BREAKING அரசியல் கட்சி தொடங்கும் விஜய்.? தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்..?

BREAKING அரசியல் கட்சி தொடங்கும் விஜய்.? தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay in politicsநடிகர் விஜய்க்கு தமிழகத்தில் உள்ள ரசிகர் பட்டாளம் நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் அவருக்கு உள்ளன.

மேலும் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரிலும் அவரின் ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்திருக்கிறாராம்.

கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு உருவானது.

இந்த தகவல் குறித்து அவரது PRO தரப்பில் விசாரித்த போது விஜய் பற்றிய செய்தி தவறானது என விளக்கமளித்துள்ளார்.

விஜய் மௌனம் கலைப்பாரா?

The news spreading about Thalapathy Vijay political party registered today is untrue

பாக்கெட்டை நிரப்பும் பிரபலங்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லையா..? ஐகோர்ட் கேள்வி

பாக்கெட்டை நிரப்பும் பிரபலங்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லையா..? ஐகோர்ட் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரம்மி எனப்படும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலைக்கு காரணமான சூதாட்டத்தை தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சூதாட்ட விளம்பரத்தில் பிரபலங்கள் நடிப்பதால் இளைஞர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் புகார்கள் வருகின்றன.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் எனவும் . விளம்பர தூதுவர்களாக உள்ள பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில்…

பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்தி விளம்பரம் செய்கின்றனர்.

பொது மக்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Madras High Court issues notice to Virat Kohli, Ganguly and Tamannah in PIL against online games

kohli ganguly tamannah

செகன்ட் மேரேஜ் சர்ச்சை..; பாய் ப்ரெண்ட் மீது கேஸ் போடும் அமலாபால்

செகன்ட் மேரேஜ் சர்ச்சை..; பாய் ப்ரெண்ட் மீது கேஸ் போடும் அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார் அமலாபால்.

ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும் விவாகரத்து ஆனது.

தற்போது 2வது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் விஜய்.

ஆனால் அமலாபால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கை அமலாபால் 2வதாக திருமணம் செய்துள்ளதாக போட்டோஸ் வெளியானது.

அந்தப் படங்களை பவ்னிந்தர் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பின்னர் சில மணி நேரங்களில் அதை நீக்கி விட்டார்.

ஆனால் அப்போது அமைதியாக இருந்தார் அமலாபால்.

தற்போது சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் அமலா.

அதில், ‘எக்ஸ் பாய் ப்ரெண்ட் பவ்னிந்தர் சிங், தனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக குறிப்பிட்டு சில படங்களை வெளியிட்டுள்ளார்.

அவற்றை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், அவர் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என அமலாபால் கேட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வரவே பவ்னிந்தர் சிங்க்கு எதிராக அவதூறு வழக்கு தொடர அமலாபாலுக்கு அனுமதியளித்துள்ளார்.

Amala Paul to file case against her ex boy friend

Amala-Paul-wedding-photos-3

‘பிக்பாஸ்’ பாரபட்சம்..: சரவணனை கண்டித்த கமல் பாலாவை கண்டுக்கலையே.?

‘பிக்பாஸ்’ பாரபட்சம்..: சரவணனை கண்டித்த கமல் பாலாவை கண்டுக்கலையே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan balaji murugadossவிஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 4’ கடந்த ஒரு மாதமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

தற்போது அனல் பறக்கும் வாய்ச்சண்டைகள் அதிகம் இடம் பெற்றுள்ளது.

ஒரு நாள் நடிகை சனம் ஷெட்டியை பாலா, ‘தருதலை’ என கேலி செய்தார்.

இதனையடுத்து கோர்ட் செட்டப் ஒரு டிசைன் செய்து பாலா, சனம் இருவரது சண்டை பற்றியும் இரு அணிகளாக விவாதம் நடைபெற்றது.

இறுதியாக பாலாவுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி சுசித்ரா.

இவையில்லாமல் சனம் பற்றி பாலா பேசும்போது ‘அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகிப் போட்டியில் வென்றார்,’ எனவும் ஒரு முறை கூறியிருந்தார்.

ஆனால் கடந்த வருட பிக்பாஸ் சீசனில் பெண் அவமதிப்பு பற்றிய சர்ச்சை உருவானது.

எப்போதோ நடந்த ஒரு விஷயத்தை நடிகர் சரவணன் சொன்னதை அடுத்து அவரை உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு நீக்கினார்கள்.

ஆனால், இந்த சீசனில் பாலா எதை செய்தாலும் பிக்பாஸ் அவரை கண்டு கொள்வதில்லையே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு பட்டப்பெயர்களை வைத்து வருகிறார் பாலாஜி.

