‘தலைவர் 161’ பட பர்ஸ்ட் லுக் வெளியானது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

இதன் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் ரஜினி.

இப்படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதல் இப்படத்திற்கு தலைவர் 161 என பெயரிட்டு அழைத்து வருகின்றனர் ரசிகர்கள்.

இதன் சூட்டிங் வருகிற மே 28ஆம் தேதி தொடங்கவுள்ளது என கூறப்பட்ட நிலையில் இணையத்தில் இப்பட போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இது அதிகாரப்பூர்வ போஸ்டர் இல்லையென்றாலும், அந்தளவு தத்ரூபமாக ரசிகர்கள் வடிவமைத்துள்ளனர்.

எனவே அனைத்து தரப்பு ரசிகர்களும் இதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Thalaivar 161 first look poster design

 

 

விஜய்க்காக விட்டுக் கொடுத்தார் ஏஆர் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஸ்பைடர்’.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

இதில், பிரபல மலையாள நடிகரான ஹரீஷ் பெராடி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கிடாரி’, ‘ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நடிகருக்கு அட்லி இயக்கிவரும் விஜய் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

எனவே என்னவென்று செய்வதால் அவர் குழம்பியுள்ளார். இதனையறிந்த ஏஆர். முருகதாஸ் ‘முதலில் விஜய் படத்தை முடித்துவிட்டு வாருங்கள்.

உங்கள் காட்சிகளை பிறகு எடுத்துக் கொள்கிறேன்’ என்றாராம்.

முருகதாஸ் விட்டுக் கொடுத்ததால், ஹரீஸ் பெராடி இப்போது ஐரோப்பாவில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.

Malayalam actor Hareesh Peradi teamsup with Vijay 61 and Spyder project too

தனுஷின் ‘வடசென்னை’ படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக தனுஷ் கலந்து கொண்டு நடித்து வந்தார்.

இந்நிலையில் இதன் சூட்டிங் நேற்றுடன் முடிவடைந்துள்ளது என ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவர் கேரக்டரில்தான் அமலாபால் நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, வெங்கடேஷ் எடிட்டிங் செய்து வருகிறார்.

Aishwarya Rajesh tweet about Dhanush project Vada Chennai

மே 15 முதல் ரசிகர்களை சந்திக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஏப்ரல் மாதம் தன் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க திட்டமிட்டு இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதுகுறித்த ரசிகர்களின் ஆலோசனைக் கூட்டமும் சென்னையில் நடைப்பெற்றது.

ஆனால் எல்லாம் ரசிகர்களை சந்தித்து தனித்தனியாக போட்டோ எடுப்பது முடியாத காரியம் என்பதால் அப்போது அந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக வாட்ஸ் அப்பில் ரஜினிகாந்த் தன் குரலை பதிவு செய்திருந்தார்.

விரைவில் மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்திப்பேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், வரும் மே 15ஆம் முதல் 19ஆம் தேதி வரை (5 நாட்கள்) ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை அவர் சந்திக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.

மேலும் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார் சூப்பர் ஸ்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக ஒரு பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாகவும், அந்த அட்டை வைத்திருந்தால் மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Superstar Rajinikanth will meet his fans from 15th May 2017 onwards

விஷால் அறிவிப்பால் தன் முடிவை மாற்றினாரா விஜய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக விஷால் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின்னர் சில நாட்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மத்திய மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை விடுத்து இருந்தன.

அந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தது.

அதன்படி எந்த படத்தின் அறிவிப்பும் வெளிவராது எனவும், சூட்டிங் நடைபெறாது எனவும் தெரிவித்து இருந்தன.

இதனால் திரையுலகமே ஸ்தம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அட்லி இயக்கி வரும் தளபதி 61 படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

ஒரு வேளை திரையுலக போராட்டம் தொடரும் என்றால், அப்போது இதை வெளியிடுவது சரியாக இருக்காது, விஜய் 61 பட பர்ஸ்ட் லுக்கில் மாற்றம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

எனவே மே மாதம் இறுதிக்குள் (மே 28ஆம் தேதி) பர்ஸ்ட் லுக் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Vijay 61 first look may be pre poned due to Cinema industry strike

ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து கதை, வசனம் எழுதியுள்ள படம் வேலையில்லா பட்டதாரி2.

இதில் தனுஷ் உடன் அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்டோர் நடிக்க, சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை ஜூலை மாதம் 28ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார் தனுஷ்.

அன்றைய தினம் தனுஷின் பிறந்த நாள் என்பதால் இது அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை அளித்துள்ளதாம்.

சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்ய, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்கிறார்.

கலைப்புலி எஸ்.தாணுவும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIP2 movie release will be on Dhanush Birthday special to his fans

More Articles
Follows