தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த படத்தை சிவா இயக்க இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் ரஜினியுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடக்கிறது.
இப்படத்தில் குஷ்பு, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இவர்களில் குஷ்புவும், மீனாவும் ரஜினிக்கு இரண்டு மனைவிகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
25 வருடங்களுக்கு முன் வெளியான வீரா படத்தில் மீனா மற்றும் ரோஜா இருவரும் ரஜினிக்கு மனைவிகளாக நடித்திருந்தனர். தற்போதும் இந்த படத்தில் மீனா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
