மெர்சலுக்கு அடுத்த இடத்தை பிடித்த தானா சேர்ந்த கூட்டம்

மெர்சலுக்கு அடுத்த இடத்தை பிடித்த தானா சேர்ந்த கூட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thaana Serndha Kootam Teaser became fastest 500K likes teaser after Mersalசில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு படம் ரிலீசானால், அதன் வசூல் எவ்வளவு? எத்தனை நாட்கள் ஓடியது? வெற்றிவிழா கொண்டாடப்பட்டதா? என்பதே பலரின் பேச்சாக இருக்கும்.

ஆனால் தற்போது படம் வெளியாகி 3 அல்லது 5 நாட்களில் சக்ஸ்ஸ் மீட் வைக்கும் அளவுக்கு திரையுலகம் முன்னேறிவிட்டது.

அதற்கு ஏற்ப யூடியுப் சாதனை மற்றும் லைக்ஸ் எவ்வளவு,? என்பதே தற்போதைய டிரெண்டாகிவிட்டது.

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் டீசர் பலத்த வரவேற்பை பெற்று 1 மில்லியன் லைக்ஸை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து அண்மையில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட டீஸர் 500k லைக்குகளை பெற்று முன்னேறி வருகிறது.

எனவே #SecondFastest500KTSKTeaser என்ற ஹாஸ்டேக்கை உருவாக்கி சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

Thaana Serndha Kootam Teaser became fastest 500K likes teaser after Mersal

30 ஆண்டுகளாக அம்பிகா கண்ட கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி

30 ஆண்டுகளாக அம்பிகா கண்ட கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ambikas 30 years of dream fulfilled by Traffic Ramasamyடிராபிக் ராமசாமி… இவர் பெயரைக் கேட்டாலே தமிழக காவல்துறை சும்மா அதிரும்ல என்றே சொல்லலாம்.

மக்களுக்கு தொந்தரவாக உள்ள நடைபாதை பேனர்கள் மற்றும் இதர விஷயங்களில் ஆர்வம் காட்டி கோர்ட்டில் வழக்கு தொடர்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

சமூக ஆர்வலரான இவரது பெயரில் ஒரு படம் உருவாக அந்த கேரக்டரில் விஜய் தந்தை டைரக்டர் எஸ்ஏ. சந்திரசேகர் நடித்து வருகிறார்.

விஜய் விக்ரம் என்பவர் இயக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் அம்பிகா நடிக்கிறார். அதுபற்றி அவர் கூறியதாவது…

“நான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன்.

பல்வேறு பட்ட மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், செண்டிமெண்டோடு கலந்த நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாக, கனவாக இருந்து கொண்டிருந்தது .
‘டிராபிக்ராமசாமி’ என்கிற படத்தின் மூலம் அந்தக்கனவு நிறைவேறி இருக்கிறது.

‘நான் சிகப்பு மனிதன்’என்ற படத்தில் ஒரு வக்கீல் வேடத்தில் நடித்தேன். அதை எஸ் .ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து அவர் நடிக்கும் ‘டிராபிக் ராமசாமி’ என்கிற படத்தில் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக நடிக்கிறேன்.

அது கதையோடு கலந்த நகைச்சுவை பாத்திரம். எனக்கு இது மிகவும் புதுமையான பாத்திரமாக மாறுபட்ட நடிப்பு அனுபவமாக இருந்தது. ஒரு வகையில் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி வந்துள்ளது.” இவ்வாறு அம்பிகா கூறியிருக்கிறார்.

Ambikas 30 years of dream fulfilled by Traffic Ramasamy

தேர்தலில் போட்டியிட விஷால் மனுதாக்கல்; ஆர்கே.சுரேஷ் உடனிருந்தார்

தேர்தலில் போட்டியிட விஷால் மனுதாக்கல்; ஆர்கே.சுரேஷ் உடனிருந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal at sivaji statueதயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்கப் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் சென்னையில் உள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

எனவே அவர் இன்று மனுதாக்கல் செய்தார்.

அதுபற்றிய விவரம் வருமாறு…

விஷால் இன்று காலை 7:30 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு வீட்டிலிருந்து நடந்தே சென்று அம்பாளை தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி T- நகரில் அமைந்துள்ள முன்னாள், எ முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய இல்லத்திற்கு சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின் அங்கிருந்து கிளம்பி ராமாவரத்தில் அமைந்துள்ள முன்னால் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய சிலைக்கு சுமார் 8:30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதை தொடர்ந்து அடையாறில் அமைந்துள்ள செவாலியர் சிவாஜியின் மணிமண்டபத்திலுள்ள நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுடைய சிலைக்கு 10.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதை தொடர்ந்து சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னால் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் முன்னால் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சமாதிக்கும் , முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சமாதிக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதை தொடர்ந்து மாலை 4.35 மணியளவில் ஆர்.கே நகரிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் வரிசையில் நின்று விஷால் மனுத்தாக்கல் செய்தார்.

சட்ட ஆலோசகர் சார்லஸ், நடிகர் விஜய் பாபு, ரமணா, R.k.சுரேஷ், உதயா ஆகியோர் உடன் இருந்தனர்.

Actor Vishal files nomination for RK Nagar By Election

vishal pay respect to mgr and jayalalitha

இனி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்; சிவகார்த்திகேயன் முடிவுக்கு என்ன காரணம்.?

