தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளை தன்னுடைய பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் சந்தித்தார்.
இந்த சந்திப்பில்… விஜய் மக்கள் இயக்கத்தின் வலுப்படுத்துவது பற்றியும் அதன் மூலம் பல நலத்திட்டங்கள் செய்வது பற்றியும் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தினாராம்.
அப்போது தேவையற்ற போஸ்டர்கள் எதுவும் ஒட்ட வேண்டாம் என அவர்களிடம் விஜய் அறிவுறுத்தினாராம்.
இன்றைய ஆலோசனை கூட்டத்தில் திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகள் மற்றும் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ‘நாளைய முதல்வர் விஜய்’ என்ற போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் நேரத்தில் அரசியல் சக்தியாக மாறும் என்று பேசியிருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
Thalapathy Vijay met VMI members in his residence