ஜெயலலிதாவின் படத்தில் எம்ஜிஆர் & கருணாநிதி யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் படமாக எடுத்து வருகின்றனர்.

தலைவா பட இயக்குனர் விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கி வருகிறார்.

இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்க உள்ளார். அவர் இதற்கான கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராமிடம் நடன பயின்று வருகிறார்.

எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கவுள்ளாராம்.

கருணாநிதி கேரக்டரில் நடிக்க பிரகாஷ்ராஜிடம் பேசி வருகிறார்களாம். அவரின் பதிலுக்காக படக்குழு காத்திருக்கிறது.

ஏற்கெனவே மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் மோகன்லால் மற்றும் கருணாநிதி கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களை காப்பாற்ற வரும் ரட்சகனாக சரவணன் ஸ்டோர்ஸ் ஓனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த ஒரு பண்டிகை காலம் என்றாலும் டிவி.க்களில் விளம்பரங்கள் அதிகம் வருவதை பார்த்திருப்போம். அதிலும் சென்னையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் அடிக்கடி வருவதை பார்த்திருப்போம்.

முன்பெல்லாம் சினிமா நட்சத்திரங்களுக்கு கோடி கோடியாக கொட்டி கொடுத்த இதன் ஓனர் சரவணன் அருள் தற்போது அவரே ஆடல் பாடல் என அசத்தலாக விளம்பரங்களில் வருகிறார்.

இந்த நிலையில் இவர் ஒரு சினிமாவில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

ஜேடி ஜெர்ரி என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு பேன்டசி படம் என்றும், பூமியில் வசிக்கும் மக்களை, வேற்று கிரகத்தில் இருந்து வந்து காப்பாற்றும் ரட்சகனாக அவர் நடிக்கவுள்ளாராம்.

நாயகி யார்? என்பதுதான் இதுவரை சஸ்பென்சாக உள்ளது. பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நடிக்க வரமாட்டுறாரு.; செம லாஸ்… சிம்பு மீது ஞானவேல்ராஜா புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிம்பு மீது புகார் கொடுக்காத தயாரிப்பாளர்களை எண்ணிவிடலாம் போல. தினம் அவர் மீது புகார்கள் வருகின்றன.

பரபரப்பாக அறிவிக்கப்பட்ட மாநாடு படத்தை சிம்புவின் கால்ஷீட் சொதப்பலால் அவரை படத்தில் இருந்து நீக்கினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்த நிலையில் கன்னட படமான மப்டி படத்தின் ரீமேக்கில் சிம்பு, கௌதம் கார்த்திக் இருவரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

கன்னட படத்தை இயக்கிய நார்தன் தான் தமிழிலும் இந்த படத்தை இயக்கினார். சிம்பு சிவ ராஜ்குமார் கதாபாத்திரத்திலும், கௌதம் கார்த்திக் ஸ்ரீமுரளி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தனர்.

இப்பட ஷூட்டிங்கிற்கும் சிம்பு செல்லாமல் இருந்துள்ளார்.

அப்படியே வந்தாலும் பாதிநாள் தான் சூட்டிங்கில் இருப்பாராம்.

தற்போது சிம்புவின் பிரச்சினையால் இந்த படமும் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இணைத்து புகார் கடிதமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ளார் ஞானவேல் ராஜா.

Gnanavel Raja complaint against Simbu on his call sheet issue

ரஜினி வருவார்; அவருடன் நிற்பேன்; ‘ராங்கா’ பேசிய ராதாரவி பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னை பற்றிய பேச்சு எப்போதும் மீடியாவில் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது சர்ச்சையாக பேசுவார் ராதாரவி.

பல மேடைகளில் அரசியல்வாதி முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பலரையும் கிண்டலடிப்பார்.

ரஜினியை பல மேடைகளிலும் கிண்டலடித்து பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் ரஜினியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

முன்னாள் மேயரும், ரஜினியின் தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜனின் பிறந்த நாள் விழாவில் அதிமுக பிரமுகர் நடிகர் ராதாரவி கலந்துக் கொண்டு பேசினார்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கராத்தே தியாகராஜன் சொல்லிக்கொண்டே இருக்கிறார். நானும் அதை நம்பிச் சொல்கிறேன்.

