ஜோதிகாவின் *காற்றின் மொழி*யில் கலந்தது ஜிமிக்கி கம்மல்

ஜோதிகாவின் *காற்றின் மொழி*யில் கலந்தது ஜிமிக்கி கம்மல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jyothikaசென்ற வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பாடலான ஜிமிக்கி கம்மலுக்கு தமிழகமே நடனமாடி தலையசைத்தது. மலையாள தேசத்தில் தயாராகி வந்த இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு மிகப்பெரியது. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இப்பாடலை மீண்டும் அவர்கள் கொண்டாடும் நேரம் வந்துவிட்டது. ஆம் , ஜோதிகாவின் “ காற்றின் மொழி “ திரைப்படம் மூலம் நாம் எல்லோரும் ஜிமிக்கி கம்மல் பாடலை மீண்டும் கேட்டு ரசிக்க போகிறோம். சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா , லட்சுமி மஞ்சு , சிந்து ஷியாம் , குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஜி. தனஞ்ஜெயன் , லலிதா தனஞ்ஜெயன் , விக்ரம்குமார் ஆகியோர் பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். நாயகி ஜோதிகா மற்றும் படக்குழுவினர் இப்படத்தை வேகமாகவும் , சிறப்பாகவும் முடித்து தந்துள்ளனர்.

ஏற்கனவே நாயகி ஜோதிகாவுக்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதோடு சேர்த்து ஜிமிக்கி கம்மலும் வரும் போது அதை கேரள ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

விதார்த் , லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடமேற்று நடித்துள்ளார்.

இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தை சேர்ந்த A.H. காஷிஃப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

84 மில்லியன் ரசிகர்களை தாண்டி இன்னும் பலர் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் மாபெரும் புகழ் பெற்ற “ ஜிமிக்கி கம்மல் “ மலையாள பாடலின் உரிமையை சத்யம் ஆடியோஸ் நிறுவனத்திடமிருந்து பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனன்ஞ்ஜெயன் முறைப்படி பெற்றுள்ளார். இப்படத்தின் பாடல் உரிமையை லஹரி நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும். அக்டோபர் 18 வெளியீடாக படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

நாட்டை நாசமாக்கிய நரேந்திர மோடி; *படித்தவுடன் கிழித்துவிடவும்* இசை விழாவில் மன்சூர் அலிகான் பேச்சு

நாட்டை நாசமாக்கிய நரேந்திர மோடி; *படித்தவுடன் கிழித்துவிடவும்* இசை விழாவில் மன்சூர் அலிகான் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mansoor ali khan“தெரு நாய்கள் ” படத்தில் மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய “ஐ கிரியேஷன்ஸ்” படக்குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது “படித்தவுடன் கிழித்து விடவும் “.

“தெரு நாய்கள் ” படத்தை இயக்கிய ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள “படித்தவுடன் கிழித்து விடவும் ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை , சாலி கிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் திரையுலக வி.ஐ.பிகள் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடந்தது .

விழாவில் பேசிய புரடியூசர் கில்டு அமைப்பின் தலைவர் ஜாகுவார் தங்கம் ., ” தமிழ் சினிமாவில் தமிழன் , தமிழ் பெண்கள் தான் நடிக்க வேண்டும், இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் அதற்கு தமிழ் பெண்கள் நடிக்க வருவதில்லை… என்று பதில் வருகிறது. ‘அழகான தமிழ் பெண்களை நான் தரவா ? ‘”தமிழர்கள் தான் லைட் பாய் முதல் டைரக்டர் வரை … அனைத்து தொழில்நுட்பங்களிலும் பணிபுரிய வேண்டும் . தமிழ்நாட்டில் தமிழன் தான் ஆள வேண்டும் …. வாழ வேண்டும் . என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேச வந்த நடிகர் மன்சூரலிகான்., இங்கு பேசிய ஜாகுவார் தங்கம் அவர்கள் ., தமிழ் , தமிழன் என்றார். கலைக்கு ஜாதி ,மதம் ,மொழி கிடையாது …. என்பதால் எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றும் முயற்சிக்குக் கூட நான் எதிரானவன் . எம் .ஜி.ஆ,ர் என்.டி .ஆர் ,வி கேஆர் மண்வெட்டி பிடித்து எல்லாம் வளர்த்து எடுத்த சங்கம் அது. எனவே குறுகிய மனப்பாண்மை கூடாது …. என்பது என் கருத்து . மேலும் ,
ஜாகுவார்., இங்கு பேசும் போது ., “தமிழ் சினிமாவில் தமிழன் , தமிழ் பெண்கள் தான் நடிக்க வேண்டும், இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதற்கு, தமிழ் பெண்கள் நடிக்க வருவதில்லை… என்று பதில் வருகிறது. ‘அழகான தமிழ் பெண்களை நான் தரவா ? ‘” எனக் கேட்டார். “அப்போ அமலா பால் . ஹன்சிகா மோத்வானி …. எல்லாம் வேண்டாமா ? இதற்காக தொழிலை மாத்தி பேரைக் கெடுத்துக்காதீங்க… ஜாகுவார் …. என்பதே என் அட்வைஸ்! .என கிண்டலாக பேசிய மன்சூரலிகான் ., அடுத்து, அதிரடிக்கு தாவினார்.

