தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ரஜினி தற்போது ஞானவேல் இயக்கிய வரும் ‘வேட்டையன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் ‘தலைவர் 172’ படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.
’தலைவர் 172’ படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாடியவாலா என்பவர் தயாரிக்க இருக்கிறார்.
’ரஜினியுடன் இணைவது சந்தோஷமாக இருக்கிறது.. எனக்கு மறக்க முடியாத பயணமாக இருக்கும்” இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
பாலிவுட்டில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்து உள்ளார் சாஜித் நாடியவாலா. ’ஹவுஸ் ஃபுல்’ படத்தின் 5 பாகங்களையும் ’பாகி’ படத்தின் 3 பாகங்களையும் தயாரித்து உள்ளார் சாஜித் நாடியவாலா.
Thalaivar 172 movie news update