தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆட்சியில் அமர மாட்டேன். ஆட்சி மாற்றம் உருவாகனும். மக்களிடையே அரசியல் மாற்றத்திற்கான எழுச்சி உருவாக வேண்டும்.
அப்போது அரசியல் களத்துக்கு வருவேன்.. என ரஜினிகாந்த் இன்று காலை அறிவித்தார்.
இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான தங்கர் பச்சான் கூறியதாவது…
அரசியல் தொழிலாகிவிட்ட இக்காலத்தில் ரஜினி கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.
அவர் களத்தில் இறங்கினால் மட்டுமே அந்த மாற்றம் உருவாகும்!
மாற்றம் உருவான பின் களத்திற்கு வருவேன் எனச் சொன்னால் மக்களுக்கு அவர் தேவையே இல்லை!
கட்டாயம் அவர் களம் இறங்குவார்! ரஜினி அவர்களை வரவேற்கிறேன்!
என தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