பொதுவா ,நான் எந்த சினிமா விழாவுக்கு போனாலும் , அந்தப் படத்தை ஆஹா , ஒஹோ அற்புதம் அப்படின்னு சும்மாங்காட்டியும் பாராட்டி பேச மாட்டேன் .ஆனால், “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் “, “வளர்ந்தவுடன் சினதத்து விடவும் “, “சாப்பிட்டவுடன் போய் விடவும் ” அப்படிங்கற மாதிரி ., “படித்தவுடன் கிழித்து விடவும் ” எனும் இப்பட டைட்டிலே ., இப்படக் குழுவினரின் துணிச்சலைக் காட்டுகிறது.

இப்படித்தான் , “ராஜாதி ராஜ, ராஜமார்த்தாண்ட ராஜகு லோத்துங்க ……” என என் படத்திற்கு வித்தியாசமாக மிகப் பெரிய நீளமான டைட்டில் வைத்திருந்த போது , “தெற்கு தெருமச்சான் ” ஷூட்டிங் ஸ்பாட்டில் அதைப் பற்றி என்னிடம் பேசிய நடிகர்சத்யராஜும் , இயக்குனர் மணிவண்ணனும் இது என்னய்யா டைட்டில் ? போய்யா … என்றனர். ஆனால், அதன் பிறகு ஒரு நாள் சத்யராஜ் என்னிடம் ., ஒரு பங்ஷன்ல என்பேமிலியும் , ரஜினி சார் பேமிலியும் கலந்து கொண்டோம் …. அப்போ , என் பசங்களும் ,ரஜினி சார் பசங்களும் ., உங்க படபேர வச்சு , அதை தப்பு இல்லாது சொல்ற போட்டி நடத்தி சீரியஸா விளையாடினாங்க அப்பவே நினைச்சேன் நீ , ஜெயித்து விட்டாய் …. என்று என என்னைப் பாராட்டினார். அப்படி இந்தப் பட டைட்டிலும் நிச்சயம் எல்லோரையும் பேச வைக்கும்.

