தளபதி 65 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்..? டைரக்டர் இவரா..?

தளபதி 65 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்..? டைரக்டர் இவரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 65 movie will be produced by Sun Pictures லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியானது.

இதில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், விஜய்யின் 65-ஆவது படம் தொடர்பான சில தகவல்கள் வருகின்றன.

அதாவது தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர், முருகதாஸ் அல்லது அட்லி இவர்களில் யாராவாது ஒருவர் இந்த இப்படத்தை இயக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே விஜய் நடித்த சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 65 movie will be produced by Sun Pictures

சூர்யா-தாணு-வெற்றிமாறன் கூட்டணியில் ஜிவி பிரகாஷ்

சூர்யா-தாணு-வெற்றிமாறன் கூட்டணியில் ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again GV Prakash team up with Suriya for Vetrimaaran direction சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படம் ஏப்ரலில் வெளியாகிறது.

இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இது சூர்யாவின் 40வது படமாகும்.

இந்த நிலையில், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வெற்றிமாறன், சூர்யா, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் என நம்பலாம்.

Again GV Prakash team up with Suriya for Vetrimaaran direction

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷ் பட இயக்குனர் இவரா..?

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷ் பட இயக்குனர் இவரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Who will be director of Dhanush 44 Here is hintசமீபகாலமாக படத்தயாரிப்பை விட தான் நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

இவர் நடித்துள்ள பட்டாஸ் படம் ஜனவரி 16 திரைக்கு வருகிறது.

இந்த படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இந்த நிலையில் தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.

ஆனால் பட இயக்குனர் யார்? என்பதை அறிவிக்கவில்லை.

தற்போது இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் துனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Who will be director of Dhanush 44 Here is hint

2020 ஆயுதபூஜைக்கு அதிரடியாக வரும் தலைவர் 168

2020 ஆயுதபூஜைக்கு அதிரடியாக வரும் தலைவர் 168

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sun picture plans to release Thalaivar 168 on Ayudha Poojaதர்பார் பட ரிலீசாவதற்குள் தன் அடுத்த படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்கி வருகிறார்.

ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

டி.இமான் இசையமைக்க இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் 2020 தீபாவளி இந்த படத்தை வெளியிடயிருந்தனர்.

ஆனால் தற்போது முன்கூட்டியே ரிலீஸ் செய்ய அதாவது இந்தாண்டு ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Sun picture plans to release Thalaivar 168 on Ayudha Pooja

Jump cuts ஹரி பாஸ்கரின் நினைவோ ஒரு பறவை

Jump cuts ஹரி பாஸ்கரின் நினைவோ ஒரு பறவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jump cuts hari bhaskar tamil filmமைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் நினைவோ ஒரு பறவை.இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார்.

50 வயது நிரம்பிய கணவன் மனைவி பாரிஸ் பயணமே இப்படத்தின் கதை கரு. அவர் கடந்து வந்த பாதை நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள் அதன் அவசியம் என்ன என்பதை விளக்குகிறது இப்படம்.

ஒளிப்பதிவாளர் மணி BK தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தமனுக்கு அவரின் முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தில் புதுவிதமாக இசையைக் கொடுத்திருக்கிறார் இந்த பாடலைக் கேட்கும்போது இது தமனின் இசையா? என்றே கேட்க தோன்றும் அளவுக்கு இருக்கும்.

இப்படத்தில் பள்ளிப்பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி நடித்துள்ளார்கள் வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர் நடிகை நடிக்க உள்ளனர் விரைவில் அதன் அறிவிப்பு வரும் இவர்கள் தான் கதையின் நாயகன் நாயகி.

தற்போது மீனாமினிக்கி என்ற பாடல் மிகப்பெரிய சாதனையாக வெளிவந்த 6 நாட்களில் 7 இலட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இப்படலை இயக்குனர் ரிதுன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து மொழிகளில் தயாராகிறது ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம் V.C. வடிவுடையான் இயக்குகிறார்

ஐந்து மொழிகளில் தயாராகிறது ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம் V.C. வடிவுடையான் இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jeevan in paambattam6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது
வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ” பாம்பாட்டம் ”

காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இதுதான் இவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வரும் வி.சி வடிவுடையான் தற்போது ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட்ச் செலவில் உருவாகும் இந்த படத்தை இயக்குகிறார்.

இது இதுவரை ஹாரர் படங்களில் பார்த்திராத திரைக்கதையை இந்த படத்தில் பார்க்கலாம். அந்தளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கவுள்ளார் வி.சி.வடிவுடையான். ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ஐந்து மொழிகளிலும் இருந்து முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை கேட்ட நடிகர் ஜீவன் உடனே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். முண்ணனி கிராபிக்ஸ் நிறுவனமொன்று இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார்கள்.
வசனம் – பா.ராகவன்
ஒளிப்பதிவு – இனியன் J. ஹரீஸ்
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – யுகபாரதி
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்
இணை தயாரிப்பு – A.பன்ணை இளங்கோவன்
தயாரிப்பு – V.பழனிவேல்
மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் இம் மாதம் நடைபெற உள்ளது என்கிறார் இயக்குனர் V.C.வடிவுடையான்.

More Articles
Follows