‘தி பேமிலி மேன் 3′ பாகத்தின் கதை இதுதானா.? இந்தியாவை குறி வைக்கும் சீனா

family man 3தி பேமிலி மேன் வெப் சீரிஸின் கதை நம்மில் பலர் அறிந்த ஒன்றுதான்.

இந்தியாவின் ரா அமைப்பில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் திவாரி சர்வதேச சதி திட்டங்களை எப்படி முறியடித்தார் என்பது கதைக்களம்.

சிறப்பு அதிகாரியாக மனோஜ் பாஜ்பாய் நடிக்க அவரது மனைவியாக பிரியாமணி நடித்து இருந்தார்.

தற்போது இதன் 2வது சீசன் பலத்த எதிர்ப்புக்கு இடையே வெளியாகியுள்ளது. 2வது சீசனில் சமந்தா இலங்கை தமிழ் பெண்ணாக நடிக்க இதனை ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர்.

இதில் ஈழத் தமிழர்களுக்கும் எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி சர்ச்சைகள் கிளம்பி இருந்தன என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

3வது பாகத்தில் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை இரண்டாவது சீசன் இறுதியில் காட்டி இருந்தனர்.

அதில்…. ‘தி பேமிலி மேன்’ 3வது சீசனில் கொரோனா பாதிப்பு காட்சிகளை காட்டுகிறார்கள்.

அதன்பிறகு ஒரு சீனாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கையில் லேப் டாப்புடன் பணி புரிகிறார்.

தனது லேப் டாப்பை திறந்து ஒருவருடன் உரையாடுகிறார்.

“நான் நாகாலாந்தையும், அருணாச்சல பிரதேசத்தையும் கவர் செய்து விட்டேன் உங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறேன் என மெசேஜ் அனுப்புகிறான்.

உடனே அனுமதி கிடைத்த உடன் தொடர் முடிகிறது.

இந்தியா மீது கொரோனா வைரசை பரப்ப திட்டமிடுகிறது சீனா என்பதை காட்டியிருக்கிறார்கள்.

The family man 3 story is leaked ?

Overall Rating : Not available

Related News

Latest Post