மோடி அரசு கொண்டு வந்த டீ மானிஸ்ட்ரேஷனுக்கு முன்பு ., தமிழ் சினிமா ,தென் இந்திய சினிமா நல்லா இருந்தது .டிமானிஸ்ட்ரேஷனுக்கு அப்புறம் 500 சிறுபட புரடியூசர் காணாமல் போயிட்டாங்க … அப்படித்தான் விலங்குகள் நல வாரியம்னு ஒரு அமைப்பு … எந்த மிருகத்தை வைத்தும் படம் எடுக்கவுடாமல் பண்ணுது. ஒரு படம்னா டீஸர், டிரைலர் , ஆடியோ ரிலீஸ் விழா எல்லாம் வச்சு இந்தப் படத்துல இது இருக்கு …. அது இருக்குன்னு ….சொல்லி ரசிகர்களை அழைக்கிறாம். ஆனா , திடீர்ன்னு எட்டு வழிச்சாலை போடுவோங்கிறது இந்த அரசாங்கம் . 8 வழி யார் கேட்டா ? 8 வழிச்சாலைக்கு அவசியம் என்னன்னும் , அதால யார் யாருக்கு வேலை கிடைக்கும் ? யாருக்கெல்லாம் பயன் …? அப்படின்னு இந்த அரசாங்கம் விளக்கணும்ல…? சினிமா விழா எடுத்து ரசிகனை தியேட்டருக்கு வரவழைப்பது மாதிரி 8 வழி ஏன்னு …? சொல்லு. ஏன் சொல்ல மறுக்கிறாய் ..? இதற்கெல்லாம் பதில் சொல்லாத இந்த அரசாங்கம் , எந்தளவுக்கு கேடுகெட்ட அரசாங்கம் என்றால் ., 10 ஆயிரம் கோடி வருதுங்கறதுக்காக 8 வழிச்சாலை போடத் துடிக்குது. கோவை சிறுவாணி தண்ணீய தனியாருக்கு விற்க பார்க்குது . காத்து, ஆக்ஸிஜன் விற்கப் போகுது. அடுத்து தாய்பாலையும் மீட்டர் வச்சு அளந்து குழந்தைகளுக்கு தர முயற்சிக்கும் .தமிழன் முழித்திருக்கும் போதே அவன் பேண்ட்டை அவிழ்க்கப் பார்க்கிறது. தமிழன் என்றால் இளக்காரமாகிவிட்டது. கேட்டால் இதெல்லாம் மத்திய அரசின் ” மேக் இன் இண்டியா” திட்டம் என்கிறார்கள். நீ என்ன வெங்காயம் விற்க , மயிர் புடுங்க .. ஆட்சி நடத்துகிறாய் ? ஏழு லட்சம் கோடி என்ன செலவு செய்தீர்கள் ? 5 பைசா பொது மக்களக்கு வந்ததா..? சினிமா நாசம் , விவசாயம் நாசம் , எல்லாம் நாசம் . இது தான் மத்திய அரசின் ” மேக் இன் இண்டியா” திட்டமா ? பெரிய பெரிய நடிகன்பின்னாடி போனா இப்படித்தான். மத்திய அரசின்”பணம் செல்லாமை” அறிவிப்புக்குபின் நைட்டோடு நைட்டாக ஓஹோ என ஓடிய படங்கள் எத்தனை தியேட்டர்களில் எத்தனை படங்கள் ஒடவில்லை? அதற்கு பணத்தை திருப்பி தந்தானா ? பணக்காரன் யாராவது கஷ்டப்பட்டானா ? பலகோடி புது நோட்டுகள் எப்படி ? பல பணக்காரன் கையில் கிடைத்தது ? இது என்ன நாடா ..? திருவள்ளுவர் சொன்னது மாதிரி நம் நாட்டை நமக்கே வளமாக்கி எடுத்துக்கொள்ளத் தெரியாதா ..? ஏன் இத்தனை எதிர்கட்சி எம்எல்ஏக்கள் இருந்தும் யாரும் பேச மறுக்கின்றனர் ? எல்லாம் கமிஷன் தான் காரணம் . கூடிய விரைவில் நாமெல்லாம் ஒன்று கூடி நாம் தமிழர்ன்னு ஆட்சி அமைப்போம் .

காந்தி , காமராஜர் எல்லாம் , அன்று பிரிட்டீஷ்காரனை ஓடவிட்டார்கள். இன்று ,இவர்கள் , கொரியா ,ஜப்பான் காரனை எல்லாம் கூவி கூவி அழைக்கின்றனர். இந்தப் படம் , ” படித்தவுடன் கிழி க்கவும் ” , நாம் ,,இந்த மாதிரி திட்டங்களை கிழிக்கவும் . நாடு நாசம் ஆவதை தடுக்கவும் தயங்கக் கூடாது … என ஆவேசமாக பேசி அமர்ந்தார்.

மன்சூரைத் தெரடர்ந்து பேசிய இப்பட இயக்குனர் .,
ஹீரோ ஹீரோயின் வேல்யூ இல்லாத புது டீமினரின் படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க அனைத்து சினிமா சங்கங்களும் முயற்சிக்க வேண்டும் என்றதோடு ., மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலம் பாதிப்பு குறித்து என் முதல் படமான “தெரு நாய்கள் ” படத்தில் சுட்டி காட்டினேன் அப்படம் பேசப் பட்ட .அளவிற்கு போகவில்லை. இரண்டாவதாக, இந்த ., “படித்தவுடன் கிழித்து விடவும் ” படத்தில் ., ஹாரர்கதை என்றாலும் பேய் வழியாக இன்சூரன்ஸ் எனும் பெயரில் படித்த , படிக்காதவன் உள்ளிட்ட எல்லோரிடமும் நடக்கும் கொள்ளையை பேசி உள்ளேன். எஸ்.டிஆர், யுவன் உள்ளிட்டோர் இப்படத்தின் சிங்கிள் டிராக், டீஸர் எல்லாம் வெளியிட்டு உதவியது மறக்க முடியாதது நன்றி . இப்படத்தின் வெற்றியை பொறுத்து நிச்சயம் மூன்றாவது படமும் எடுப்பேன் என்றார்.