ஆரிக்கு அட்வைஸ் ஆரி, சனம்க்கு முந்திரிக்கொட்டை, வேல்முருகன்க்கு டிப்ளமேட்டிக், சோம்க்கு பப்பட் என ஒவ்வொருவருக்கும் பெயர் வைத்துள்ளார் பாலாஜி.

ஆனால் அவரை குழந்தை என அழைத்தால் மட்டும் ஏன் கோபப்படுகிறார்?

இதுபோல பல்வேறு கண்டனங்களை பிக்பாஸ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Did Balaji Murugadoss cross his limits ?

மாஸ்டரை இயக்கும் ‘டாக்டர்’ பட டைரக்டர்..? வேற மாரி.. வேற மாரி..

மாஸ்டரை இயக்கும் ‘டாக்டர்’ பட டைரக்டர்..? வேற மாரி.. வேற மாரி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nelson dilipkumarமாஸ்டர் படத்தை அடுத்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என கூறப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.

கிட்டத்தட்ட இது உறுதியான பட்சத்தில் இந்த படத்திலிருந்து விலகினார் முருகதாஸ்.

எனவே தளபதி 65 படத்தின் இயக்குனர் யார்? என்ற கேள்வி விஜய் ரசிகர்களிடையே எழுந்தது.

விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் பேரரசு இயக்குவார் என்று தகவல்கள் பறந்தன.

ஆனால் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வரவில்லை. இந்த நிலையில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இயக்குவார் என கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையா? அல்லது இதுவும் வழக்கம்போல வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒருவேளை இது உண்மையானால் இது வேற மாரியான கூட்டணியாக இருக்கும் என நம்பலாம்.

Nelson Dilipkumar to direct Thalapathy 65

ஹீரோவாக சிம்புவின் 18 ஆண்டுகள்…; ஹிட் எத்தனை? ப்ளாப் எத்தனை?

ஹீரோவாக சிம்புவின் 18 ஆண்டுகள்…; ஹிட் எத்தனை? ப்ளாப் எத்தனை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuகுழந்தை நட்சத்திரமாக பலர் நடித்தாலும் ஒரு சில குழந்தைகளே மக்கள் மனதில் இடம் பிடிப்பர்.

அதில் கமல், ஸ்ரீதேவி, மீனா போல முக்கியமானவர் நடிகர் சிம்பு.

அவரின் தந்தை டிஆர் இயக்கத்தில் 12க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். எங்க வீட்டு வேலன் படத்தை யாராலும் மறக்க முடியாது.

2002ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெளியான ‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படம் வருவதற்கு முன்பே 2001ல் ‘சொன்னால்தான் காதலா’ என்ற டிஆரின் படத்தில் ஒரு பாடலுக்கு தோன்றியிருந்தார்.

இந்த நிலையில் இன்றுடன் சிம்பு ஹீரோவாகி 18 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனை சிம்பு ரசிகர்கள் டிரெண்ட் செய்துள்ளனர்.

இவர் தற்போது ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தன்னுடைய 46வது படமாக “ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் ஹிட் படம் வரிசையில் ஓரிரு படங்களை மட்டுமே குறிப்பிட்டு சொல்ல முடிகிறது.

மன்மதன், வாலு, வல்லவன், தொட்டி ஜெயா, கோவில், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, சிலம்பாட்டம், இது நம்ம ஆளு, செக்கச் சிவந்த வானம் ஆகிய சொற்ப ஹிட் படங்களே உள்ளன.

இதில் மெகா ஹிட் படம் என ‘மன்மதன்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஆகிய படங்களை மட்டுமே சொல்ல முடியும்.

ஆனாலும் இவருக்கான ரசிகர்களுக்கு என்றுமே குறைவில்லை எனலாம்.

இவருக்கு உள்ள திறமைக்கு சரியான படங்கள் அமையவில்லை என்றே சினிமா வல்லவன்கள் சொல்கின்றனர்.

மேலும் இவருடைய கால்ஷீட் சொதப்பல்கள், சூட்டிங்க்கு சரியான நேரத்திற்கு வராத பஞசாயத்து, கிசுகிசுக்கள் உள்ளிட்டவையே இவருக்கு சினிமாவில் பின்னடவை தந்துள்ளது என்கின்றனர்.

தற்போது உடல் எடையை குறைத்து தனது 2வது இன்னிங்க்சை ஆரம்பித்துள்ளார். இனி என்னாகும் என்று பார்க்கலாம்.

STR completes 18 years in Kollywood

More Articles
Follows