இனி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்; சிவகார்த்திகேயன் முடிவுக்கு என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் அதிக கவனம் ஈர்த்து வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் நயன்தாரா, பஹத்பாசில், சிநேகா ஆகியோருடன் இணைந்துள்ள படம் வேலைக்காரன்.

மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் நேற்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக வெளியானது.

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது…

நான் மோகன் ராஜா சார் மேலே வைத்த நம்பிக்கைதான் இந்தப்படம். இப்படத்துக்காக எனக்கு என்ன பேர் கிடைத்தாலும் அது மோகன் ராஜா சாருக்குதான்.

இதில் நடிக்கும்போது மிக சந்தோஷமா இருந்தது. ஆனால் ஒரு சில காட்சிகள் நெஞ்சை பாரம் கொள்ள வைத்துவிட்டது.

ஒரு சீனில் உண்மையான டாக்டர் ஒருவரே நடித்துள்ளார். அந்த சீன் எடுக்கும்போது நான் உட்பட பலருக்கும் கண்கள் கலங்கிவிட்டது.

இப்போது இந்த மேடையை பயன்படுத்தி ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன்.

இனி நான் விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன். இதற்கு காரணம் என்ன? என்பதை இப்போது சொல்லமுடியாது.

அதைச் சொன்னால், படத்தின் கதை தெரிந்து விடும்.

அதற்காக விளம்பரங்களில் வருவது எல்லாம் தவறானவை என நான் சொன்னவில்லை.

என்னைப் பார்த்து ஒரு குழந்தைக்கோ, மற்றவருக்கோ எந்த பாதிப்பும் வரக்கூடாது.” என்று நெகிழ்ச்சியாக பேசினார் சிவகார்த்திகேயன்.

சில மாதங்களுக்கு முன் போத்தீஸ் ஆடை விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

பஹத்பாசில் உடன் போட்டி போட முடியாது.: சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

பஹத்பாசில் உடன் போட்டி போட முடியாது.: சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and fahadh faasilமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் வேலைக்காரன்.இப்படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள நடிகரும் நடிகை நஸ்ரியாவின் கணவருமான பஹத்பாசில் நடித்துள்ளார்.

வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பஹத்பாசில் உடன் நடித்த அனுபவம் பற்றி சிவகார்த்திகயேன் பேசியதாவது…

இன்று ஒரு முக்கியமான வேலை உள்ளதால் பஹத்பாசில் இந்த விழாவுக்கு வரவில்லை.

அவருடன் நடித்ததில் பெரும் மகிழ்ச்சி. அவர் ஒரு ஹாலிவுட் நடிகரை போன்றவர்.

அவருடன் போட்டி போட்டு நடிக்க சொல்லி நான் ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால் விடுவேன்.

என்னால் நிச்சயம் அவருடன் போட்டி போட்டு நடிக்க முடியாது. எனவே நான் அவரின் நடிப்பை அருகில் நின்று ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.” என்று பேசினார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய சேரன் வலியுறுத்தல்

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய சேரன் வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cheran vishalதயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ளார் நடிகர் விஷால்.

தற்போது திடீரென அரசியல் களத்திலும் குதித்துள்ளார்.

மாற்றம் வரவேண்டும் என கூறி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிட போவதாக கூறி, இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

மனுதாக்கல் செய்வதற்கு முன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் விஷாலின் இந்த அரசியல் முடிவுக்கு சேரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்து விஷால் விலகும் வரை தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இருந்து உள்ளிருப்பு போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி பத்திரிகையாளர்களை சந்தித்த சேரன் கூறியதாவது…

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு நடிகராக விஷால் அரசியல் தேர்தலில் போட்டியிடலாம்.

ஆனால் ஒரு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்துக் கொண்டு அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது.

நடிகர் சங்கம் அரசாங்கத்தை நம்பியில்லை. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசை நம்பியுள்ளது. அதனை சார்ந்தே சங்கத்தை நடத்த வேண்டியுள்ளது.

தற்போது ஜிஎஸ்டி (உள்ளாட்சி) வரியை குறைத்துள்ளார்கள். அவர் அரசியலில் எதிர்த்தால் அவர்கள் மீண்டும் வரியை உயர்த்துவார்கள்.

இதனால் 1230 தயாரிப்பாளர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படும்.

8 ஆண்டுகளுக்கு பிறகு சின்ன பட்ஜெட் படங்களுக்கு மானியம் கொடுக்கப்பட்டது.

விஷாலின் அரசியல் முடிவால் அந்த மானியம் நிறுத்தப்படலாம்.

அவர் தலைவர் பதவியை ராஜினாமாசெய்து விட்டு தேர்தலில் நிற்பதேநல்லது இல்லையெனில் நிறைய “அசோக்குமார்களை” (தற்கொலை செய்துக் கொண்டவர்) சங்கம் சந்திக்கும்.

தலைவர் பதவியை ராஜினாமா செய்யட்டும் அல்லது தேர்தலில் போட்டியிடாமல் இருக்கட்டும். அதன்பின்னர் என்னிடமுள்ள 75 கேள்விகளுக்கு பதில்சொல்லட்டும்.” என்று பேசினார் சேரன்.

More Articles
Follows