மலேசியா டூ சென்னை.; ஒரு ஃபுல் தியேட்டரையே புக் பண்ணி ‘மாஸ்டர்’ படம் பார்த்த விஜய் ரசிகை

Masterலோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ விஜய் நாயகனாக மாளவிகா நாயகியாக, விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர்.

ஜனவரி 13 பொங்கலை முன்னிட்டு இந்த படம் இந்தியாவில் ரிலீசானது

ஆனால் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் வெளியாகவில்லை.

இந்த நிலையில், மலேசியாவில் வாழும் ஆஷ்லினா என்ற பெண் சென்னைக்கு வந்து மாஸ்டர் படத்தை பார்க்க ஒரு தியேட்டரையே புக் பண்ணியிருக்கிறார்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த இவர் இவர் விஜய்யின் தீவிர ரசிகை.

கடந்த சில வருடங்களாக இவர் மலேசியாவில் வசித்து வருகிறார்.

‘மாஸ்டர்’ படத்தை பார்க்க சென்னை வர பலமுறை முயற்சித்துள்ளார்.

ஒரு வழியாக சென்னை வந்து அண்ணாசாலையில் உள்ள 150 இருக்கைகள் கொண்ட ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்துள்ளார்.

இதன் பின்னர் சென்னை உள்ள தனது உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு தியேட்டருக்கு சென்று படம் பார்த்து ரசித்துள்ளார்.

அந்த படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Thalapathy fan girl came from Malaysia to watch Master movie in chennai

Overall Rating : Not available

Latest Post