விஜய்யை அடுத்து அஜித் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்; அவனுக்கு இதான் வேலையா?

விஜய்யை அடுத்து அஜித் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்; அவனுக்கு இதான் வேலையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IMG-20200719-WA0101சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடி குண்டு வைத்து இருப்பதாக மர்ம நபர் ஒருவன் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

எனவே வெடிகுண்டு நிபுணர்கள் அஜித் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீஸ் விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் தான் தொலைப்பேசியில் அழைத்தது தெரியவந்தது.

இதே நபர் தான் ஏற்கெனவே நடிகர் விஜய் வீட்டுக்கு மிரட்டல் விடுத்திருந்தவராம்.

வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்ததும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையை முடித்துக்கொண்டனர்.

மரக்காணம் போலீசார் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து, நீலாங்கரை காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட புவனேஸ்வரன், ஏற்கனவே நடிகர் விஜய் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்து கைது செய்யப்படவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ரஜினி வீட்டுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்து மற்றொரு மர்ம நபர் போன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thala Ajiths residence receives fake bomb threat

தியேட்டர்கள் திறப்பது எப்போது..? அமைச்சரின் அறிவிப்பால் திரையுலகினர் அதிர்ச்சி

தியேட்டர்கள் திறப்பது எப்போது..? அமைச்சரின் அறிவிப்பால் திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Minister talks about Cinema theaters reopen after lock downகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 16-ம் தேதியே தமிழகம் மற்றும் புதுச்சேரியல் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டதட்ட 4 மாதங்களுக்கு பின்னர் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் இருந்தாலும் சினிமா தியேட்டர்கள் மற்றும் சினிமா சூட்டிங்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் என திரைத்துறையினர் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே சில தயாரிப்பாளர்கள் ஆன்லைன் ஓடிடி தளத்தில் படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தொற்று எண்ணிக்கை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜமாக திரும்பும் நிலை வந்த பின்னர்தான் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த பதிலால் திரையுலகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TN Minister talks about Cinema theaters reopen after lock down

விஜய் சூர்யா தனுஷ் ரசிகர்கள் போட்டி..; இதெல்லாம் எங்க போய் முடியுமோ.?

விஜய் சூர்யா தனுஷ் ரசிகர்கள் போட்டி..; இதெல்லாம் எங்க போய் முடியுமோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Suriya Dhanush fans clash on Common DP release recordsதங்கள் அபிமான நடிகர் பிறந்த நாள் வந்தால் அதற்காக ஒரு காமன் டிபி (COMMON DP) என்ற பெயரில் ஒரு போஸ்டரை டிசைன் செய்து ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த ஜீன் மாதம் விஜய் பிறந்தநாளன்று சினிமா பிரபலங்கள் விஜய்யின் ‘காமன் டிபி’யை வெளியிட்டனர். அது கிட்டதட்ட 55 பிரபலங்களை கொண்டது.

அந்த பிரபலங்களின் எண்ணிக்கையை முறியடிக்க வேண்டும் என சூர்யா ரசிகர்கள் நினைத்து ஜுலை 23ம் தேதி வரவிருக்கும் சூர்யாவின் பிறந்தநாளுக்கான காமன் டிபியை 110க்கும் மேற்பட்ட பிரபலங்களை கொண்டு வெளியிட்டனர்.

அது போல் ஜுலை 28ம் தேதியன்று பிறந்தநாளைக் கொண்டாட உள்ள தனுஷ் பிறந்தநாளுக்கு பல சினிமா பிரபலங்களை ஒன்றிணைத்து ‘காமன் டிபி’யை வெளியிட்டு வருகின்றனர்.

இனிமேல் இதிலும் ரசிகர்களிடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் எங்க போய் முடியுமோ? என்பதுதான் தெரியவில்லை.

Vijay Suriya Dhanush fans clash on Common DP release records

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசிய நபர்..; வைராகும் வீடியோ

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசிய நபர்..; வைராகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Late Sushant Singh Rajput Spirit video goes viralதோனி படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட்டில் தலை விரித்தாதும சினிமா வாரிசு அரசியல் தான் அவரது தற்கொலைக்குக் காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பான வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டீவ் ஹப் என்ற நபர் சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசியதாக இரண்டு பாகங்களைக் கொண்ட வீடியோவை யு-டியுபில் வெளியிட்டுள்ளார்.

அதில் இடம் ஆவி என்று சொல்லப்பட்ட அந்த குரல் சுஷாந்த் சிங் குரல் போலவே உள்ளதாக அவரது ரசிகர்கள் வீடியோவின் கமெண்ட் பகுதியில் பதிவிட்டுள்ளனர்.

அப்படியிருக்கிறதா? என்பதை நீங்களே இந்த வீடியோவை பார்த்து சொல்லுங்கள்…

Late Sushant Singh Rajput Spirit video goes viral

தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.; பெரியார் சிலை விவகாரம் பற்றி கமல்

தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.; பெரியார் சிலை விவகாரம் பற்றி கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal tweet about Orange paint on Periyar statue controversy கோவை மாவட்டத்தில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஈ.வெ.ராமசாமி (பெரியார்) சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் ஊற்றி அவமதித்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து, ஈ.வெ.ரா சிலையை அவமதித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த காவி சாயம் பூசிய சம்பவத்திற்கு பல அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.

இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Kamal tweet about Orange paint on Periyar statue controversy

பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்க 25 தேசிய விருது கலைஞர்கள் கோரிக்கை

பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்க 25 தேசிய விருது கலைஞர்கள் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

National award winners appeal to Centre to confer Dadasaheb Phalke Award on Bharathirajaஇயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஜீலை 17ஆம் தேதி தனது 78-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு தாதா சாகிப் பால்கே விருதை வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கமல்ஹாசன், மணிரத்னம், வைரமுத்து, பார்த்திபன், தனுஷ், சேரன், பாலா, பாண்டிராஜ், வசந்தபாலன், சமுத்திரகனி, எஸ்.தாணு, வெற்றிமாறன், ஜனநாதன், அகத்தியன் உள்பட 25 தேசிய விருது பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

அந்த மனுவில்… “இயக்குனர் பாரதிராஜா, தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர். 43 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர்.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சிவாஜி கணேசன், ராஜேஷ்கன்னா, கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியவர்.

தமிழ் சினிமாவை முதன் முதலாக கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர். 50-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாத் துறையின் நலனுக்காக ஊக்கத்துடன் உழைத்து வருகிறார். பாரதிராஜாவுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான “தாதாசாகிப் பால்கே” விருதை இந்த ஆண்டு வழங்குவதற்குப் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

இது அவருடைய மகத்தான பங்களிப்புக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்ட முறையான அங்கீகாரமாகவும் இருக்கும்”

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

National award winners appeal to Centre to confer Dadasaheb Phalke Award on Bharathiraja

More Articles
Follows