தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ மற்றும் விஜய் இணைந்துள்ள படம் தளபதி 63.
இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்பட வில்லை.
இப்பட படப்பிடிப்பு, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.
சூட்டிங் சமயத்தில் எலக்ட்ரீசியன் செல்வராஜ் என்ற நபர் மீது அவரது தலையில் போக்கஸ் லைட் தவறி விழுந்தது.
படுகாயங்களுடன் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நிலை குறித்து, நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்துள்ளார் விஜய்.
தளபதி மருத்துவமனைக்கு சென்று வந்த போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.