மேலும் , இவ்விழாவில் , நடிகர்கள் கூல் சுரேஷ், ஆர்யன் . இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ் , பேரரசு , ராம் சிவா , ஆண்டனி ,” ஒரு கிடாயின் கருணை மனு ” சுரேஷ் சங்கைய்யா “மொட்டசிவா கெட்டசிவா ” இசையமைப்பாளர் அம்ரீஷ், பாடகர் மலேசியா ஷாஸ் , பாடலாசிரியர் உமா ,தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கத் தலைவர் விஜயமுரளி ., மற்றும் ,இப்படத் தயாரிப்பாளர்கள் உஷா , சுரேஷ்குமார் , எஸ்எம்டி கருணாநிதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக “படித்தவுடன் கிழித்து விடவும் ” படத்தின் பாடல்களும் , டிரையிலரும் போட்டுக் காட்டப்பட்டு இசை வெளியீடும் இனிதே நடந்தேறியது!

கமல்-மணிரத்னம் சந்தித்த பிரச்சினைகள்; *பூமராங்* இசை விழாவில் சுஹாசினி பேச்சு

கமல்-மணிரத்னம் சந்தித்த பிரச்சினைகள்; *பூமராங்* இசை விழாவில் சுஹாசினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suhasiniமசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. ரதன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் இசை தகட்டினை கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியாகராஜன் வெளியிட, சுஹாசினி மணிரத்னம் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முன்னதாக இயக்குனர் மணிரத்னம் படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை வாழ்த்தினார்.

கண்ணன் மணிரத்னம் என்ற பள்ளியில் இருந்து வந்தவர், நன்கு கலையை கற்றவர். அவரே சொந்தமாக தயாரித்து இவ்வளவு பிரமாண்டமாக ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அவரை வைத்து கூடிய விரைவில் ஒரு படம் தயாரிப்பேன் என்றார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

நான் அறிமுகப்படுத்திய இரண்டு பேர் இந்த படத்தில் இருக்கிறார்கள். முரளி வீட்டுக்கு போகும்போது அதர்வா சின்ன வயதில் இருந்தே எனக்கு நன்றாக தெரியும். இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஒரு கதை சொன்னபோது, அவர் தான் அதர்வாவை நடிக்க வைக்கலாம் என சொன்னார். அப்படி உருவான படம் தான் பாணா காத்தாடி. ஒவ்வொரு படத்திலும் திறமைகளை மெருகேற்றிக் கொண்டே வருகிறார். இயக்குனர் கண்ணன் முதலில் மனோபாலாவிடம் இணை இயக்குனராக வேலை பார்த்தார். அந்த நேரத்திலேயே நல்ல திறமைசாலி. அதன் பிறகு மணிரத்னம் சாரிடம் வேலை பார்த்தார். பின் தன்னம்பிக்கையோடு என்னிடம் வந்து ஒரு கதை சொல்லி, நான் அந்த படத்தை தயாரிக்க வேண்டும் என விரும்பினார். என் பேனரில் அவர் அறிமுகமானது மகிழ்ச்சி. அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்றார் சத்யஜோதி தியாகராஜன்.

கடந்த ஆண்டு இவன் தந்திரன் படத்தை நானும், கண்ணனும் சேர்ந்து தயாரித்திருந்தோம். பெரிய வெற்றி பெற வேண்டிய படம், ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படத்தின் வெற்றி கை நழுவி போனது. ஒரு சில மாதங்கள் நாங்கள் கஷ்டத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் அதர்வா கொடுத்த வாய்ப்பு தான் இந்த பூமராங். இயக்குனருக்கு நடிகர்களின் ஆதரவு மிக முக்கியமானது. சரியான காலகட்டத்தில் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

