ரஜினியை போல அவரது ரசிகர்களும் நல்லவர்கள்..; அரசியல் சேறு அவர் மீது ஒட்ட வேண்டாம்.. – மோகன்பாபு

ரஜினியை போல அவரது ரசிகர்களும் நல்லவர்கள்..; அரசியல் சேறு அவர் மீது ஒட்ட வேண்டாம்.. – மோகன்பாபு

rajinikanth mohan babuதமிழக மக்கள் ரஜினியின் அரசியல் வருகையை எதிர்ப்பார்த்த நிலையில் திடீரென அரசியலுக்கு வரவில்லை என்றார் ரஜினி.

இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகருமான மோகன் பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…:

“ரஜினிகாந்த் என் உயிர் நண்பர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அவர் அவரது உடல்நிலை காரணமாக அரசியலில் இறங்கவில்லை என அறிவித்தார்.

இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றாலும், ஒரு நண்பனாகவும், அவரது உடல்நிலையை முழுமையாக அறிந்தவனாகவும், அவர் அரசியலில் இறங்காமல் இருப்பது நல்லது என்று நான் நம்புகிறேன்.

நான் அவரிடம் அரசியல் குறித்து பேசியுள்ளேன். நீ மிகவும் நல்லவன்.

உன்னைப் போன்ற என்னை போன்ற ஆட்களுக்கு அரசியல் ஒத்து வராது.

நாம் உண்மையை அப்பட்டமாகப் பேசுவோம், யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்.

பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடியாது, வாங்கவும் மாட்டோம்.

அரசியலில் இறங்கும் வரை நல்லவன் என்று சொல்பவர்கள் நாளை அரசியலுக்கு வந்தபின் கெட்டவன் என்பார்கள்.

அரசியல் ஒரு சேறு. அந்தச் சேறு உங்கள் மேல் ஒட்டாமல் இருப்பதே நல்லது.

ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் ரஜினிகாந்தைப் போலவே நல்லவர்கள்.

நீங்கள் அனைவரும் எனது நண்பரின் முடிவைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்”.

இவ்வாறு மோகன் பாபு தெரிவித்துள்ளார்.

Telugu actor Mohan Babu Supports Superstar Rajinikanth’s Decision On Political Entry

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *