் சண்டையிட்டு இதுதான் சிறந்த படம் என்று பார்க்க வைத்தேன்.

நான் மணியை திருமணம் செய்துகொள்ளும்போது ரூ.15 ஆயிரம் தான் இருந்தது. அவர் 5 படங்கள் தான் இயக்கியிருந்தார். நான் 90 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.

இந்த நிலையில் நண்பர் வீட்டிற்கு விருந்திற்கு சென்றிருந்தோம். அங்கு புதிதாக திருமணமான மணப்பெண்ணான எனக்கு இறுதியாகத்தான் உணவு பரிமாறினார்கள். முதலில் ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டும் என்கிற சம்பிரதாயம். அதுவும் சமையலறையில் தான் கொடுத்தார்கள்.

எனக்கு சினிமா பார்ப்பது போல அதிர்ச்சியாக இருந்தது. காலம் மாறவே மாறாதா என்று அன்று தோன்றியது.

பள்ளியில் படிக்கும்போது அம்பை என்று எழுத்தாளர். அவர் ஒரு புத்தகம் எழுதினார். அந்த கதையில் அவர்கள் வீட்டில் தயாரிக்கும் தோசையின் சுவை போன்று வேறு எங்கும் கிடைக்காது. சமையலறை மூலையில் ஏன் இவர்கள் இருக்க வேண்டும் என்று பாலசந்தரும் சிந்தித்தார்.

பெண்களின் சமையலறை நேரத்தை குறைப்பதற்காக ராமகிருஷ்ணன் ஓப்போஸ் குக்கிங் தொடங்கி இருக்கிறார். இவர்களைப் போன்ற மனிதர்களைப் பார்க்கும் போது தான் நம்பிக்கை வருகிறது.

எனக்கு கிடைத்த அனுபவம் என் வீட்டிற்கு வரும் பெண்ணிற்கு கிடைக்க கூடாது. என்னுடைய வீட்டிற்கு வரும் புது மணப்பெண்ணிற்கு நானோ அல்லது எனது கணவரோ தான் முதலில் பரிமாற வேண்டும் என்று எண்ணுகிறேன்.

இந்த படம் நிச்சயம் எல்லோரிடமும் மாற்றம் கொண்டு வரும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

Revathi and I were worried that there was no chance for talent says Suhasini

தனது சகோதரியின் சாதனையை மனதார பாராட்டிய சிவகார்த்திகேயன்

தனது சகோதரியின் சாதனையை மனதார பாராட்டிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குடியரசு தினத்தன்று தனது மூத்த சகோதரி கவுரிக்கு சிறந்த டாக்டருக்கான விருது கிடைத்ததையடுத்து உணர்ச்சிவசப்பட்ட சிவா செய்தியை வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன், டாக்டர் கௌரி விருது பெறும் புகைப்படங்கள் மற்றும் அவர் பெற்ற சான்றிதழைப் பகிர்ந்துள்ளார்.

பெருமைக்குரிய இளைய சகோதரர் ட்விட்டரில் “அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் மற்றும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள்.

உங்கள் சிறந்த மருத்துவர் விருதுக்கு வாழ்த்துக்கள் அக்கா நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், அப்பா மிகவும் பெருமைப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

Sivakarthikeyan’s emotional message to his sister Gowri after her huge achievement

‘கைதி’-யை தொடர்ந்து ‘வீரம்’ ஹிந்தி ரீமேக்..; என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.?!

‘கைதி’-யை தொடர்ந்து ‘வீரம்’ ஹிந்தி ரீமேக்..; என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் ‘கைதி’ படத்தின் ஹிந்தி ரீமேக் ‘போலா’ என்ற பெயரில் வெளியானது.

அஜய் தேவ்கான் இந்த படத்தை இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். இது ஒரிஜினல் ‘கைதி’ படம் போல இல்லாமல் நிறைய மாற்றங்கள் செய்து இருப்பதால் இதனை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அஜித்தின் ‘வீரம்’ பட ஹிந்தி ரீமேக் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இது ஒரிஜினல் வீரம் படம் போல இல்லாமல் இருப்பதால் இதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.. ஒரு சிலர் பார்த்து பயப்படாதீங்க இது வீரம் ரீமேக் தான் என்று சொன்னால் நம்பவா போறீங்க.? எனவும் கிண்டல் எடுத்து வருகின்றனர்.

இந்த ஹிந்தி ரீமேக்கை இயக்குனர் ஃபர்ஹாத் சம்ஜி இயக்கி இசையமைத்துள்ளார்.

இதில் அஜித் வேடத்தில் சல்மான் கான், தமன்னா வேடத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளனர்.

Get a sneak peek into the world of #KisiKaBhaiKisiKiJaanTeaser

https://t.co/c6zZu3Nw7x

@BeingSalmanKhan @VenkyMama @hegdepooja @IamJagguBhai @bhumikachawlat @boxervijender #AbhimanyuSingh @TheRaghav_Juyal @siddnigam_off @jassiegill @ishehnaaz_gill @palaktiwarii https://t.co/9ouYrgfVZ2

Netizens trolls KisiKaBhai KisiKiJaan Teaser

துருவ நட்சத்திரத்தை மீண்டும் கையில் எடுத்த கவுதம் மேனன். விரைவில் ரிலீஸ்

துருவ நட்சத்திரத்தை மீண்டும் கையில் எடுத்த கவுதம் மேனன். விரைவில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவுதம் மேனன் தனது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மல்டிஸ்டாரர் திட்டத்தை மெதுவாக புதுப்பிப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயாரிப்பு சிக்கல்களால் படம் தாமதமாகின. இந்த படத்தில் விக்ரம் தனது பகுதிகளுக்கு முன்னதாகவே டப்பிங் செய்தார்.

துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. ஆதாரங்களின்படி, ஜிவிஎம் தற்போது சென்னையில் ஆர் பார்த்திபனுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார் . சியான் விக்ரமின் பேட்ச் ஒர்க் பகுதிகள் தங்கலானை முடித்த பிறகு படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Gautham Menon planning to release his long delayed film with Chiyaan Vikram next?

More Articles
Follows