மூன்றாம் பிறை படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நான் பெங்களூர் போனபோது, சத்யஜோதி தியாகராஜன் சாரை பார்த்த நினைவுகள் இந்த நேரத்தில், இந்த மேடையில் ஞாபகம் வருகிறது.திட்டமிட்ட படி, நேர்த்தியான முறையில் படப்பிடிப்பு நடக்கும். மெட்ராஸ் டாக்கீஸின் செல்லப்பிள்ளை கண்ணன். எங்கள் கம்பெனியில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கு தான் அதிகம் இருக்கும். அவருக்கு நகைச்சுவை உணர்வும் ரொம்ப அதிகம். நீங்கள் உங்களுக்கு பிடித்த இயக்குனராக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் முதல் 25 ஆண்டுகள் கமல் உடனும், அடுத்த 30 ஆண்டுகள் மணிரத்னம் உடனும் கழித்திருக்கிறேன். அவர்கள் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை. இன்றும் கமல் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்து வருகிறார். அதர்வா உங்கள் திறமைகள் உங்களுக்கு தெரியும், யாருக்கும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, படத்தின் ட்ரைலரை பார்த்த பிறகு கூட, மணிரத்னத்துக்கு இது என்ன மாதிரி படம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே படத்தின் முதல் வெற்றி என்றார் சுஹாசினி மணிரத்னம்.

நானும் கண்ணனும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் தான் மணி சாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தோம். அப்போது நான் தான் சீனியர் என கண்ணன் சொல்வார், ஆனால் அது தான் உண்மையாகி இருக்கிறது. எனக்கு முன்பே படம் இயக்கினார், நான் இயக்குனராகும் போது அவர் அடுத்த கட்டமாக தயாரிப்பாகி இருக்கிறார், அவரின் உண்மையாம உழைப்புக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார் இயக்குனர் மிலிந்த் ராவ்.

கண்ணன் என் நண்பன், உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே எங்கள் நட்பு தொடர்ந்து வருகிறது. கடந்த படத்தில் கிடைக்க வேண்டிய வெற்றி கிடைக்காமல் போனது, அது இந்த படத்தில் கிடைக்க வேண்டும் என்றார் இயக்குனர் சமுத்திரகனி.

கண்ணன் ரொம்ப ஷார்ப். எல்லாத்துலயும் ரொம்ப ஃபஸ்ட். மேகி கண்ணன் என்று அவரை சொல்லலாம். நான் 15 படத்தில் நடித்து வருகிறேன், அதில் கொஞ்சம் கூட பந்தாவே இல்லாமல் இருந்த ஹீரோ அதர்வா தான். கண்ணன், நீங்கள் உங்களுக்கு பிடித்த இயக்குனராக இருப்பது தான் முக்கியம், நினைத்ததை தயங்காமல் செய்யுங்கள் என்றார் நடிகர் ரவி மரியா.

கண்ணன் சார் இவன் தந்திரன் படத்தின் போது எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று எனக்கு தெரியும், அதற்கும் சேர்த்து இந்த படத்தில் அவருக்கு வெற்றி கிடைக்கணும். ஒரு இயக்குனருக்கு நாயகனின் ஆதரவு நிச்சயம் தேவை. எனக்கு வனமகன் படத்தில் ஜெயம் ரவி கொடுத்த ஆதரவை போல, இங்கு அதர்வா மிகவும் ஆதரவாக இருந்திருக்கிறார் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் இயக்குனர் விஜய்.

கண்ணன் எத்தனை படம் எடுத்தாலும் அதில் நான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன், பாடல் வரிகளையும், பாடலாசிரியரையும் மதிக்க தெரிந்த ஒரு இசையமைப்பாளர் ரதன். எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் மணிரத்னம் சார். நான் இந்த படத்துக்கு எழுதிய பாடல்களில் எனக்கு தேசமே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். விவசாய பிரச்சினை மட்டும் பேசாமல் மற்ற பிரச்சினைகளையும் பற்றி பாடலில் சொல்ல நினைத்தேன், அதற்கு வாய்ப்பு கொடுத்த கண்ணன் சாருக்கு நன்றி என்றார் பாடலாசிரியர் விவேக்.

தற்போதைய மிக முக்கியமான பிரச்சினையை பேசியிருக்கிறது இந்த பூமராங். ஆயுத எழுத்து படத்தில் வந்த ஜன கன மண பாடலை போன்ற ஒரு பாடல் தான் இந்த ‘தேசம்’ பாடலும். எல்லா வேலையையும் தன் தோள்களில் போட்டுக் கொண்டும் கூட, மிகச்சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார். தண்ணீர் சேமிப்பை நாம் வீட்டில் இருந்தே தொடங்கலாம். நீரை வீணாக்காதீர்கள், இன்னும் கொஞ்ச காலத்துக்கு அப்புறம் தண்ணீர் பஞ்சம் வரும். மீம்ஸ் போடறவங்க எல்லாம் கொஞ்சம் பொறுப்பா இருக்கணும், மக்களும் கண்ட கண்ட மீம்ஸ் ஷேர் பண்ணாதீங்க என்றார் நடிகர் சதீஷ்.