அவர் வந்தால் நான் பின்னால் இருப்பேன். ரஜினி சடக்கென்று பேசி ஒரு முடிவை எடுக்கமாட்டார். யோசிச்சுத்தான் எடுப்பார். ஆனால் இந்த முறை முடிவெடுப்பார்.

ரஜினி எப்படி வெல்வார்கள் என்று கேட்டார்கள்.? ஜெயிப்போம் அவ்வளவுதான். ஏனென்றால் பவர் இருக்கவேண்டும். மனிதாபிமானம் இருக்கவேண்டும். எதிர்க்கிற சக்தி வேண்டும். இது எல்லாம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

இவை எல்லாம் இணைந்துள்ளது. ஏனென்றால் வலுவான சக்தி ஒன்று சேரும்போது வலுவற்ற சக்தி தோற்கும்.” என பேசினார் ராதாரவி.

I will stand with Rajini in his Political party says Radharavi

எஜுகேஷன் சிஸ்டம் சரியில்ல; மாத்தனும்.. லதா ரஜினி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அபிராமபுரத்தில் மழலையர் பள்ளியை லதா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.

இதன்பின் செய்தியாளர்கள் பேசும்போது கல்வி முறை குறித்து பேசினார்.

அப்போது… 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ‘தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும். தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது. கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும்’ என லதா ரஜினி பதிலளித்தார்.

We must Change Education system says Latha Rajinikanth

உலத்திரைப்பட விழாவிற்கு தேர்வான பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதுமிலிருந்து பாராட்டு குவித்து வரும் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது. திரை வரலாற்றில் முக்கியமானதொரு படைப்பாக, உலக சினிமாவை தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த படைப்பாக, உருவாகி இருக்கும் “ஒத்த செருப்பு சைஸ் 7” பல்வேறு வகையிலும் சினிமா உலகத்தினருக்கு பாடமாக விளங்கி வருகிறது. மேலும் ஒரு படத்தை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்பதை இப்படம் மூலம் பாடமாக எடுத்திருக்கிறார் பார்த்திபன். திரையரங்கில் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வரும் “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் தற்போது IFFI 2019 உலகத் திரைப்பட திருவிழாவிற்கு 26 படங்களில் ஒன்றாக தேர்வாகியுள்ளது.

தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் பார்த்திபன் இது குறித்து பகிர்ந்து கொண்டது…

தேர்வாளர்களின் அன்பால் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன். அவர்கள் தந்த இந்த அடையாளம் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு உலகளவிலான கதவை திறந்து வைத்துள்ளது. இந்தப்படம் ஒரு மனிதன் மட்டுமே நடித்து இயக்கி தயாரித்த படம். ஒரு புது முயற்சி ஆனால் ஒரு மனிதனின் சாதனையாக அடையாளப்படுத்தப்படும் இப்படத்திற்கு பின்னால் சில பெரும்மனிதர்களின் உழைப்பும் அன்பும் அடங்கியிருக்கிறது. அளவில்லாத அன்பின் வழி இசையமைத்த சந்தோஷ் நாராயணின் பாடலும், சத்யாவின் பின்னணி இசையும் மனம் கவர்ந்த ராம்ஜியின் ஒளிப்பதிவும், ரசூல் பூக்குட்டியின் அசாத்திய ஒலிப்பதிவும் இப்படத்திற்கு பெரும்பலமாக அமைந்திருந்தது. இந்தப்படத்தை பராட்டி தங்கள் வாழ்த்துக்கள் மூலம் ரசிகர்களிடம் சேர்த்த இந்தியாவின் பெரும் நட்சத்திரங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அங்கீகாரம் எனக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது இந்திய திரைப்பட திருவிழாவிற்கு 26 படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அது இத்திரைப்பட திருவிழாவின் 50வது தங்க ஆண்டில் நடைபெற்றிருப்பது மேலும் கொண்டாட்டதிற்குரியது. இந்நேரத்தில் தமிழில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு படைப்பான லக்‌ஷ்மி ராம்கிருஷ்ணன் அவர்களின் ஹவுஸ் ஓனர் படத்திற்கும் எனது அன்பு வாழ்த்துக்கள். இந்த அங்கீகாரம் மேலும் பல புது முயற்சிகளுக்கும், சோதனை முயற்சிகளுக்கும் ஊக்கம் தந்திருக்கிறது என்றார்.

More Articles
Follows