தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாகசைதன்யா.
இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நாகசைதன்யாவுக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.
இவர் ‘லவ் ஸ்டோரி’ என்ற பட சூட்டிங்குக்காக தெலங்கானா மாநில கோதாவரி ஆற்றில் படமாக்கப்பட்ட ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார்.
இதனால் நாகசைதன்யா ரசிகர்கள் அங்கே திரண்டனர்.
அப்போது நாகசைதன்யா படகு சவாரி செய்வது போல ஒரு காட்சியை படக்குழுவினர் படமாக்கி வந்தனர்.
அதில் தீவிர ரசிகர் ஒருவர் நாகசைதன்யாவை பார்க்க ஆற்றில் குதித்து நீந்தி சென்றார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகரை பார்த்த நாகசைதன்யா தன் படகில் ஏற்றி பின்னர் கேரவனுக்கு அழைத்து சென்று அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
உயிருக்கு ஆபத்தான இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அட்வைஸ் செய்து அந்த ரசிகரை அனுப்பி வைத்துள்ளார் நாகசைதன்யா.
Telugu actor Naga Chaitanya’s fan jumps into a river to meet him
Neekuna fanism ki avadhulu levu Anna @chay_akkineni ❤️
Ne cult fanism level veru anthe #ThankYouTheMovie#LoveStoryOnApril16th pic.twitter.com/ImJjKZ4HOj
— Aarya Prasad (@Aaryaprasad) March 2, 2021