கண்ணன் அவர்களின் இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். ரொம்ப புத்திசாலி இயக்குனர். நடிகர்களுக்கு மிகவும் சுதந்திரம் கொடுக்கும் ஒரு இயக்குனர். நான் இன்று எல்கேஜி படம் நடிக்க மிக முக்கிய காரணம் அதர்வா தான். அவர் தான் நீ இப்படி ஒரு படம் நடிக்கலாமே என சொல்லி என்னை நடிக்க உந்தினார். சமுத்திரக்கனி மாதிரி ஒரு நண்பன் இருந்தால் வாழ்க்கை சுபம். நடிகர்கள் எல்லாம் என்ன பெருசா கருத்து சொல்ல வர்றீங்கனு கேட்குறாங்க, இன்றைய காலத்தில் எல்லோரும் நிச்சயம் கருத்து சொல்லணும் என்றார் ஆர்ஜே பாலாஜி.

மேயாத மான் படத்தில் தங்கச்சியா நடிக்கிறப்போ எனக்கு அவ்வளவா தெரியாது, அது தான் நம்மை நல்ல இடத்துக்கு கொண்டு போகும் என்று. நீங்க நல்லா, அழகா இருக்கீங்கனு சொல்றத விட, நல்லா நடிக்கிறீஙகனு சொல்றது தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்றார் நாயகி இந்துஜா.

நானும் ஒரு தமிழ் பையன் தான். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நான் இசையமைக்க முடியாத சூழல். ஆனாலும் கண்ணன் சார் தான் நான் வெயிட் பண்றேன், நீ தான் இசையமைக்கணும் என சொல்லி என் மீது நம்பிக்கை வைத்தார். நான் இசையமைப்பாளர் ஆக மிக முக்கியமான காரணம் ஏ ஆர் ரகுமான் தான். ரோஜா பாடல்களை நான் குழந்தையாக இருக்கும்போது கேட்டேன், அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றார் இசையமைப்பாளர் ரதன்.

நாம் நல்லதோ, கெட்டதோ எது செய்தாலும் அது ஒரு நாள் நம்மை வந்து சேரும் என்பது தான் பூமராங். கண்ணன் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்பது உண்மை தான். 50 நாளில் படத்தை முடிப்பேன் என சொல்லி, 43 நாட்களில் மிக வேகமாக படத்தை முடித்து விட்டார். மொத்த குழுவின் உழைப்பு அபரிமிதமானது. எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தார். தயாரிப்பாளராகவும் முழு கவனத்துடன் இருப்பார். ரதன் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்பதில் உறுதியாக இருந்தார் கண்ணன். நம்ம ஊரு இசையமைப்பாளர் ரதன் தெலுங்கில் ஒரு கலக்கு கலக்கி விட்டு வந்திருக்கிறார் என்பதில் எனக்கு சந்தோஷம். சுஹாசினி அவர்களுடன் நடிப்பது எனக்கு பெருமை என்றார் நாயகன் அதர்வா முரளி.

2008ல் ஜெயங்கொண்டான் ரிலீஸ் ஆகியது, 2018ல் இன்று பூமராங். இதுவரை மொத்தம் 7 படங்கள் இயக்கியிருக்கிறேன். என் குரு மணிரத்னம் அவர்களை அறிமுகப்படுத்திய சத்யஜோதி தியாகராஜன், எனக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தது பெருமையான விஷயம். சுஹாசினி அவர்களை சந்தித்தது தான் என் வாழ்வின் திருப்புமுனை. கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பிறகு விவசாயத்தை பற்றிய ஒரு படம் பூமராங். 130 கோடி மக்கள் இருந்தும் நஷ்டத்தில் போகிற ஒரு துறை விவசாய துறை தான். அதை படம் பேசும். நட்புக்கு மரியாதை கொடுக்கும் மனிதர் சமுத்திரகனி. அவருடன் என் நட்பு வாழ்நாள் முழுக்க தொடர ஆசை. வழக்கமான பாம்பே நாயகியாக இல்லாமல் சென்னை அண்ணா நகர் பெண்ணை நாயகியாக நடிக்க வைத்திருக்கிறோம். இசையமைப்பாளர் ரதன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். இது கமெர்சியல் படமாகவும், நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் இருக்கும் என்றார் இயக்குனர் கண்ணன்.

