படத்தின் லாபத்தை வைத்தே நடிகர்களின் சம்பளம்; தயாரிப்பாளர்கள் அதிரடி

rajini vijay ajith suriya vikramகோலிவுட் வேலை நிறுத்தத்திற்கு பிறகு அதிரடியான நடவடிக்கைகள் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டு வருகிறது.

அதில் முக்கியமான விஷயமாக நடிகர்களின் சம்பளம் குறைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, நடிகர் சங்கத்தினர் சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை செய்தனர்.

தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வந்திருந்தனர்.

இவர்களுடன் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, ஆர்யா, கலையரசன், சுஹாசினி, கஸ்தூரி, நகுல், ஜிவி பிரகாஷ், பரத், கவுதம் கார்த்திக், கணேஷ் வெங்கட்ராம், கிருஷ்ணா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் நடிகர் கார்த்தி பேசினார். அவர் பேசியதாவது…

“படத்தின் லாபத்தை வைத்து நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும். ஊதிய நிர்ணயம் விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அமல்படுத்தப்படும்” என்றார்.

TFPC decided to fix Tamil heros salary based on Profit of their movies

Overall Rating : Not available

Latest Post