விழாவில் நாயகி மேகா ஆகாஷ், தயாரிப்பாளர் கதிரேசன், ஞானவேல்ராஜா, ராம் பிரசாத், இயக்குனர் ஆர் கே சரவணன், முருகேசன், ஈரோடு கலெக்டர் அழகிரி, ஒளிப்பதிவாளர் பிரசன்ன எஸ் குமார், கலை இயக்குனர் சிவ யாதவ், எடிட்டர் செல்வா, வெங்கட் சுபா ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

ஜுங்காவை அடுத்து *ஜாங்கோ* என்ற பெயரில் படம்; சீ.வி.குமார் தயாரிக்கிறார்!

ஜுங்காவை அடுத்து *ஜாங்கோ* என்ற பெயரில் படம்; சீ.வி.குமார் தயாரிக்கிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jangoதமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக “ஜாங்கோ” எனும் புதிய படத்தை தயாரிக்கின்றார்.

இப்படத்தின் படப்பூஜை இன்று இனிதே நடைபெற்றது. “ஜாங்கோ” படத்தின் படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான திரு. சதிஷ் குமார் போன்ஸ்லே துவங்கி வைத்தார்.

இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திக்கேயன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

சதிஷ் என்ற புதுமுகம் இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கருணாகரன், ராம்தாஸ், RJ ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளிசி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்)

இயக்கம் – மனோ கார்த்திக்கேயன்

ஒளிப்பதிவு – கார்த்திக் K தில்லை

இசை – நிவாஸ் பிரசன்னா

படத்தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால்

கலை – கோபி ஆனந்த்

காஸ்ட்யும் டிசைனர் – மீனாக்ஷி ஷ்ரிதரன்

சண்டைப்பயிற்சி – ஹரி திணேஷ்

மக்கள் தொடர்பு – நிகில்

கமலின் *விஸ்வரூபம் 2* படத்துக்கு தடையாக வந்த மர்மயோகி

கமலின் *விஸ்வரூபம் 2* படத்துக்கு தடையாக வந்த மர்மயோகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

marmayogi kamalகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாகிறது.

கமல் படங்கள் என்றாலே இறுதிக்கட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வரும். இதுநாள் வரை இப்படத்திற்கு வராத பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இப்படத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரமீட் சாய் மீரா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில்…

மர்மயோகி படத்தில் கமல் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. படம் உருவாகவே இல்லை. மேலும் வாங்கிய சம்பளத்தையும் கமல் திருப்பித் தரவில்லை.

எனவே வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியை கமல் திருப்பி தர வேண்டும், அதுவரை விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட இருக்கிறது. எனவே விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீசில் பிரச்சினை உருவாகும் எனத் தெரிகிறது.

அரசியலில் இருந்தாலும் சினிமாவில் பயணிக்க கமலின் மெகா ப்ளான்

அரசியலில் இருந்தாலும் சினிமாவில் பயணிக்க கமலின் மெகா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalசினிமாவில் இருந்தபோதே அதன் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தியவர் கமல்ஹாசன்.

நடிப்பு, இயக்கம், நடனம், பாடல், தயாரிப்பு என எந்த துறையாக இருந்தாலும் அதில் தன் திறமையை பளிச்சிட செய்தவர் அவர்.

தற்போது சினிமாவை தாண்டி அரசியல் உலகிலும் பயணித்து வருகிறார்.

தற்போது கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்து விட்ட பின் மெதுவாக சினிமாவில் இருந்து விலகி, அரசியல் பயணம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் தனக்கு வாழ்வளித்த சினிமாவில் தொடர்ந்து நீடிக்க ஒரு திட்டம் ஒன்றை தீட்டியுள்ளாராம்.

சென்னையில் உலகத் தரத்தில் ஒரு திரைப்பட பள்ளி தொடங்க வேண்டும் என்பதுதானாம் அது.

திறமையான கலைஞர்களுக்கு தரமான பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் எனவும், அதில் அவர் ஆசிரியராக இல்லாவிட்டாலும் அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என அவர் விரும்புவதாக தகவல்கள் வந்துள்ளன.

More Articles
Follows